பைக்கில் கிளம்பும்போது அவசியமான 5 முக்கிய ஆக்சஸெரீகள்!
இந்தியாவின் அதி முக்கிய போக்குவரத்து சாதனங்களில் ஒன்றாக இருசக்கர வாகனங்கள் மாறிவிட்டன. இருசக்கர வாகனங்களின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதேவேளையில், விபத்துக்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகின்றன.
இந்தநிலையில், இருசக்கர வாகனங்களை ஓட்டும்போது தேவைப்படும் சில முக்கிய ஆக்சஸெரீஸ்களை இந்த தொகுப்பில் காணலாம். சிலர் அலட்சியமாக இவற்றை விட்டுச் செல்வதும், சிலர் அவசரத்தில் மறுந்துவிட்டு செல்வதும் வாடிக்கையாக உள்ளது. எனவே, அங்கே, இங்கே பார்த்த விபத்தில் நாமும் சிக்கிக் கொள்ளாமல் தவிர்ப்பதோடு, உடல் நலத்தை காக்கும் இந்த ஆக்சஸெரீகளை அவசியம் எடுத்துச் செல்லவும்.
இது தெரியாதா எங்களுக்கு கூறுபவர்களை தவிர, பிறருக்கு இது செக்லிஸ்ட் போல பயன்படும் என்பதற்காக இங்கே வழங்கியுள்ளோம்.
/strong>.

ரெடியா...!
என்ன ரெடியாயிட்டீங்களா... வாங்க ஸ்லைடரில் ஒரு ரவுண்ட் போய்விட்டு பயணத்தை துவங்கலாம்.

1. தலைக்கவசம்
தலைக்காக்கும் கவசம் என்பதைவிட, உயிர்காக்கும் கவசமாக இதனை கூறலாம். உங்களுக்கு சரியான பொருந்தும் அளவு கொண்ட ஹெல்மெட்டுகளை வாங்குவது அவசியம். முழுவதுமாக தலையை காக்கும் வடிவமைப்பு கொண்ட ஃபுல் ஃபேஸ் ஹெல்மெட் சிறந்த சாய்ஸ். நீண்ட நாட்கள் பயன்படுத்தும் ஆக்சஸெரீ என்பதால், அதிக விலை என்றாலும் தரமான ஹெல்மெட்டுகளை வாங்கிவிடுவது உசிதம். ஒருவேளை, விபத்தில் சிக்கும்போது தரமற்ற ஹெல்மெட்டுகளாலேயே உங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உண்டு என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும், கையில் ஹெல்மெட்டை மாட்டிச் செல்வதையும், ஹெல்மெட் அணியாமல் செல்வதையும் தவிர்க்கவும்.

2. கருப்புக் கண்ணாடி
ஸ்டைலுக்காக சன் கிளாஸ் அணிந்துகொள்கிறார்கள் என்று நினைப்பது தவறு. தூசு, தும்பட்டிகள், சூரிய ஒளி போன்றவற்றிலிருந்து கண்களை பாதுகாக்கும் ஆக்சஸெரீ. ஹெல்மெட் டிசைனை பொறுத்தும், உங்கள் முகத்துக்கு சிறப்பாக பொருந்தும் சன் கிளாஸ் வாங்கிக் கொள்வது அவசியம்.மேலும், ஹெல்மெட்டை தேர்வு செய்யும்போது கூலிங் பேப்பர் ஒட்டாத கண்ணாடியாக தேர்வு செய்து கொண்டால் நல்லது.

3.கையுறைகள்
கொஞ்ச தூரம்தான் போறேன். இமயமலைக்கா செல்கிறேன். இதுக்கு எதுக்கு கிளவ்ஸ் என்று கேட்பது வழக்கம். ஆனால், கையுறை மிகச்சிறந்த பாதுகாப்பை வழங்கும் ஆக்சஸெரீயாக கூறலாம். 60 கிமீ வேகத்தில் ஒருவேளை கீழே விழும் நிலை ஏற்பட்டால், முதலில் கையைத்தான் தரையில் ஊன்ற வேண்டி வரும். அவ்வாறு ஊன்றும்போது எக்கச்சக்க சிராய்ப்புகள் ஏற்படும். இதுபோன்று விழும் சமயத்தில் கையுறைகள் மிகச்சிறப்பான பாதுகாப்பை வழங்கும்.

4.ஜாக்கெட்
பைக் ஓட்டிகளுக்கு இதுவும் ஓர் சிறந்த பாதுகாப்பு கவசம்தான். கீழே விழந்தால் காயங்களிலிருந்து காப்பது மட்டுமின்றி, சூரிய ஒளியால் உடலில் ஏற்படும் பாதிப்புகளையும் குறைக்கும். எப்போதுமே, பைக் ஓட்டும்போது அணிந்து செல்வதற்கான ஆக்சஸெரீயே. நீண்ட தூர பயணத்திற்கானது என்று முடிவு செய்துகொள்ள வேண்டாம்.

5.காலணிகள்
இரண்டு ஜோடி ஷூக்களை எப்போதும் பயன்படுத்துங்கள். ஸ்ட்ரீட் ரைடிங் பூட்ஸ் என்ற பைக் ஓட்டிகளுக்கான பிரத்யேக ஷூக்களை சில நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. இவை இலகு எடை கொண்டிருப்பதுடன், பட்ஜெட் விலையிலும் கிடைக்கிறது. இவையும் பாதங்களை பாதுகாக்கும். நம் பாதுகாப்பு நம் கையில். இந்த ஆக்சஸெரீகளை பைக் வாங்கும்போதே வாங்கி பயன்படுத்துவது சிறப்பு. எப்போதும், எதுவும் நடக்கலாம்.


Click it and Unblock the Notifications








