லிக்யூடு கூல்டு எஞ்சின் Vs ஏர் கூல்டு எஞ்சின்: சாதக, பாதகங்கள்
மோட்டார்சைக்கிள் வாங்கும்போது தகவல் குறிப்பேட்டில் எஞ்சின் பற்றிய தகவல்கள் வரிசையாக குறிப்பிடப்பட்டிருக்கும். அதில், முக்கியமாக அந்த மோட்டார்சைக்கிளின் எஞ்சின் ஏர்கூல்டு அல்லது லிக்யூடு கூல்டு என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இது சிலருக்கு குழப்பம் ஏற்படுத்துவதாக இருக்கிறது.
இதுபற்றிய சில தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். எஞ்சினிலிருந்து இயக்க ஆற்றல் உற்பத்தியாகும்போது கூடவே அதிகப்படியான வெப்பமும் உற்பத்தியாகும். இந்த வெப்பம் எஞ்சினின் பாகங்களில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த வெப்பத்தால் எஞ்சின் பாகங்களில் பாதிப்பை ஏற்படுத்திவிடாதபடி பாதுகாக்கும் வகையில், இரண்டு விதமான குளிர்விக்கும் தொழில்நுட்பங்கள் எஞ்சினில் பயன்படுத்தப்படுத்தப்படுகின்றன.
அவைதான் மேலே குறிப்பிட்ட காற்றை கிரகித்து எஞ்சினை குளிர்விக்கும் ஏர்கூல்டு தொழில்நுட்பமாகவும், இரண்டாவது அடர் நீர்மம் மூலம் குளிர்விக்கும் லிக்யூடு கூல்டு தொழில்நுட்பமாகவும் கூறப்படுகிறது. இந்த இரண்டு தொழில்நுட்பங்களிலும் இருக்கும் சில அடிப்படையான சாதக, பாதகங்களை தெரிந்து கொண்டால், எந்த பைக்கை வாங்குவது என்ற எளிதான முடிவுக்கு நீங்கள் வர முடியும்.

சாஃப்ட் ரைடு
லிக்யூடு கூல்டு எஞ்சின்கள் மிகவும் ஸ்மூத்தான ரைடுக்கும், எஞ்சின் பாகங்களை அதிக பாதிப்புகள் ஏற்படா வண்ணம் பாதுகாக்கும்.

பெர்ஃபார்மென்ஸ்
ஏர்கூல்டு எஞ்சினை காட்டிலும் லிக்யூடு கூல்டு எஞ்சினின் பவர் வெளிப்பாடும், டார்க்கும் அதிகமாக இருக்கும்.

வெப்ப தடுப்பு
எஞ்சின் இயங்கும்போது வெளிப்படும் வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டு எஞ்சினின் வெப்பத்தை அடர் நீர்மம் சீராக வைத்திருக்கும்.

பராமரிப்பு அதிகம்
லிக்யூடு கூல்டு எஞ்சினின் பராமரிப்பு செலவீனம் மிக அதிகம் மைலேஜ் எதிர்பார்க்க முடியாது.

அதிக மைலேஜ்
நம் நாட்டில் அதிகம் விற்பனையாகும் கம்யூட்டர் ரக பைக் மாடல்களில் ஏர் கூல்டு எஞ்சின்தான் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மிகப்பெரிய பலம் அதிக மைலேஜ் தரும் என்பதே.

இடத்தை அடைக்காது
லிக்யூடு கூல்டு எஞ்சினைவிட எஞ்சினுக்குள் குறைந்த இடத்தை மட்டும் எடுத்துக் கொள்ளும்.

விலை குறைவு
இந்த எஞ்சினுக்கான உற்பத்தி செலவீனமும் மிக குறைவு என்பதால், சந்தையில் மிக குறைவான விலையில் கிடைக்கிறது.

பராமரிப்பு செலவு
இது குறைந்த பராமரிப்பு செலவும் கொண்டதால் வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது.

பாதகங்கள்
சீக்கிரம் சூடாவதோடு, அதிர்வுகள் அதிகமிருக்கும். போதிய பெர்ஃபார்மென்ஸ் இருக்காது.

பரிந்துரை
பெர்ஃபார்மென்ஸ் விரும்புபவர்கள் லிக்யூடு கூல்டு எஞ்சினையும், அதிக மைலேஜை எதிர்பார்ப்பவர்கள் ஏர் கூல்டு எஞ்சினையும் தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications








