யூஸ்டு கார் வாங்குவதில் இருக்கும் சாதகமான அம்சங்கள்

எனவே, யூஸ்டு காரை வாங்குவது வாடிக்கையாளர்களுக்கு தற்போது எளிதான காரியமாக மாறிவிட்டது. இதற்கான சில சாதகமான அம்சங்களை காணலாம்.
புதிய கார் விலையை ஒப்பிடும்போது 3 ஆண்டுகள் ஓடிய யூஸ்டு கார்கள் மிகக் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன. எனவே, அதிக முதலீடு செய்ய வேண்டியதில்லை என்பதும், நல்ல கண்டிஷன் கொண்ட கார்களையும் வாங்க முடியும்.
புதிய கார் வாங்கும்போது புக்கிங் செய்து மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனால், இங்கு அந்த தொல்லை யூஸ்டு கார் வாங்கும்போது இருக்காது. மேலும், இரண்டாவது கார் வாங்கும்போது அதிக முதலீடு இல்லாமல் மற்றொரு காரையும் வாங்கி விடுவதற்கு யூஸ்டு கார் மார்க்கெட் பெரிதும் உதவியாக இருக்கிறது.
முன்பு விபத்தில் சிக்கிய கார்களை ஏமாற்றி விற்கும் நிலை இருந்தது. ஆனால், தற்போது மாருதி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் காரை வாங்கி முழுமையாக பரிசோதித்த பின்னரே விற்பனை செய்வதால் அச்சப்படாமல் நம்பிக்கையுடன் வாங்க முடியும். சில நிறுவனங்கள் பரிசோதனை சான்றும் வழங்குகின்றன என்பது கூடுதல் நம்பிக்கை தருவதாக இருக்கிறது.
அப்படியே பிரச்னை இருந்தாலும் கார் வாங்கிய நிறுவனத்தை நம்பிக்கையுடன் தொடர்பு கொள்ள முடியும். தவிர, தற்போது யூஸ்டு கார் ஷோரூம்களில் சர்வீஸ் வசதி கிடைப்பதும் முக்கிய காரணம். யூஸ்டு கார் வாங்கினால் வெளியில்தான் சர்வீஸ் செய்ய அலைய வேண்டும் என்ற நிலை இப்போது இல்லை.
புதிய கார்களுக்கு போன்றே யூஸ்டு கார்களுக்கும் ஏராளமான வங்கிகள் மற்றும் முன்னணி நிதி நிறுவனங்கள் எளிய கடன் திட்டத்தை வழங்குகின்றன. நீங்கள் வாங்கும் கார் மாடலை பொறுத்து குறைந்த முன் பணம் செலுத்தி காரை வாங்கும் வசதி இருக்கிறது.
யூஸ்டு கார்களை வாங்கும்போது பேரம் பேசி வாங்கும் நிலையும் இருக்கிறது. மேலும், உட்கார்ந்த இடத்திலேயே யூஸ்டு கார்களை பற்றிய விபரங்களை தற்போது ஆன் லைனிலேயே பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது.
இவையெல்லாவற்றையும் விட புதிய கார் ஷோரூம்கள் போல தற்போது யூஸ்டு கார் ஷோரூம்களிலேயே கார் கடன், ஆர்டிஓ பெயர் மாற்றம், இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கிடைக்கிறது. நாம் ஒவ்வொன்றுக்காக அலைய வேண்டிய தேவையில்லை.
எல்லாம் சரி, ஆனால் யூஸ்டு கார் வாங்கப் போகும்போது தெரிந்த மெக்கானிக்குகள் அல்லது கார்களை பற்றி நன்கு விஷயமறிந்த நண்பர்களை கூட்டிச் செல்வது சிறந்தது. அப்போதுதான் சிறந்த காரை தேர்ந்தெடுப்பது சுலபமாகும். காரில் இருக்கும் குறைகளை தெரிந்து கொள்வதும் எளிதாகும்.


Click it and Unblock the Notifications








