காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால் வந்த வினை

Lamborghini Accident
விபத்துக்களின்போது ஏர்பேக் எனப்படும் உயிர்காக்கும் காற்றுப் பைகள் தக்க சமயத்தில் விரிந்தாலும், சீட் பெல்ட் அணியாமல் சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கின்றனர் வல்லுனர்கள்.

டெல்லியில் கடந்த ஞாயிறன்று நடந்த சூப்பர் கார் விபத்து டெல்லி வாசிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அடுத்தடுத்து நடந்து வரும் சூப்பர் கார் விபத்துக்களால் அங்கு சாலைகளில் செல்வோரின் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் நடந்த சூப்பர் கார் விபத்தில் இறந்த தொழிலதிபர் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால்தான் தனது உயிரை இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருசக்கர வாகனங்களில் செல்லும்போது எப்படி ஹெல்மெட் அவசியமோ அதுபோன்ற கார்களில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவது மிக மிக அவசியம்.

விபத்தில் சிக்கிய சூப்பர் காரில் காற்றுப் பைகள்(ஏர் பேக்) உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகொண்ட கார். அந்த கார் மோதிய வேகத்தில் காற்றுப் பை சரியான சமயத்தில் விரிந்தும் அந்த தொழிலதிபர் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சீட் பெல்ட் அணியாமல் சென்றதே அவர் உயிரிழப்புக்கு ஒரே காரணமாக கூறப்படுகிறது. ஏனெனில்,சீட் பெல்ட் அணிந்து செல்லவில்லையென்றால், அதிவேகத்தில் செல்லும் கார் இதுபோன்று மோதி விபத்துக்குள்ளாகும்போது காருக்குள் இருப்பவரை வெளியே தூக்கி வீசும் நிலை இருக்கிறது.

இதனால், காற்றுப் பைகள் சரியான சமயத்தில் விரிந்து தனது எஜமானரை காப்பாற்ற முயன்றாலும் அதற்கு பிரயோஜனம் இருக்காது. எனவே, சீட் பெல்ட் அணிந்து செல்வதை கட்டாயம் மறவாதீர்கள். விபத்துக்கள் தேதி, நாள் குறித்து நடப்பவை அல்ல.

எனவே, பக்கத்தில்தான் செல்கிறேன், அடுத்த தெருவுக்கு செல்கிறேன் என்று நினைத்து சீட் பெல்ட் அணியாமல் காரில் செல்ல வேண்டாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 22, 2012, 15:24 [IST]
English summary
Accidents do not happen on a set date and time. Drivers need to take proper precautions to have a safe journey. You have to always use seat belts while driving. Even air bags will not save you if you do not use seat belts as your body can be thrown away in any direction in case of a collision.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+