காரின் ஸ்டியரிங் வீலை வெள்ளை துணியால் மூடி வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

இந்தியாவில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், உங்கள் காரை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு தேவையான டிப்ஸ்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காரின் ஸ்டியரிங் வீலை வெள்ளை துணியால் மூடி வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

உலகில் வெயில் சுட்டெரிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சற்று நேரம் வெயிலில் நிறுத்தியிருந்தால் கூட, உட்காரவே முடியாத அளவிற்கு கார் சூடாகி விடும். இதுபோன்ற பிரச்னைகளை நீங்கள் சந்திக்க கூடியவர் என்றால், உங்களுக்குதான் இந்த செய்தி. உங்கள் காரை குளிர்ச்சியாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்த செய்தியில் கூறியுள்ளோம்.

காரின் ஸ்டியரிங் வீலை வெள்ளை துணியால் மூடி வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

சோலார் ஃபேன் (Solar Fan)

காரின் உட்புறத்தில் இருக்கும் சூடான காற்றை வெளியேற்றுவதற்காக இந்த சோலார் ஃபேன்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. விண்டோக்களில் கச்சிதமாக பொருந்தும் இந்த சோலார் ஃபேன்கள், கேபினுக்கு உள்ளே இருக்கும் சூடான காற்றை வெளியேற்றும். இங்கே மற்றொரு விஷயம் என்னவென்றால், வெறும் 1,000 ரூபாய்க்கு உள்ளாகவே இந்த சோலார் ஃபேன்களை வாங்க முடியும்.

காரின் ஸ்டியரிங் வீலை வெள்ளை துணியால் மூடி வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

இந்த விலைக்கே தரமான சோலார் ஃபேன்கள் கிடைக்கின்றன. வெயில் சுட்டெரிக்கும் சமயங்களில், உங்கள் காரின் கேபினை குளிர்ச்சியாக வைத்திருப்பதில் இந்த சோலார் ஃபேன்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அதுவும் குறைவான விலையில் கிடைப்பது இந்த சோலார் ஃபேன்களில் முக்கியமான சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

காரின் ஸ்டியரிங் வீலை வெள்ளை துணியால் மூடி வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

சன்ஷேடு (Sunshade)

கேபினுக்கு உள்ளே வெப்பத்தை குறைத்து, காரை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு, சன்ஷேடுகளை பயன்படுத்துவது மிகச்சிறந்த வழி. சன் ஃபிலிம்களை (Sun Films) பயன்படுத்துவது சட்ட விரோதமானது என்னும் நிலையில், சன்ஷேடுகள் மிகச்சிறந்த மாற்று வழி. சூரியனின் கதிர்கள் காரின் கேபினுக்கு உள்ளே நுழைவதை தடுப்பதற்கு மிகச்சிறந்த மற்றும் செலவு குறைவான வழியாக சன்ஷேடுகள் பார்க்கப்படுகின்றன.

காரின் ஸ்டியரிங் வீலை வெள்ளை துணியால் மூடி வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

வெவ்வேறு அளவுகள் மற்றும் வடிவங்களில் சன்ஷேடுகள் கிடைக்கின்றன. விண்டோக்களில் கச்சிதமாக பொருந்தக்கூடிய சன்ஷேடுகள் தற்போது சந்தையில் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக கோடை காலங்களில் சன்ஷேடுகள் உங்களுக்கு மிகச்சிறந்த பலன்களை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

காரின் ஸ்டியரிங் வீலை வெள்ளை துணியால் மூடி வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

ஸ்டியரிங் வீல் மற்றும் டேஷ்போர்டை துண்டால் மூடி வையுங்கள்

வினைல் மற்றும் லெதர் போன்றவை வெப்பத்தை விரைவாக ஈர்க்கும் தன்மை கொண்டவை. எனவே ஸ்டியரிங் வீல் மற்றும் டேஷ்போர்டு போன்ற வினைல் மற்றும் லெதர் மேற்பரப்புகளை துண்டு மூலம் மூடி வைப்பதும் பலன் அளிக்கும். அதுவும் வெள்ளை துண்டு பயன்படுத்தினால், இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

காரின் ஸ்டியரிங் வீலை வெள்ளை துணியால் மூடி வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

வெப்பத்தை மேலும் குறைக்க வேண்டுமென்றால், படுக்கை விரிப்புகள் மூலமாக இருக்கைகளையும் மூடி வைக்கலாம். வெயிலில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டிருக்கும் காரில் ஏறி அமர்வது என்பது கூட நாங்கள் ஏற்கனவே கூறியபடி சிரமமான காரியம். எனவே இருக்கைகளில் வெப்பத்தை குறைப்பதற்கு இந்த வழியை பின்பற்றலாம்.

காரின் ஸ்டியரிங் வீலை வெள்ளை துணியால் மூடி வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

விண்டோக்களை சற்று திறந்து வையுங்கள்

நேரான சூரிய வெளிச்சத்திற்கு கீழே பார்க்கிங் செய்யப்பட்டிருக்கும்போது, விண்டோக்களை சற்று திறந்து வைப்பதும் உங்களுக்கு நன்மை அளிக்கும். ஏனெனில் ஓரளவு திறக்கப்பட்ட விண்டோக்கள் குறுக்கு-காற்றோட்டத்திற்கு உதவி செய்யும். ஆனால் ஒரு கை உள்ளே நுழையும் அளவிற்கு விண்டோக்களை திறந்து வைத்து விடாதீர்கள். இது திருடர்களுக்கு நீங்களே உதவி செய்வதை போலாகி விடும்.

காரின் ஸ்டியரிங் வீலை வெள்ளை துணியால் மூடி வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

இந்தியா போன்ற வெப்பமான நாடுகளில் இந்த எளிமையான டிப்ஸ்களை பயன்படுத்தினால், காரின் கேபினுக்கு உள்ளே வெப்பத்தை குறைக்க முடியும். பொதுவாக வெளிப்புறங்களில் நிலவும் வெப்ப நிலையை காட்டிலும், காரின் கேபினுக்கு உள்ளே வெப்ப நிலை மிகவும் அதிகமாக இருக்கும் என்பது பின்னடைவான ஒரு விஷயம்.

காரின் ஸ்டியரிங் வீலை வெள்ளை துணியால் மூடி வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே!

ஆனால் இந்த எளிமையான டிப்ஸ்களை பயன்படுத்தினால், காரின் கேபினை குளிர்ச்சியாக வைத்து கொள்ள முடியும். இவற்றுடன், காரை பார்க்கிங் செய்யும்போது முடிந்தவரை நிழலில் நிறுத்துவதற்கு முயற்சி செய்யுங்கள். இதுவும் கார்களை வெப்பத்தில் இருந்து காப்பாற்றுவதற்கான முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

Most Read Articles
English summary
4 tips to keep your car cool
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X