இன்ஸ்டாகிராமில் லைவ் செய்து கொண்டு காரில் பறந்த மாணவர் பலி...அதிவேகத்தை தவிர்ப்பது எப்படி?
சீட் பெல்ட் அணியாமல், மிக அதிக வேகத்தில் காரை ஓட்டி சென்ற இன்ஜினியரிங் மாணவர் உயிரிழந்தார். அதிக வேகத்தில் கார் ஓட்டுவதை இன்ஸ்டாகிராமில் லைவ்-ஆக ஒளிபரப்பி கொண்டிருந்த அவரது உறவினர் படுகாயம் அடைந்தார்.
சீட் பெல்ட் அணியாமல், மிக அதிக வேகத்தில் காரை ஓட்டி சென்ற இன்ஜினியரிங் மாணவர் உயிரிழந்தார். மிக அதிக வேகத்தில் கார் ஓட்டுவதை இன்ஸ்டாகிராமில் லைவ்-ஆக ஒளிபரப்பி கொண்டிருந்த அவரது உறவினர் படுகாயம் அடைந்தார். இதுபற்றிய செய்தியை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

விதிகளை மீறிய புனே மாணவர்கள்
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர்கள் சுபம் ஜாதவ், ஹரிஸ்கேஷ் பவார். இருவரும் உறவினர்கள். இதில், சுபம் ஜாதவுக்கு 20 வயது ஆகிறது. அவர் இன்ஜினியரிங் மாணவர். ஹரிஸ்கேஷ் பவாருக்கு 18 வயது ஆகிறது. அவர் பி.காம்., முதலாமாண்டு படித்து வருகிறார்.

புனேவுக்கு அருகில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாத் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இருவரும் காரில் சென்று கொண்டிருந்தனர். கார் மணிக்கு 120 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட வேகத்தில் பறந்து கொண்டிருந்தது.

சுபம் ஜாதவ் காரை ஓட்டினார். அவரின் உறவினரான ஹரிஸ்கேஷ் பவார், அந்த மின்னல் வேக ரெய்டை, இன்ஸ்டாகிராமில் லைவ்-ஆக ஒளிபரப்பி கொண்டிருந்தார். அப்போது சுபம் ஜாதவ் சீட் பெல்ட்டும் அணியவில்லை.

இதனிடையே மின்னல் வேகத்தில் பறந்ததால், டிரைவர் சுபம் ஜாதவின் கட்டுப்பாட்டை கார் இழந்தது. பின்னர் அங்கிருந்த டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் சுபம் ஜாதவ் உயிரிழந்தார். ஹரிஸ்கேஷ் பவார் படுகாயம் அடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி முழுவதுமாக சேதம் அடைந்து விட்டது. அத்துடன் டிரைவரின் உயிரையும் உடனடியாக பறித்து விட்டது.

விபத்து நடக்கும் ஒரு நொடிக்கு முன்பு வரை கூட சுபம் ஜாதவ் சிரித்து கொண்டிருந்தார். ஆனால் ஒரு நொடியில் எல்லாம் மாறிவிட்டது.

ஹரிஸ்கேஷ் பவாரால் எடுக்கப்பட்ட வீடியோ, சுபம் ஜாதவ் சிரித்து கொண்டிருப்பதை காட்டுகிறது. அத்துடன் கார் 120 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட வேகத்தில் சென்று கொண்டிருப்பதை ஸ்பீடோமீட்டர் டிஸ்ப்ளே செய்ததையும் அந்த வீடியோ வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

இதனிடையே சுபம் ஜாதவ் லைசென்ஸ் வைத்திருந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மிக அதிக வேகம், சீட் பெல்ட் அணியாதது என போக்குவரத்து விதிமுறைகளை மீறியதே, சுபம் ஜாதவ்வின் வாழ்க்கை கண்ணிமைக்கும் நேரத்தில் முடிவுக்கு வர காரணமாகி விட்டது.

அதிவேகத்தை எப்படி தவிர்க்கலாம்?
மிக அதிக வேகமாக செல்லாமல், இதுபோன்ற விபத்துக்களை எப்படி தவிர்க்கலாம்? என்பது குறித்து சில டிப்ஸ்களை இனி வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

உங்கள் காரில் க்ரூஸ் கண்ட்ரோல் ஆப்ஷன் இருந்தால் அதை பயன்படுத்துங்கள். இதன்மூலம் குறிப்பிட்ட வேகத்தை செட் செய்து கொண்டு காரை நிதானமாக ஓட்ட முடியும்.

காரின் ஸ்பீடோமீட்டரை அவ்வப்போது பார்த்து கொள்ளுங்கள். ஒரு வேளை உங்களையும் அறியாமல் மிக அதிக வேகமாக சென்றால், உடனடியாக வேகத்தை குறைத்து கொள்ள முடியும்.

ஏதாவது ஒரு வேலை தொடர்பாக வெளியே செல்கிறோம். அதற்குதான் காரை பயன்படுத்துகிறோம். அந்த வேலைக்கு சற்று முன் கூட்டியே புறப்படுங்கள். போதிய நேரம் இல்லாமல் வேக வேகமாக புறப்படுவதால்தான், மிக அதிக வேகத்தில் சென்று விபத்தில் சிக்கி கொள்ள நேரிடுகிறது.

வாகனத்தை ஓட்டுவதற்கு முன்பாக உங்களை சற்று ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். பதற்றமாக இருக்க வேண்டாம்.

ஒவ்வொரு சாலைகளிலும், எந்த வேகத்தில் செல்ல வேண்டும் என்பது
குறித்த போர்டு வைக்கப்பட்டிருக்கும். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் வேகத்தை விட 5 கிலோ மீட்டர் குறைவான வேகத்தில் செல்லுங்கள். உதாரணமாக 55 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம் என்றால், 50 கிலோ மீட்டர் வேகத்தில் காரை செலுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








