ரூ.6.27 லட்சம் விலையில் போலோ ஸ்போர்ட்ஸ் அறிமுகம்!

போலோ எஸ்ஆர்(ஸ்போர்ட்ஸ் ரேஸர்) என்ற பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய போலோ பாடி ஸ்கர்ட்ஸ், ரூஃப் ஸ்பாய்லர், இஞ்ச் அலாய் வீல் மற்றும் குரோம் பூச்சுடன் கூடிய எக்ஸாஸ்ட் ஆகிய அம்சங்களை கொண்டிருக்கிறது.
இதுதவிர, ஸ்போர்ட்ஸ் ரேஸர் என்ற பேட்ஜ் காரின் சி பில்லர்கள் மற்றும் பின்புற டெயில் கேட்டிலும் பொறிக்கப்பட்டுள்ளது. அப்படியே உள்ளே சென்றால், லிவோன் சீசெல் கிளாத் கொண்ட அப்ஹோல்ஸ்டரி நம் மனதை கவர்க்கிறது.
மேலும், கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட்மென்ட் கொண்ட ரியர் வியூ மிரர், ரியர் பார்க்கிங் சென்சார், அட்ஜெஸ்ட்டபிள் ஸ்டீயரிங் வீல் மற்றும் டிரைவர் இருக்கை ஆகியவை ஸ்டான்டர்டூ ஆக்சஸெரீகளாக இருக்கிறது.
இதுதவிர, ஸ்பீக்கர்கள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆர்சிடி 320 2 டின் மியூசிக் சிஸ்டம் யுஎஸ்பி போர்ட், ஆக்ஸ் போர்ட் மற்றும் புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. டூயல் ஏர்பேக்ஸ் மற்றும் இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை புதிய டாப் வேரியண்ட் போலோவின் நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








