இன்னோவாவுக்கு குரோம் பூச்சு அலங்கார பொருட்கள் அறிமுகம்!
கடந்த 2005ம் ஆண்டு இந்தியாவில் டொயோட்டா இன்னோவா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் சுணக்கமான இருந்து பின்னர் இன்னோவாவின் விற்பனை பிக்கப் ஆனது.
இந்த நிலையில், இந்தியாவில் இதுவரை 4 லட்சம் வாடிக்கையாளர்களை இன்னோவா பெற்றுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக குரோம் பூச்சு கொண்ட கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

கூடுதல் தொகை
ரூ.31,000 கூடுதலாக செலுத்தி இந்த குரோம் எடிசன் ஆக்சஸெரீஸ் பேக்கை டீலர்களில் பெற்றுக் கொள்ளலாம் என டொயோட்டா தெரிவித்துள்ளது.

வேரியண்ட்
பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் ஜிஎக்ஸ் வேரியண்ட்டுக்கு மட்டுமே இந்த ஸ்பெஷல் குரோம் கிட் கிடைக்கும். இதுதவிர, சில ஆக்சஸெரீஸ்களை விஎக்ஸ் டாப் வேரியண்ட்டிலும் பொருத்த முடியும்.

குரோம் ஆக்சஸெரீஸ் பேக்
குரோம் பூச்சு கொண்ட முகப்பு கிரில்
குரோம் பூச்சுடன் வீல் ஆர்க்
குரோம் டோர் ஹேண்டில்
குரோம் பூச்சுடன் பம்பர் புரொடெக்டர்
பின்புறத்தில் பதிப்பதற்கான குரோம் லிட்
குரோம் பூச்சுடன் மஃப்ளர் கட்டர்
குரோம் பூச்சுடன் இண்டிகேட்டர்
குரோம் பூச்சுடன் கூடிய விங் மிரர்கள்
ஆகியவை இந்த ஸ்பெஷல் குரோம் பேக்கில் கூடுதலாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








