லாங் பைக் ட்ரிப் அடிக்கடி போவீங்களா? அப்போ நீங்க தான் இந்த வீடியோவை முதலில் பார்க்கனும்!!

பெட்ரோல் போட்டுக் கொடுத்தால் பைக்கை ஓட்டிச் செல்ல யாருக்குத்தான் பிடிக்காது. ஒரு சிலர் விட்டால், உலகம் முழுவதுமே மோட்டார்சைக்கிளில் சுற்றிவர தயாராக உள்ளனர். சிலர் இதனை நிஜமாக்கியும் காட்டியுள்ளனர் என்பது வேறு கதை. ஆக, நம் அனைவருக்கும் பைக் ரைடிங் பிடித்தமான விஷயம்.

இருப்பினும், நீண்ட தொலைவிற்கு பைக் ரைடிங் என்றால் நம்மை அறியாமலேயே ஒரு பயம் நமக்கு தொற்றிக் கொள்கிறது. ஏனெனில், பைக் ரைடிங் ஆனது காரில் பயணிப்பது போன்றது கிடையாது. மழை, வெயில் என நேரடியாக எதிர்கொள்ள விஷயங்கள் பைக் ரைடிங்கின் போது அதிகமாக இருக்கும். அத்தகைய சவால்களை எதிர்கொள்ள பைக் ரைடிங்கின்போது நம்முடன் வைத்திருக்க வேண்டிய பொருட்களை கீழேயுள்ள வீடியோவில் விரிவாக கூறியுள்ளோம்.

எல்லாவற்றையும் விட, பைக் ரைடிங்கின் போது மிக அவசியமான ஒன்று ஹெல்மெட் ஆகும். நீண்ட தொலைவு பயணங்களை அவ்வப்போது மேற்கொள்வீர்கள் எனில், அதற்கேற்ப நன்கு சவுகரியமான ஹெல்மெட்டை வாங்கவும். அதேபோல், விபத்தின்போது ஏற்படும் சேதங்களை தடுப்பதற்கான கார்ட்களை வாங்கி பைக்கில் பொருத்திக் கொள்ளலாம். இது மோதல் சமயத்தில் பைக்கை பாதுகாப்பது மட்டுமின்றி, உங்களையும் பாதுகாக்கக்கூடியதாக இருக்கும்.

accessories for long bike trip

இவ்வாறான கார்ட்கள் பல உள்ளன. அதாவது, ரைடரின் கையை பாதுகாக்க ஹேண்டில்பார் கார்ட்கள், கால் முட்டியை பாதுகாக்க என்ஜினிற்கு அருகே கார்ட்கள் மார்க்கெட்டில் விற்பனையில் உள்ளன. பாதுகாப்பான பொருட்களுக்கு அடுத்து நாம் கவனிக்க வேண்டியது அதிக பொருட்களை எடுத்துச் செல்வதற்கு தேவையான பைக் பேக்ரெஸ்ட் போன்றவை ஆகும். எளிமையாக கியர்களை மாற்ற ஷூ பூட்களை வாங்க பயன்படுத்தலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, January 5, 2024, 22:01 [IST]
English summary
Accessories which you need before taking long bike ride detailed video
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+