ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வந்தது!
ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. போலோ ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இருந்த அதே டீசல் எஞ்சின் மற்றும் பெட்ரோல் மாடலிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய விசேஷமாக இதில் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கொண்ட டீசல் மாடலாக விற்பனைக்கு வந்துள்ளது. கூடுதல் தகவல்கள் மற்றும் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

மாற்றங்கள்
ஹெட்லைட்டுகள், பம்பர் டிசைன் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய 15 இஞ்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இன்டிரியர்
போலோ ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இருந்த அதே 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

எஞ்சின்
1.6 லிட்டரிலிருந்து 1.5 லிட்டராக மாற்றப்பட்ட புதிய டிடிஐ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 103 பிஎச்பி ஆற்றலையும், 250 என்எம் டார்க்கையும் வழங்கும். இது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும், மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்சினுடன் 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் கொண்ட மாடலும், 1.6 லிட்டர் எம்பிஐ மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் கிடைக்கும்.

பெட்ரோல் மாடல் விலை விபரம்
வென்ட்டோ 1.6லி எம்பிஐ பெட்ரோல் மேனுவல்: 7.44 லட்சம் முதல் ரூ.8.87 லட்சம் வரை
வென்ட்டோ 1.2லி டிஎஸ்ஐ 7 ஸ்பீடு டிஎஸ்ஜி: ரூ.9.35 லட்சம் முதல் ரூ.9.92 லட்சம் வரை

டீசல் மாடல் விலை விபரம்
வென்ட்டோ 1.5 லி டிடிஐ டீசல் மேனுவல்: ரூ.8.57 லட்சம் முதல் ரூ.9.90 லட்சம் வரை
வென்ட்டோ 1.5லி டிடிஐ 7 ஸ்பீடு டிஎஸ்ஜி: ரூ.10.49 லட்சம் முதல் ரூ.10.94 லட்சம் வரை
அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டது.

2வது ஆட்டோமேட்டிக் மாடல்
மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹூண்டாய் வெர்னாவுக்கு அடுத்து, ஃபோக்ஸ்வேகன் வென்ட்டோ ஃபேஸ்லிஃப்ட் மாடல் டீசல் ஆட்டோமேட்டிக் கார் மாடலாக வந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications








