ஹைபிரிட் டொயோட்டா கேம்ரி அறிமுகம் - முழு விபரம்!!

ரூ.29.75 லட்சம் ஆரம்ப விலையில் ஹைபிரிட் கேம்ரி காரை டொயோட்டா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்தியாவிலேயே இந்த கார் அசெம்பிள் செய்யப்பட உள்ளது. பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் துணையுடன் குறைந்த கார்பன் எமிசன் கொண்ட இந்த கார் அதிக மைலேஜையும் தரும் என்பது இதன் சிறப்பம்சம்.

ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் டொயோட்டா முன்னோடியாக திகழ்வதாகவும், எனவே இந்திய மார்க்கெட்டிலும் முன்னோடியாகவும் முயற்சியாக இந்த காரை விற்பனைக்கு கொண்டு வந்திருப்பதாகவும், டொயோட்டாவின் நிர்வாக இயக்குனர் ஹிரோஷி நககாவா தெரிவித்துள்ளார்.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 2.5 லிட்டர் பெல்ட்லெஸ் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறு. இதுதவிர, நிக்கல் ஹைட்ரேட் பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் மோட்டாரும் இருக்கிறது. இரண்டும் சேர்ந்த அதிகபட்சமாக 205 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும்.

 மைலேஜ்

மைலேஜ்

இந்த கார் லிட்டர் கணக்கீட்டின்படி 19.16 கிமீ மைலேஜ் தரும் என்று டொயோட்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஒரு கிலோமீட்டருக்கு 122.8 கிராம் என்ற அளவில் கார்பனை வெளியிடும்.

 டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

ஹைபிரிட் கேம்ரியில் எலக்ட்ரானிக் கன்ட்ரோல் சிவிடி டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது. இது சிறந்த பெர்ஃபார்மென்ஸ், குறைந்த எரிபொருள் செலவினம் மற்றும் குறைந்த அதிர்வுகள் கொண்டதாக இருக்கும்.

விலை

விலை

பெட்ரோல் மாடலைவிட ரூ.10 லட்சம் கூடுதலான விலையில் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.29.75 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த கார் விற்பனை செய்யப்படும்.

இலக்கு

இலக்கு

மாதத்திற்கு 10 ஹைபிரிட் கேம்ரி கார்களை விற்பனை செய்ய டொயோட்டா திட்டமிட்டுள்ளது. ஆனால், வாடிக்கையாளர் மத்தியில் இந்த காருக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து உற்பத்தி நிர்ணயிக்கப்படும்.

பிடதியில் உற்பத்தி

பிடதியில் உற்பத்தி

பெங்களூர் அருகே பிடதியில் உள்ள இரண்டாவது ஆலையில் இந்த ஹைபிரிட் கார் தனி உற்பத்தி பிரிவில் இருந்து உற்பத்தி செய்யப்படும். உலக அளவில் 9வது இடமாக ஹைபிரிட் கேம்ரிகார் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

முன்பதிவு துவக்கம்

முன்பதிவு துவக்கம்

முன்பதிவு மற்றும் டெலிவிரி ஆகியவை இன்று முதல் துவங்கப்படுவதாக டொயோட்டா தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 28, 2013, 14:58 [IST]
English summary
Japanese car maker Toyota has launched all new hybrid Camry in India at INR 29.75 lakhs.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+