நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டும் போது நாம் பின்பற்ற வேண்டிய 5 முக்கிய கட்டளைகள்..!!

Written By:
Recommended Video - Watch Now!
Bangalore Bike Accident At Chikkaballapur Near Nandi Upachar - DriveSpark

நெடுஞ்சாலை பயணங்களின் போது, லேன் வழியை பின்பற்றாமல் ஏனோ.. தானோ.. என்று வாகனத்தை ஓட்டுபவர்களை நம்மில் பெரும்பாலானோர் கடந்து வந்திருப்போம்.

நெடுஞ்சாலை பயணங்கள் பாதுகாப்பாக இருக்க இப்படி செய்யலாம்..!!

நெடுஞ்சாலை பயணங்களின் போது, லேன் வழியை பின்பற்றாமல் ஏனோ.. தானோ.. என்று வாகனத்தை ஓட்டுபவர்களை நம்மில் பெரும்பாலானோர் கடந்து வந்திருப்போம்.

நெடுஞ்சாலை பயணங்கள் பாதுகாப்பாக இருக்க இப்படி செய்யலாம்..!!

இதுபோன்று வாகனம் ஓட்டியதால், சமீபத்தில் பள்ளி செல்லும் சிறுமி ஒருவள் உயிரிழந்தாள். இதனால் கோபம் அடைந்த அப்பகுதி மக்கள் வாகன ஓட்டிகளை கட்டி வைத்து அடித்தனர்.

நெடுஞ்சாலை பயணங்கள் பாதுகாப்பாக இருக்க இப்படி செய்யலாம்..!!

தேசியளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விபத்திற்கு பிறகு லேன் விதியை பின்பற்றுவது குறித்து பல்வேறு விவாதாங்கள் சமூக வலைதளங்களில் தற்போது எழுந்து வருகின்றன.

நெடுஞ்சாலை பயணங்கள் பாதுகாப்பாக இருக்க இப்படி செய்யலாம்..!!

இந்த சம்பவம் நடந்து, ஒரு நாள் கூட முடியவில்லை. அதற்குள் நெடுஞ்சாலை ஒன்றில் லேன் வழியை பின்பற்றாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டியை பற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.

லேன் விதியை பின்பற்றாமல் சாலையில் வந்த இருசக்கர வாகன ஓட்டி (வீடியோ):

ஹைதாராபாத் முதல் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் வாகனங்கள் செல்லும். அப்போது அந்த வழியாக பைக்கில் வரும் ஒரு நபர். லேன் மாற்றி வாகனத்தை ஓட்டி வருகிறார்.

நெடுஞ்சாலை பயணங்கள் பாதுகாப்பாக இருக்க இப்படி செய்யலாம்..!!

அவர் வழியில் எதிர்புறமாக ஸ்விஃப்ட் டிசையர் கார் ஒன்று வர, அதை அநாயசமாக கடந்துவிடுகிறார் அந்த நபர். ஆனால் காரில் இருந்தவர்கள் எதிரே மோட்டார் சைக்கிள் வருவதை சற்றும் எதிர்பாராமல் ஸ்தம்பித்தது வீடியோவை பார்க்கும் நமக்கு உணர முடிகிறது.

Trending On Drivespark Tamil:

பயன்பாட்டில் இருக்கும் உலகின் அதிவேக டாப்- 5 பயணிகள் விமானங்கள்!

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஸ்மார்ட் ரக வாகனங்களை அறிமுகம் செய்யும் டாடா..!!

நெடுஞ்சாலை பயணங்கள் பாதுகாப்பாக இருக்க இப்படி செய்யலாம்..!!

நெடுஞ்சாலையில் இப்படிப்பட்ட சூழல் உங்களுக்கு நேர்ந்தால், உங்களது பயணம் பாதுகாப்பாக அமைந்திடவும், ஆபத்தை தடுத்திடவும் 5 கட்டளைகள் உள்ளன. ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

1. முன்னெச்சரிக்கை வேண்டும்

1. முன்னெச்சரிக்கை வேண்டும்

நெடுஞ்சாலை பயணங்களில் போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது ஒரு கண் இருப்பது அவசியம்.

நெடுஞ்சாலை பயணங்கள் பாதுகாப்பாக இருக்க இப்படி செய்யலாம்..!!

அவர்களால் ஆபத்து நேரும் என தெரிந்தால், உங்களுக்குள் பதற்றத்தை உண்டாக்கிக்கொள்ளாமல் சில முன்னெச்சரிக்கைகளில் இறங்குவது சாலச்சிறந்து.

2. கவனம் பிரதானம்

2. கவனம் பிரதானம்

சாலை பயணங்கள் என்றாலே கவனம் வேண்டும் தான். ஆனால் அதில் தான் சில கவனச்சிதறல்களும் ஏற்படும். அதனால் விழிப்புடன் இருப்பது மிக மிக அவசியம்.

நெடுஞ்சாலை பயணங்கள் பாதுகாப்பாக இருக்க இப்படி செய்யலாம்..!!

எதுவும் எப்போதும் நடக்கலாம் என்ற அலர்ட் நிலையிலேயே வாகனங்களை ஓட்டுங்கள். தேவை என்றால், சக சாலை பயணியிடம் ஒரு நாகரீகமான இணைப்பை கூட ஏற்படுத்திக்கொள்வது நல்லது தான்.

3. வேகக் கட்டுபாடு

3. வேகக் கட்டுபாடு

இதை கேட்கும் போது நமக்கு சலிப்பு ஏற்படத்தான் செய்யும். ஆனால் வேகக் கட்டுபாடுடன் வாகனங்களை ஓட்டும்போது, அது உங்களுக்கு பாதுகாப்பை தரும். மேலும் அதுவே மற்ற சாலை பயணியிடமும் பிரதிபலிக்கச்செய்யும்.

4. பாதுகாப்பு கட்டமைப்புகள் அவசியம்

4. பாதுகாப்பு கட்டமைப்புகள் அவசியம்

வாகனங்களின் பாதுகாப்பு கட்டமைப்புகளை எப்போதும் முறையாக பராமரிக்க பழகுங்கள். பைக் வைத்திருப்போர் ஏபிஎஸ் பொருத்திக்கொள்வது நல்லது. வாகன பராமரிப்பு பணிகளை எப்போதும் அலட்சியப்படுத்த வேண்டாம்.

Trending On Drivespark Tamil:

விலை உயர்ந்த பைக்கில் வந்தர்கள் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல்... பதட்டம்!

ஏர் பேக்ஸ், ஏபிஎஸ் இருந்தாலும் இந்த 5 பொருட்களும் உங்க காருக்கு கூடுதல் அவசியம்... அவை இவைதான்..!!

5. வெட்டி பந்தா வேண்டாம்

5. வெட்டி பந்தா வேண்டாம்

சமூக வலைதளங்களில் காணப்படும் சாகச ரைடிங் அல்லது ரேஸ் டிரைவிங்கை சாலைகளில் ஓட்டி பார்க்க வேண்டாம். வீடியோக்களில் இதுபோன்ற பணிகளில் ஈடுபவர்கள் முறையாக பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.

நெடுஞ்சாலை பயணங்கள் பாதுகாப்பாக இருக்க இப்படி செய்யலாம்..!!

நீங்கள் சாகச விரும்பியாக இருந்தால், அதற்கான சாலை அமைப்புகளை பிரத்யேகமாக தனியார் நிறுவனங்கள் கட்டமைத்துள்ளன. அதில் உங்கள் விருப்பப்படி வாகனங்களை ஓட்டி பார்க்கலாம்.


டைட்டானிக் கப்பல் விபத்தும், அதிர்ச்சியூட்டும் உண்மைகளும்!!

English summary
Read In Tamil: 5 Commandments To Survive Highways. Click for Details...

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark