புதிய பவர்ஃபுல் போலோவை அறிமுகப்படுத்திய ஃபோக்ஸ்வேகன்

போலோ ஜிடி என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய காரில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இதனுடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் துணைபுரியும்.
புதிய போலோவின் பெட்ரோல் எஞ்சின் டைரக்ட் இன்ஜெக்ஷன் தொழில்நுட்பம் கொண்டது. இந்த செக்மென்ட் கார்களில் இது புதிய தொழில்நுட்பம் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய போலோவின் பெட்ரோல் எஞ்சின் 105 பிஎஸ் பவரையும், 175 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். சோதனைநிலைகளில் லிட்டருக்கு 17.2 கிமீ மைலேஜ் தருவதாக அராய் சான்றளித்துள்ளது.
கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, ஜிடி கிரில், 15 இஞ்ச் அலாய் வீல்கள், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள், 2 டின் மியூசிக் சிஸ்டம் ஆகியவை புதிய போலோவுக்கு வலுசேர்க்கின்றன.
இஎஸ்பி, ஏபிஎஸ் பிரேக், டூயல் ஏர்பேக்ஸ் மற்றும் ஹில் ஹோல்டு உள்ளிட்ட பாதுகாப்பு தொழில்நுட்ப அம்சங்களுடன் புதிய போலோ வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








