ரூ.9.99 லட்சத்தில் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோவின் புதிய மாடல் அறிமுகம்

By Saravana

ரூ.9.99 லட்சம் விலையில் ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ காரின் புதிய பெட்ரோல் மாடல் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வென்ட்டோ டிஎஸ்ஐ என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய பெட்ரோல் மாடல் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டது. மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் சிறந்த ஆட்டோமேட்டிக் காராக வந்திருக்கும் இந்த கார் குறித்த கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

மாற்றங்கள்

மாற்றங்கள்

சாதாரண வென்ட்டோவுக்கும், இந்த புதிய வென்ட்டோ மாடலுக்கும் தோற்றத்தில் எந்தவித வித்தியாசங்களும் இருக்காது. அதேவேளை, இந்த மாடலை வேறுபடுத்தும் விதத்தில் பின்புறத்தில் டிஎஸ்ஐ பேட்ஜ் பொறிக்கப்பட்டிருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

சாதாரண வென்ட்டோவில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், புதிய வென்ட்டோ டிஎஸ்ஐ மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் டர்போசார்ஜர் உதவியுடன் 105 பிஎஸ் பவரையும், 175 என்எம் டார்க்கையும் அளிக்கும் திறன் கொண்டது. போலோ ஜிடியில் பொருத்தப்பட்டிருக்கும் அதே பெட்ரோல் எஞ்சின்தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

போலோ ஜிடி டிஎஸ்ஐ மாடலை போன்றே இந்த புதிய வென்ட்டோவிலும் 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆற்றல் வெளிப்படுத்துவதிலும், எரிபொருள் சிக்கனத்திலும் சிறப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்சங்கள்

அம்சங்கள்

புதிய வென்ட்டோ ஹைலைன் வேரியண்ட்டில் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஏபிஎஸ், ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு சிஸ்டம், ஒருங்கிணைந்த வசதிகள் அடங்கிய மியூசிக் சிஸ்டம் ஆகியவை நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

 சிறந்த மாடல்

சிறந்த மாடல்

ரூ.9 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரையிலான மிட்சைஸ் ஆட்டோமேட்டிக் செடான்களில் மிகச்சிறப்பான கார் மாடலாக இது இருக்கும் என கருதப்படுகிறது. ஹோண்டா சிட்டியின் ஆட்டோமேட்டிக் மாடல் விற்பனை நிறுத்தப்பட்டிருப்பதும் இதற்கு கூடுதல் பலத்தை தரும்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 10, 2013, 13:17 [IST]
English summary
Volkswagen India launched the all new a new petrol variant of Vento C segment sedan today, called Vento TSI.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+