ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டை வெல்ல ஓர் எளிய வாய்ப்பு!
இந்த ஆண்டின் அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் மாடல் ஈக்கோஸ்போர்ட் மினி எஸ்யூவி. இதோ, அதோ என ஈக்கோஸ்போர்ட் அறிமுகத்தை ஃபோர்டு தள்ளி போட்டுக்கொண்டே வருகிறது.
இந்த நிலையில், ஈக்கோஸ்போர்ட்டின் அறிமுகத்துக்கு முன்னதாக அதனை பிரபலப்படுத்தும் பணிகளை ஃபோர்டு துவங்கியிருக்கிறது. இதற்காக, புதிய போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. டிஸ்கவர் யுவர் சிட்டி என்ற பெயரில் உங்கள் நகரத்தை கண்டுபிடியுங்கள் என்ற தலைப்பில் இந்த போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள், தாங்கள் வசிக்கும் நகரத்தில் ஒரு இடத்தை தேர்வு செய்து கொண்டு அந்த இடத்தை ஈக்கோஸ்போர்ட்டில் எவ்வாறு எளிதாக சென்றடைய முடியும் என்பதை விவரிக்க வேண்டும்.
இதுதொடர்பாக, சமூக வலைதளங்களில் நடைபெறும் ஓட்டெடுப்பில் உங்களுக்காக நண்பர்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். அதிகபட்ச வாக்குகளை பெறுபவர் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் ஈக்கோஸ்போர்ட்டை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
இதுதவிர, இந்த போட்டியாளர்களில் ஒருவர் ஈக்கோஸ்போர்ட்டை வெல்ல முடியும். அத்தோடு, டிஸ்கவர் யுவர் சிட்டி தொடர்பான டிவி ஷோவிலும் தோன்றும் வாய்ப்பையும் பெற முடியும்.


Click it and Unblock the Notifications








