கூடுதல் வசதிகளை கொடுத்து கார் விலையை உயர்த்திய ஃபோக்ஸ்வேகன்

ரூபாய் மதிப்பு சரிவு எதிரொலியால் பல்வேறு நிறுவனங்களும் கார் விலையை உயர்த்தி வந்த நிலையில், ஃபோக்ஸ்வேகன் சில கூடுதல் வசதிகளை கொடுத்து இரண்டு கார்களின் விலையை உயர்த்தியுள்ளது.
போலோ கார் தற்போது ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் வசதியுடன் கிடைக்கிறது. இதேபோன்று, ஆர்சிடி 320 சிஸ்டம் கொண்ட ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.
ஆக்ஸ் இன் போர்ட், எஸ்டி கார்டு ரீடர், யுஎஸ்பி போர்ட் மற்றும் புளூடூத் வசதிகளை போலோ மியூசிக் சிஸ்டம் கொண்டிருக்கிறது. வென்ட்டோ டாப் வேரியண்ட்டில் மட்டுமே கிடைத்து வந்த கிளைமேட் கன்ட்ரோல் ஏசி தற்போது அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டான்டர்டு அம்சமாக இருக்கும்.
வென்ட்டோவின் விலை 2.27 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையுடன் கணக்கிட்டால் ரூ.22.500 வரை வென்ட்டோ டாப் வேரியண்ட் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் போலோ, வென்ட்டோ கார்களின் வேரியண்ட்களின் விலை ரூ.10,000 முதல் ரூ.22,500 வரை அதிகரிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








