புதிய 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் ஃபார்ச்சூனர்!

கடந்த 2009ம் ஆண்டு ஃபார்ச்சூனர் எஸ்யூவியை டொயோட்டா அறிமுகம் செய்தது. அந்த நாள் முதல் இன்று வரை பிரிமியம் எஸ்யூவி மார்க்கெட்டின் தலைவனாக திகழ்கிறது.
இதுவரை 41,000 பார்ச்சூனர் கார்களை டொயோட்டா விற்பனை செய்துள்ளது. ஃபார்ச்சூனர் தற்போது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடல்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆட்டோமேட்டிக் மாடல் 4 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரூ.22.30 லட்சம் விலையில் புதிய ஆட்டோமேட்டிக் ஃபார்ச்சூனர் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய ஆட்டோமேட்டிக் ஃபார்ச்சூனருக்கு வரும் 18ந் தேதி முதல் முன்பதிவு துவங்குகிறது.


Click it and Unblock the Notifications








