மேம்படுத்தப்பட்ட டொயோட்டா இன்னோவா - முழு விபரம்
மேம்படுத்தப்பட்ட டொயோட்டா இன்னோவா இன்று முதல் விற்பனைக்கு வருகிறது. கடந்த மாதம் இந்தோனேஷிய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த மேம்படுத்தப்பட்ட மாடல் இந்திய மார்க்கெட்டிலும் தடம் பதிக்கிறது.
தோற்றத்தில் மாற்றங்கள் உட்பட கூடுதல் அம்சங்களுடன் வந்திருக்கும் புதிய இன்னோவாவின் விலை உள்ளிட்ட தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

தோற்றம்
புதிய முன்பக்க கிரில், மாற்றப்பட்ட ஏர்டேம், பனிவிளக்குகள் அறையை அலங்கரிக்கும் குரோம் பூச்சு என்று முகப்பு மாறியிருக்கிறது.

கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்
பக்கவாட்டில் மெல்லிய கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கிறது.குரோம் மோல்டிங் கூடுதலாக பொருத்தப்பட்டிருக்கிறது.

பின்புறம்
பின்புறத்தில் சிவப்பு பிரதிபலிப்பு பட்டைகளுடன் கூடிய குரோம் பூட் லிட், ரியர் ஸ்பாய்லர் ஆகியவை குறிப்பிட்டு கூறலாம். இசட் என்ற புதிய டாப் வேரியண்ட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

மர வேலைப்பாடு
மர வேலைப்பாடு கொண்ட ஆர்ம்ரெஸ்ட் கொஞ்சம் அழகு கூட்டப்பட்டுள்ளது.

கியர் நாப்
கியர் நாபிலும் மரவேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்ட்ரல் கன்சோல்
சென்ட்ரல் கன்சோலில் மரவேலைப்பாடுகளுடன், சில்வர் பினிஷிங் செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளது.

லெதர் இருக்கை
இரட்டை வண்ண லெதர் இருக்கைகளும் கவரும் அம்சம். 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

விலை விபரம்
டீசல் மாடலின் பேஸ் வேரியண்ட் ரூ.9.77 லட்சம் முதல் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இசட் டாப் வேரியண்ட் ரூ.15.06 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, பெட்ரோல் மாடல் ரூ.10.20 லட்சம் முதல் ரூ.13.69 லட்சம் வரையிலான டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








