கூடுதல் சிறப்பம்சங்களுடன் டொயோட்டா இன்னோவா விற்பனைக்கு வந்தது!

எம்பிவி கார் மார்க்கெட்டில் விற்பனையில் பீடு நடை போட்டு வரும் டொயோட்டா இன்னோவா கார் சமீபத்தில் கூடுதல் சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தமிழக நகரங்களில் இந்த புதிய டொயோட்டா இன்னோவா காரின் ஆன்ரோடு விலை விபரங்களை கீழே இணைப்பை சொடுக்கியவுடன் தெரிந்துகொள்ளலாம். அனைத்து வேரியண்ட்டுகளின் ஆன்ரோடு விபரங்களையும் ஸ்லைடரை கிளிக் செய்து சில வினாடிகளில் தெரிந்துகொள்ள முடியும்.

புதிய டொயோட்டா இன்னோவா காரின் திருப்பூர் ஆன்ரோடு விலை விபரம்!

இந்தியாவில் வர்த்தகத்தை துவங்கி 10 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதத்தில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய இன்னோவா மற்றும் ஃபார்ச்சூனர் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது டொயோட்டா கார் நிறுவனம்.

புதுப்பொலிவு கொடுகக்கப்பட்டிருக்கும் இன்னோவா கார் வெளிப்புறத்தில் சிறிய மாற்றங்களுடனும், உட்புறத்தில் கூடுதல் வசதிகளுடன் வந்துள்ளது. புதிய வடிவமைப்பிலான இருக்கைகள், டச் ஸ்கிரீன் திரை, மூன்றாவது வரிசை இருக்கை பயணிகளுக்கான ரூஃப் ஏசி வென்ட் ஆகியவை புதிய அம்சங்கள். மேலும், டீசல் மாடல் லிட்டருக்கு 13.31 கிமீ மைலேஜ் தரும் என டொயோட்டா உறுதியளிக்கிறது.

Innova

இன்னோவாவின் வெளிப்புறத்தில் புதிய கிரில், புதிய அலாய் வீல்கள் போன்றவை குறிப்பிடத்தக்க அம்சங்கள். இன்டிரியரை பொறுத்தவரை மரவேலைப்பாட்டுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், மடக்கும் வசதி கொண்ட 2வது மற்றும் 3வது வரிசை இருக்கைகள் ஆகியவை குறிப்பிட்டு கூறலாம்.

தற்போது டிரைவர் மற்றும் முன்இருக்கை பயணிக்கு எஸ்ஆர்எஸ் ஏர்பேக் நிரந்தரமான பாதுகாப்பு வசதியாக அளிக்கப்படுகிறது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட ஃபார்ச்சூனர் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Fortuner

புதுப்பொலிவுடன் வந்திருக்கும் புதிய இன்னோவா கார் ரூ.10.51 லட்சம் முதல் ரூ.15.80 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். இதேபோன்று, ஃபார்ச்சூனர் எஸ்யூவி ரூ.24.17 லட்சம் முதல் ரூ.26.49 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 6, 2015, 10:42 [IST]
English summary
Toyota is celebrating their tenth anniversary in Indian market. To mark this occasion they have launched a refreshed Innova and Fortuner models. Both these vehicles get significant updates to their interior and minor changes externally.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+