காரை புதுசா காட்ட பணத்தை தண்ணி போல் செலவழிக்கனும் என்று இல்லை... காரை விற்கனும் என்ற அவசியமும் இல்லை!!

பல இலட்ச ரூபாய் கொடுத்து வாங்கிய கார் பழையதாகுவது நிச்சயமாக எவர் ஒருவருக்கும் கவலை அளிக்கக்கூடிய விஷயம் தான். காரை விற்கவும் மனம் இல்லாமல், அதனை சரிச்செய்யவும் நேரம் இல்லாமல் சிரமப்படுகிறீர்களா? உங்களுக்காக தான் இந்த தொகுப்பில் சில கார் டிப்ஸ்களை பார்க்க போகிறோம். உங்களது காரில் நாங்கள் கூறும் இந்த 4 விஷயங்களை மட்டும் செய்து பாருங்கள். பழைய தோற்றத்தில் இருந்த கார் வயது குறைந்து புதியது போன்று தெரியும். இந்த மாற்றங்கள் யாவும் எளியது மற்றும் செலவு குறைந்தது. தினந்தோறும் பயன்படுத்தும் உங்களுக்கே உங்களது கார் புதியதாக தெரியும்.

இருக்கை கவர்களை மாற்றவும்: கார்களின் இருக்கை கவர்களில் இருந்து ஆரம்பிக்கலாம். கார்களில் விரைவாக அழுக்காக ஆரம்பிப்பதே அதன் இருக்கை கவர்கள் தான். ஆதலால், அவற்றை மாற்றிவிட்டாலே காரின் கேபின் அழகானதாக தெரிய ஆரம்பித்துவிடும். கார் ஸ்பேர் பார்ட்ஸ் மார்க்கெட்டில் பல்வேறு விதமான கார் சீட் கவர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

transform older car into newer

கொஞ்சம் காசை செலவழித்தால், உயர் தரத்திலான சீட் கவர்களை கூட வாங்கலாம். அவற்றுள் உங்களது காரின் இருக்கைக்கு எது பொருத்தமாக இருக்கும் என்பதை பார்த்து தேர்வு செய்து மாட்டிக் கொள்ளலாம். குறைந்தப்பட்சம், கார் சீட் கவர்களை அடிக்கடி துவைத்து பயன்படுத்தினாலே காரின் கேபின் அழகாக தெரியும்.

தரைப்பாய்களை மாற்றவும்: சீட் கவர்களை போன்று, காருக்குள் தரையில் வழங்கப்படும் பாய்களும் உடனடியாக அசுத்தமாக கூடியவை. காலுக்கு அடியில் போட்டு மிதிப்பதால், தரைப்பாய்கள் கிழிந்திருப்பதற்கு கூட வாய்ப்புள்ளது. ஆதலால், சுத்தம் செய்து அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியுமா என்பதை முதலில் ஆராயவும்.

transform older car into newer

சீட் கவர்களை இருக்கைகளில் இருந்து நீக்குவது எளிது. ஆனால், ஃப்ளோர் மேட்களை நீக்குவது சற்று சிரமமான விஷயம் ஆகும். ஏனெனில், தரைப்பாய்களில் அழுக்கு மட்டுமின்றி, தூசி, துகள்களும் இருக்கும். பாயை எடுக்கும்போது தூசி, துகள்கள் காரினுள் மற்ற பொருட்களின் மீது விழுவதற்கு வாய்ப்புள்ளது என்பதை மறவாதீர்கள்.

கேபின் விளக்குகளை பொருத்தவும்: காரின் உள்ளே பளிச்சென்று தெரிய வேண்டும் என்றால், கூடுதலாக விளக்குகளை பொருத்தலாம். காருக்குள் பொருத்துவதற்காகவே வண்ண, வண்ண நிறங்களில் கேபின் விளக்குகள் விற்பனை செய்யப் படுகின்றன. இவை நீங்கள் கார் ஓட்டும் சூழலையே மாற்றிவிடக் கூடியவை ஆகும்.

transform older car into newer

புதிய அலாய் சக்கரங்கள்: இவ்வளவு நேரம் நாம் பார்த்தது, காருக்குள் கேபினை அழகாக்குவதற்கான டிப்ஸ். ஆனால், நாம் இப்போது பார்க்க போவது, காரின் வெளிப்புறத்தை அழகாக்குவதற்கான டிப்ஸ் ஆகும். நீண்ட வருடங்களாக மாற்றாமல் இருப்பதால் காரின் பெயிண்ட் மங்கலாகிவிட்டாலும், அலாய் சக்கரங்களை மாற்றுவது, தூரத்தில் இருந்து பார்த்தாலும் உங்களது காரை அழகாக காட்டும்.

transform older car into newer

இரும்பு சக்கரங்களை கொண்ட காரை பயன்படுத்துகிறீர்கள் என்றால், சக்கரங்களின் ரிம்களை மாற்றிக் கொள்ளலாம். இரும்பு சக்கரங்கள் இருந்த இடத்தில் அலாய் சக்கரங்களை பொருத்திக் கொள்வதும் சிறந்த முடிவாகும். ஆனால், இதற்கு சற்று கூடுதல் செலவாகும். காருக்கு ஸ்டைலான தோற்றத்தை வழங்குவதால், இன்றைய கால மாடர்ன் கார்களில் எல்லாம் அலாய் சக்கரங்கள் தான் பொருத்தப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த 4 டிப்ஸை ஃபாலோ செய்தாலே குறைந்த விலையில் நீங்கள் உங்கள் காரை புத்துணர்ச்சியான தோற்றத்திற்கு மாற்றிவிட முடியும். இந்த மாற்றங்களை அடிக்கடி செய்ய முடியாவிடினும், சில வருடங்களுக்கு ஒருமுறை ஆவது இவற்றை செய்து பார்க்கவும். அதிக பணத்தை செலவழிக்க தயார் என்றால், இதனை காட்டிலும் காரை புதுசாகவும், அழகாகவும் மாற்ற முடியும்.

More from DriveSpark

Article Published On: Friday, September 13, 2024, 16:26 [IST]
English summary
4 simple ways to transform your older car into newer check all details here
மேலும்... #car tips #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X