ரூ.13.70 லட்சத்தில் புதிய ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா அறிமுகம்
கூடுதல் அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் மூன்று வேரியண்ட்டுகளில் வந்திருக்கும் புதிய ஜெட்டாவில் இருக்கும் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஹெட்லைட்
டாப் வேரியண்ட்டில் எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள், ஸினான் ஹெட்லைட்டுகள், ஹெட்லைட்டை சுத்தம் செய்யும் வாஷர் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன.

வேரியண்ட்டுகள்
டிரென்ட்லைன், கம்போர்ட்லைன் மற்றும் ஹைலைன் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும். ஸினான் ஹெட்லைட் மற்றும் ஹெட்லைட் வாஷர்கள் நிரந்தர அம்சமாக இடம்பெற்றிருக்கும். பேஸ் மற்றும் மிட் வேரியண்ட்டுகளில் 16 இஞ்ச் செடோனா அலாய் வீல்களுடன் கிடைக்கிறது.

கிளைமேட் கன்ட்ரோல்
மூன்று வேரியண்ட்டுகளிலும் டியூவல் ஸோன் கிளைமேட் கன்ட்ரோல் வசதி நிரந்தரமாக இடம்பெற்றுள்ளது.

எஞ்சின்
எஞ்சினில் மாறுதல்கள் இல்லை. முந்தைய மாடலில் இடம்பிடித்த அதே 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் கிடைக்கும். 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும். தவிர, 2.0 லிட்டர் டீசல் மாடலில் 6 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடலும் விற்பனைக்கு கிடைக்கும்.

மைலேஜ்
பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 14.69 கிமீ மைலேஜையும், மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட டீசல் மாடல் லிட்டருக்கு 19.33 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் டீசல் மாடல் லிட்டருக்கு 16.96 கிமீ மைலேஜையும் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை விபரம்
ரூ.13.70 லட்சம் முதல் ரூ.19.43 லட்சம் வரையிலான விலையில் புதிய ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








