மழை காலத்தில் இதை மட்டும் பண்ணிணால் போதும்! உங்க கார் மைலேஜை வாரி வழங்கும்! இவ்ளோ நாளா தெரியாம போச்சே!
மழை காலத்தில் (Monsoon) கார் உரிமையாளர்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கன மழையும், அதன் விளைவாக சாலைகளில் ஏற்படும் வெள்ளமும் காரின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அத்துடன் பருவ மழை காலத்தில் காரின் மைலேஜ் (Mileage) குறைவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.
ஆனால் ஒரு சில எளிமையான வழிமுறைகளை நீங்கள் தவறாமல் பின்பற்றுவதன் மூலம், மழை காலத்திலும் உங்கள் காரில் இருந்து சிறப்பான மைலேஜை பெற முடியும். அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். பருவ மழை தீவிரம் அடைந்து வரும் தற்போதைய சூழலில், இந்த டிப்ஸ்கள் (Tips) உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

காற்றழுத்தமும், திரெட் ஆழமும்: மழைக்காலத்தில் உங்கள் காரின் மைலேஜை மேம்படுத்த சரியான டயர் பராமரிப்பு முக்கியமானது. உங்கள் காரின் டயர்களில், உற்பத்தி நிறுவனம் பரிந்துரைத்த அளவிற்கு காற்றழுத்தம் சரியாக உள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் காற்றழுத்தம் குறைவாக உள்ள டயர்கள் எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கலாம்.
இதுதவிர மழை காலங்களில் சாலைகள் எப்போதும் ஈரமாகவே இருக்கும். அப்படிப்பட்ட சாலைகளில் நல்ல இழுவை கிடைக்க வேண்டுமென்றால், டயர்களில் திரெட் ஆழம் போதுமான அளவில் இருக்க வேண்டும். எனவே திரெட் ஆழம் போதுமான அளவில் இருப்பதையும் உறுதி செய்து கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும்.

இன்ஜினை ஆஃப் பண்ணீருங்க: அதிக டிராஃபிக் உள்ள சாலைகளில் நீண்ட நேரம் காத்திருக்கும்போது, தேவையில்லாமல் காரை ஐட்லிங்கில் விடுவதற்கு பதிலாக இன்ஜினை ஆஃப் செய்வது நல்லது. ஐட்லிங் எனப்படும் இந்த செயலற்ற நிலையானது, உங்கள் வாகனத்தை முன்னோக்கி நகர்த்தாமல் எரிபொருளைப் பயன்படுத்துகிறது. இதனால் மைலேஜ் குறைகிறது.
எனவே இன்ஜினை ஆஃப் செய்து விடலாம். உங்கள் கார் இன்ஜினை ஆஃப் செய்து விட்டு ஆன் செய்வது என்பது, ஒரு நிமிடத்திற்கு மேல் ஐட்லிங் நிலையில் இருப்பதை காட்டிலும் குறைவான எரிபொருளை மட்டுமே பயன்படுத்துகிறது. எனவே டிராஃபிக்கில் காத்திருக்க நேரிட்டால், தயங்காமல் இன்ஜினை ஆஃப் செய்து விடுங்கள்.

மீடியம் ஸ்பீடு மெய்ன்டெயின் பண்ணுங்க: திடீர் திடீரென ஆக்ஸலரேஷன் கொடுப்பது மற்றும் சடன் பிரேக் பிடிப்பது போன்ற ஒழுங்கற்ற செயல்பாடுகள், வழுக்கும் தன்மை உடைய சாலைகளில் பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மைலேஜையும் குறைக்கிறது. எனவே பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளுக்குள் நிலையான வேகத்தை பராமரிப்பது நல்லது.
அத்துடன் சடன் பிரேக் பிடிக்கும் சூழல் ஏற்படாத வகையில் காரை ஓட்டுவதும் அவசியம். இந்த விஷயங்கள் மழை காலத்தின் ஈரமான சாலைகளில் உங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் அதே வேளையில், காரின் மைலேஜை மேம்படுத்தவும் உதவி செய்கின்றன. 2 நன்மைகள் என்பதால், இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
நம்புங்க... சுத்தம் மைலேஜ் கூட கொடுக்கும்: நன்கு பராமரிக்கப்பட்ட வெளிப்புற மேற்பரப்பை கொண்ட ஒரு சுத்தமான கார், காற்றின் எதிர்ப்பை குறைக்கிறது மற்றும் காற்றியக்கவியலை மேம்படுத்துகிறது. இது சிறந்த மைலேஜ் கிடைக்க வழிவகுக்கிறது. எனவே உங்கள் காரை சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.
அதேபோல் காரின் உள்ளே இருந்து தேவையற்ற எடையை அகற்றவும். ஏனெனில் அது கூடுதல் சுமையை சேர்க்கிறது மற்றும் எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்கிறது. எனவே காருக்கு உள்ளே தேவையில்லாமல் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை எல்லாம் அகற்றி விட்டு, எடையை குறைக்கும் வேலையை முதலில் செய்யுங்கள்.
சர்வீஸ் முக்கியம் பிகிலு: மழை காலங்களில் உங்கள் கார் உகந்த நிலையில் இருப்பதை உறுதி செய்ய வழக்கமான சேவை மற்றும் பராமரிப்பு மிகவும் அவசியம். எனவே உற்பத்தி நிறுவனங்கள் பரிந்துரை செய்யும் வகையில், காரை முறையாக சர்வீஸ் செய்து விடுங்கள். கார் பாகங்கள் சரியான முறையில் இயங்கினாலே, நல்ல மைலேஜ் கிடைக்க தொடங்கி விடும் என்பதை மறந்து விட வேண்டாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விஷயங்களை எல்லாம் சரியாக பின்பற்றினால், உங்கள் காருக்கு பெட்ரோல்/டீசல் (Petrol/Diesel) நிரப்ப நீங்கள் செலவிட்டு வரும் தொகை குறையும் என்பது உறுதி. இந்த டிப்ஸ்கள் மழை காலத்திற்கு மட்டுமல்லாது, அனைத்து பருவ நிலைகளுக்கும் பொருந்தும் என்பதையும் மனதில் வைத்து செயல்படுங்கள்.


Click it and Unblock the Notifications









