டஸ்ட்டர் போட்டியாளர் சுஸுகியின் எஸ் கிராஸ் உற்பத்திக்கு ரெடி!
கான்செப்ட் நிலையிலிருந்து உற்பத்தி நிலையை எட்டியிருக்கிறது சுஸுகியின் கிராஸ்ஓவர் எஸ்யூவி காரான எஸ் கிராஸ். இந்த கார் இந்தியா வருவதற்கான வாய்ப்புகள் நெருங்கி வருகிறது. கடந்த ஆண்டு பாரீஸ் மோட்டார் ஷோவில்தான் இந்த புதிய கார் கான்செப்ட் மாடலாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த காரின் உற்பத்தி நிலையை எட்டியிருக்கும் டீஸர் புகைப்படத்தினை சுஸுகி வெளியிட்டிருக்கிறது. மார்ச் மாதம் நடைபெறும் ஜெனீவா மோட்டார் ஷோவில் உற்பத்தி நிலையை எட்டியிருக்கும் இந்த கார் மாடலை பார்வைக்கு அறிமுகம் செய்ய உள்ளது சுஸுகி.
ஐரோப்பிய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் எஸ்எக்ஸ்4 கிராஸ்ஓவர் ரக காருக்கு மாற்றாக இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்தியாவிலும் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய மாருதி நிறுவனம் முடிவு செய்துள்ளது. எனவே, சுஸுகி எஸ் கிராஸ் இந்தியா வருவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கிறது. எல்இடி விளக்குகள், தனித்துவமான பச்சை வண்ணம் ஆகியவை தற்போது எஸ் கிராஸ் காருக்கு அழகு சேர்க்கிறது. ஸ்லைடரின் முதல் படத்தில் டீஸர் படத்தினையும், அடுத்தடுத்து கான்செப்ட மாடல் படங்களையும் காணலாம்.

சுஸுகி எஸ் கிராஸ் ஓவக் டீஸர்

சுஸுகி எஸ் கிராஸ் ஓவக்

சுஸுகி எஸ் கிராஸ் ஓவக்

சுஸுகி எஸ் கிராஸ் ஓவக்

சுஸுகி எஸ் கிராஸ் ஓவக்

சுஸுகி எஸ் கிராஸ் ஓவக்



Click it and Unblock the Notifications








