உங்கள் கார் விபத்தில் சிக்க முக்கிய 5 காரணங்கள் இது தான்
தொழிற்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்தன் காரணமாக இந்தியாவில் வாகனங்கள் மெக்கானிக்கல் கோளாறு காரணமாக ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது விட்டது.ஆனால் அதே சமயங்களில் மனித தவறுகளால் ஏற்
தொழிற்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்தன் காரணமாக இந்தியாவில் வாகனங்கள் மெக்கானிக்கல் கோளாறு காரணமாக ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது விட்டது. ஆனால் அதே சமயங்களில் மனித தவறுகளால் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு நடந்த விபத்துக்களின் பட்டியலில் நடத்தப்பட்ட ஆய்வில் 94 சதவீத விபத்துக்களுக்கு மனித தவறுகள் தான் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது அதே நேரத்தில் 2 சதவீத விபத்துக்கள் தான் மெக்கானிக்கல் கோளாறு காரணமாக ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த 2சதவீத விபத்துகளையும் தவிர்க்க கார் தயாரிப்பு நிறுவனங்கள் தொழிற்நுட்பங்களை மேம்படுத்தி வருகின்றனர். தற்போது மெக்கானிக்கல் கோளாறு காரணமாக நிகழ்ந்த விபத்துக்கள் பெரும்பாலும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள 5 காரணங்களுக்காக தான் நடந்திருக்கிறது.

டயர்/ வீல்
மெக்கானிக்கல் கோளாறு காரணமாக நிகழ்ந்த விபத்துக்களில் 35 சதவீத விபத்துக்கள் டயர் அல்லது வீலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக ஏற்பட்டுள்ளுது. டயரில் பெரும்பாலும் இரண்டு விதமாக தான் பிரச்னை ஏற்படுகிறது.
டயர் வெடித்தல் : டயர் வெடித்தலுக்கு பல காரணங்கள் இருக்கிறது. அதிகமான தேய்மானம், திடீர் என ஏற்படும் பஞ்சர், அதிகமான அளவில் வெப்பம் மாறுபடுதல் டயர் வெடிப்பு ஏற்படலாம்.

டயர் கிழிதல் : குறைந்த தர டயரில் சிறிய அளவு த்ரெட் தான் இருக்கும் இதனால் டயர் கிழிவது சுலபமாகிறது. மேலும் மழை மற்றும் பனி காலங்களில் அதிக அளவு கிரப் கிடைக்காததால் பிரேக் பிடித்து அதிக தூரம் சென்று கார் நிற்கிறது இதனாலும் டயர் கிழியும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
நல்ல தரமான டயரை வாங்கி பொருத்துவதும். குறிப்பிட்ட அளவு தேய்மானம் அடைந்தவுடன் டயரை மாற்றுவதும் தான் இந்த பிரச்னைக்க நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர முடியும்.

பிரேக்
வீலிற்கு அடுத்ததாக சரியாக பிரேக் பிடிக்கதது தான் மெக்கானிக்கல் கோளாரால் ஏற்படும் விபத்துகளில் இரண்டாம் இடத்தை பிடிக்கிறது. இது மெக்கானிக்கல் கோளாரால் ஏற்படும் விபத்துக்களில் 22 சதவீதம் இதனால் தான் ஏற்படுகிறது.
பிரேக் பிடிக்காததால் ஏற்படும் விபத்துக்கள் பெரிய அளவிலான விபத்துகளாகவே அமைகிறது. முக்கியமா கீழே உள்ள பிரச்சனைகள் அடிக்கடி பிரேக் பிடிக்காமல் போகும் விபத்துக்களில் ஏற்படுகின்றன.
பிரேக் லைன் கோளாறு: பிரேக் லைனில் உள்ள கேளாளாறு காரணமாக பிரேக் பிடிக்காமல் போகிறது இதனால் பெரும் விபத்துக்கள் நடக்கின்றன

ஏ.பி.எஸ். கோளாறு : ஏபிஎஸ் வீல் லாக் ஆகாமல், ஸ்லிப் ஆகாமல் கண்ட்ரோலை இழக்காமல் பார்த்து கொள்ளும் இதில் ஏற்படும் கோளாறுகால் கூட விபத்துக்கள் நடக்கிறது.
பிரேக் பேட் மற்றும் டிஸ்க் கோளாறு: அதிகமாக பயன்படுத்தப்பட்ட பிரேக் பேட் மற்றும் மோசமான நிலையில் உள்ள டிஸ்க் பரேக்குகளால் கூட விபத்துக்கள் நடக்கிறது.
இதை தவிர்க்க பிரேக்கை சரியாக பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு 10,000கி.மீ. ஒரு முறை பிரேக்கை முழுமையாக செய்வது நல்லது.

ஸ்டியரிங் மற்றும் சஸ்பென்ஸன்
மெக்கானிக்கல் கோளாறால் ஏற்படும் விபத்துக்களுக்கு மூன்றாவது முக்கிய காரணம் ஸ்டியரிங், சஸ்பென்ஸன் மற்றம் கியரில் ஏற்படும் பிரச்சனைகள் தான். ஸ்டியரிங் மற்றும் சஸ்பென்ஷன்களில் ஏற்படும் பிரச்னை காரை கண்டரோலை மீறி கொண்டு சென்று விடும். சரியான பராமரிப்பு தான் இவ்வாறான பிரச்னைகள் ஏற்படாமல் இருப்பதற்கு வழியாக இருக்கும்.

வாகனத்தை சர்வீஸ் செய்யும் போது ஓபிடி2 இயந்திரத்தின் மூலம் வாகனத்தில் உங்களுக்கே தெரியாமல் வேறு ஏதேனும் கோளாறுகள் இருந்தால் தெரியவந்து விடும். அதன் மூலம் எதிர்பாராத விபத்துக்களின் வாய்ப்பை குறைக்கும். என்ன காரணத்தினால் விபத்து நடந்தது என தெரியாத வகை விபத்துக்களில் 40 சதவீத விபத்துக்களுக்கு இது தான் காரணமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

ஹெட்லைட்/ பின் பக்க விளக்கு
வாகனத்தில் செல்லும் போது இரவு நேரங்களிலும், குறைவான வெளிச்சம் உள்ள ரோடுகளில் , ஹெட்லைட் மற்றும் பின் பக்க லைட் என்பது மிகவும் அவசியம். ஹெட்லைட் நீங்கள் செல்லும் பாதையை கவனிப்பதற்கும், எதிரில் வருபவர்கள் நீங்கள் வருவதை அடையாளம் கண்டு கொள்வதற்கும் உதவுகிறது. அதே போல் பின் பக்கம் உள்ள லைட் உங்களுக்கு பின்னால் வருபவர்கள் உங்களை பார்ப்பதற்கு உதவுகிறது.

பெரும்பாலும் இரவு நேரம், பகல் நேரத்தில் வெளிச்சம் குறைவாக உள்ள சமயம், பனிகாலம், ஆகிய காலங்களில் தான் இது பயன்படுகிறது தற்போது வெளியாகம் டூவீலர்களில் பகலிலும் ஹெட்லைட்டை ஆப் செய்ய முடியாத நிலையிலயே வருகிறது.

வைப்பர்கள்
வைப்பர்களால் எப்படி விபத்துக்கள் நிகழும் என நீங்கள் யோசிக்கலாம். ஆனால் பல விபத்துக்களுக்கு வைப்பர்கள் மறைமுக காரணமாக இருக்கிறது. அதாவது மழை காலங்களில் வைப்பரின் உதவியில்லாமல் நாம் வாகனம் ஓட்டுவது மிக கடினம்.மழை காலங்களில் ஏற்பட்ட விபத்துகளுக்கு பெரும்பாலும் வைப்பர்கள் சரியாக வேலை செய்யாததும் ஒரு முக்கிய காரணம் தான்.

ஒவ்வொரு மாதமும் உள்ளது விண்ட்ஷீல்டு வைப்பர்களை கவனியுங்கள் அதை மழைக்காலங்களில் மட்டும் போடும் பழக்கத்தை வைத்திருக்காதீர்கள். அவ்வப்போது கார் கண்ணாடியில் தண்ணீர் ஊற்றிவிட்டு வைப்பரை சிறிது நேரம் வேலை செய்ய விடுங்கள். வெயில் காலங்களில் நீங்கள் அதிகம் பயன்படுத்தாமல் இருந்தால் மழை காலத்தில் அது சரியான நேரத்தில் உங்கள் காலை வாரிவிட்டு உங்களை ஆபத்தில் தள்ளிவிட்டுவிடும்.


Click it and Unblock the Notifications








