குறைந்த விலையில் புதிய எலக்ட்ரிக் கார்: தெஸ்லா அறிவிப்பு

ஆனால், மாடல் எஸ் இந்திய மதிப்பில் ரூ.60 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், சிறந்த எலக்ட்ரிக் கார் என்ற பெருமையை பெற்றாலும் விற்பனையில் சோபிக்க முடியவில்லை.
இது பணக்காரர்களின் கார் என்ற முத்திரையை பெற்றுவிட்டது. இந்த நிலையில், நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ற வகையில், புதிய எலக்ட்ரிக் கார் ஒன்றை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த இருப்பதாக தெஸ்லா அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ., எலோன் மஸ்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில்," சொகுசு, பெர்ஃபார்மென்ஸ் கொண்ட எலக்ட்ரிக் காரை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் மாடல் எஸ். ஆனால், அதன் விலை மீதான விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன்.
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு தகுந்த விலையில் புதிய எலக்ட்ரிக் கார் ஒன்றை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளோம். இது நிசான் லீஃப் காரைவிட சிறந்த அம்சங்களை கொண்டிருக்கும்.
சிறந்த, அதேவேளை கைக்கு சரியான விலை கொண்ட எலக்ட்ரிக் காரைத்தான் இந்த உலகம் எதிர்பார்க்கிறது. அதனை பூர்த்தி செய்யும் நோக்குடன் பணியாற்றுகிறோம்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








