புதிய மினி எஸ்யூவி, சிறிய கார்களை களமிறக்க டொயோட்டா திட்டம்!

Toyota Rush
புதிய மினி எஸ்யூவி மற்றும் சிறிய ரக கார்களை அறிமுகம் செய்வதற்கு டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

டொயோட்டாவிற்கு வலு சேர்த்து வருவதே இன்னோவாதான். ஆனால், கடந்த மாதம் இன்னோவாவின் விற்பனை திடீரென அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது.

இதனை ஜீரணிக்க முடியாத நிலையில், டொயோட்டா தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட மார்க்கெட்டுகளில் மினி எஸ்யூவி கார்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பும், சிறிய ரக கார்களின் விற்பனையும் டொயோட்டாவை மிகவும் சிந்திக்க வைத்துள்ளது.

இதுகுறித்து டொயோட்டாவின் நிர்வாக அதிகாரி சட்டோஷி ஓகிஷோ கூறியதாவது," இந்தியாவில் எங்களது போர்ட்போலியோவில் சிறிய ரக கார்களில் லிவா மட்டுமே உள்ளது. இதேபோன்று, வேகமாக வளர்ந்து வரும் மினி எஸ்யூவி மார்க்கெட்டிலும் எங்களுக்கு மாடல் இல்லை.

எதிர்காலத்தில் ஸ்திரமான மார்க்கெட் பங்களிப்பை பெறுவதற்கு சிறிய ரக கார்களும், மினி எஸ்யூவியும் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எட்டியோஸ் போன்றே இந்திய மார்க்கெட்டுக்கான சிறிய கார்களை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலித்து வருகிறோம்.

ஏனெனில், வேகமாக வளர்ந்து வரும் இந்திய மார்க்கெட்டில் எங்களது வர்த்தகத்தை வலுவாக்கிக் கொள்ள விரும்புகிறோம். மேலும், அரசின் எரிபொருள் திறன் கொள்கை மற்றும் இறக்குமதி வரிக் கொள்கைகளில் தெளிவும், திடமும் இல்லை.

இதனால், இந்தியாவில் டீசல் எஞ்சின் தொழிற்சாலை அமைப்பதற்கான திட்டங்களை ஒத்தி வைத்துள்ளோம். அரசாங்கத்தின் முடிவுகளை அறிந்து கொண்ட பின்னரே நாங்கள் தெளிவாக முடிவு எடுக்க முடியும்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 23, 2013, 15:28 [IST]
English summary
Japanese car maker Toyota is planning to launc more small cars and entering fast growing segments like compact SUVs in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+