லிமிடேட் எடிசன் டொயோட்டா ஃபார்ச்சூனர் அறிமுகம்!
பண்டிகை காலத்தையொட்டி, லிமிடேட் எடிசன் டொயோட்டா ஃபார்ச்சூனர் டிஆர்டி ஸ்போர்ட்டிவோ மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஃபார்ச்சூனரின் கம்பீரத்தை மேலும் கூட்டும் விதமான கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
டிஆர்டி ஸ்போர்ட்டிவோ ஏற்கனவே விற்பனையில் இருக்கிறது. அந்த காரின் லிமிடேட் எடிசனாக இந்த புதிய ஃபார்ச்சூனர் வந்துள்ளது. ஃபார்ச்சூனரை டொயோட்டா ரேஸிங் டெவலப்மென்ட்(டிஆர்டி) அமைப்பு டிசைன் செய்துள்ளது. இடம்பெற்றிருக்கும் அம்சங்கள், விலை விபரத்தை தெரிந்துகொள்ள ஸ்லைடருக்கு வாருங்கள்.

வேரியண்ட்
மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட 4x4 வேரியண்ட்டில் லிமிடேட் எடிசன் கிடைக்கும். வெள்ளை மற்றும் சில்வர் கலர்களில் தேர்வு செய்து கொள்ளலாம்.

விற்பனை
வரும் டிசம்பர் மாதம் வரை மொத்தம் 400 பார்ச்சூனர் எஸ்யூவிகளை விற்பனை செய்ய இருப்பதாக டொயோட்டா அறிவித்துள்ளது.

கூடுதல் ஆக்சஸெரீஸ்கள்
டிஆர்டி சின்னத்துடன் முன்பக்க கிரில், இரட்டை வண்ணம் கொண்ட முன்புறம் மற்றும் பின்புற பம்பர் ஸ்பாய்லர்கள், டிஆர்டி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், ரியர் ஸ்பாய்லர், பின்புறத்தில் டிஆர்டி ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ் ஆகியவை கொண்டுள்ளது.

விலை
ரூ.24.26 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








