ஃபோக்ஸ்வேகன் கிராஸ்போலோ அறிமுகம் - அம்சங்கள் விபரம்

மினி எஸ்யூவி கார்களுக்கு போட்டியான அம்சங்களுடன் கூடிய போலோ ஹேட்ச்பேக் காரை ஃபோக்ஸ்வேகன் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. சாகச விரும்பிகள் மற்றும் இளைய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த மாடலை ஃபோக்ஸ்வேகன் களமிறக்கியுள்ளது.

கிராஸ் போலோ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கார் சாதாரண மாடலைவிட ஆஃப்ரோடு அம்சங்கள் நிறைந்ததாகவும், கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாகவும் வந்திருக்கிறது. கடந்த ஸ்கோடா நிறுவனம் அறிமுகம் செய்த ஃபேபியா ஸ்கவுட் காரில் இடம்பெற்றிருந்த அம்சங்களுடன் மறு பதிப்பாக இந்த காரை ஃபோக்ஸ்வேகன் அறிமுகம் செய்துள்ளது.

 எஞ்சின்

எஞ்சின்

டீசல் மாடலில் மட்டுமே கிடைக்கும். 75 பிஎஸ் பவரையும், 180 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைந்து செயல்புரியும்.

வெளிப்புற அம்சங்கள்

வெளிப்புற அம்சங்கள்

  • குரோம் தீட்டப்பட்ட முன்பக்க கிரில்
    • முன்பக்கம், பின்பக்கம் புதிய பம்பர்
      • 5 ஸ்போக் அலாய் வீல்கள்
        • வீல் ஆர்ச்சுகள் மீது கருப்பு நிறத்திலான வீல் ஆர்ச் கவர் மற்றும் பக்கவாட்டில் ராக்கெர் பேனல்கள்
          • கிளாடிங்
            • பின்புற கதவில் கிராஸ் போலோ டிகெல்ஸ்
              • கருப்பு வண்ண பூச்சுடன் கூடிய ஹேலஜன் ஹெட்லைட்டுகள்
                • வெப்பத்தை தடுக்கும் நுட்பம் கொண்ட வைன்ட்ஸ்கிரீன், பக்கவாட்டு மற்றும் பின்புற கண்ணாடிகள்
                  • 6 ஆண்டுகள் துருப்பிடிக்காத வாரண்டியுடன் கூடிய பாடி ஆகியவை இதன் வெளிப்புற சிறப்பம்சங்கள்.
                  • உட்புற அம்சங்கள்

                    உட்புற அம்சங்கள்

                    • கருப்பு வண்ணத்திலான லிவோன் அப்ஹோல்ஸ்டரி
                      • தோல் உறை சூழப்பட்ட கியர் நாப் மற்றும் ஸ்டீயரிங் வீல்
                        • 1.5 லிட்டர் வாட்டர் பாட்டில் கப் ஹோல்டர்கள்
                          • கிளவ் பாக்ஸில் சன் கிளாஸ் வைப்பதற்கான தனி அறை
                            • 12 வோல்ட் சார்ஜர்
                              • லக்கேஜ் கம்பார்ட்மென்ட் மற்றும் பார்சல் டிரே
                              • வசதிகள்

                                வசதிகள்

                                • தூசுகளை தடுப்பு ஃபில்டருடன் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி
                                  • யுஎஸ்பி,புளுடூத், 4 ஸ்பீக்கர்கள் கொண்ட 2 டின் மியூசிக் சிஸ்டம்
                                    • மல்டி ஃபங்ஷன் திரை
                                      • மல்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல்
                                        • எலக்ட்ரானிக் பவர் ஸ்டீயரிங்
                                          • டில்ட் ஸ்டீயரிங்
                                            • தடம் மாறுவதை எச்சரிக்கும் இன்டிகேட்டர்
                                              • உயரத்தை கூட்டி குறைக்கும் வசதியுடன் டிரைவர் இருக்கை
                                                • வேகத்தை உணர்ந்து மூடும் தானியங்கி கதவுகள்
                                                  • ரிமோட் கன்ட்ரோல் வசதியுடன் சென்ட்ரல் லாக்கிங்
                                                    • எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் வியூ கண்ணாடிகள்
                                                      • பார்க்கிங் சென்சார்
                                                      • பாதுகாப்பு அம்சங்கள்

                                                        பாதுகாப்பு அம்சங்கள்

                                                        • ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்
                                                          • டிரைவர் மற்றும் சக பயணிக்கான டூயல் ஏர்பேக்ஸ்
                                                            • எலக்ட்ரானிக் எஞ்சின் இம்மொபைலைசர்
                                                              • 3 பாயிண்ட் சீட் பெல்ட்டுகள்
                                                                • கூடுதல் பிரேக் லைட்
                                                                  • முன்பக்கம் டிஸ்க் பிரேக்குகள்
                                                                    • பனிவிளக்குகள்
                                                                      • எமர்ஜென்ஸி எக்ஸிட்
                                                                      • ஆகிய பாதுகாப்பு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

                                                                        விலை

                                                                        விலை

                                                                        மினி எஸ்யூவி ஆக்சஸெரீஸ்கள், கூடுதல் வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் வந்திருக்கும் புதிய கிராஸ் போலோ கார் ரூ.7.75 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். சாதாரண போலோ டீசல் மாடலின் டாப் வேரியண்ட்டை விட ரூ.65,000 கூடுதலான விலையில் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 22, 2013, 15:05 [IST]
English summary
Volkswagen, Europe's largest carmaker announced the launch of the new Cross Polo today. With this launch, India's leading premium hatchback gets bold, sporty design flair, which will appeal to customers with active lifestyles and a taste for adventure.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+