வெப்பத்திலிருந்து விடுதலை தரும் சேஸிஸ் ரஸ்ட் கோட்டிங்

கோடை காலத்தில் காருக்குள் ஏசி காற்று முழுமையான குளிர்ச்சியை தராததற்கு சாலையிலிருந்து காருக்குள் ஏறும் வெப்பம்தான் முக்கிய காரணம். எவ்வளவு பவர் ஃபுல் ஏசியாக இருந்தாலும் முழுமையான குளிர்ச்சியை தர சிரமப்படும்.
இதை தவிர்க்க உங்களது காருக்கு கீழ் அண்டர் சேஸிஸ் ரஸ்ட் கோட்டிங் செய்தால் பயன் தரும். சாலையிலிருந்து சேஸிஸ் சூடாகி அந்த வெப்பத்தின் தாக்கம் காருக்குள்ளும் வரும். சேஸிஸ் ரஸ்ட் கோட்டிங் செய்துவிட்டால் இந்த பிரச்னைக்கு ஓரளவு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
இந்த கோட்டிங் மூலம் வெப்பம் காருக்குள் கடத்துவது தவிர்க்கப்படுவதோடு, மழைக்காலத்திலும் சேஸிஸ் உள்ளிட்ட காருக்கு அடியில் இருக்கும் பாகங்கள் ஈரமாகி துருபிடிப்பதையும் தடுக்கும். மேலும், டயரிலிருந்து சிறு கற்கள் மற்றும் மண் சேஸிஸ் மீது அடித்தாலும் இந்த அண்டர் ரஸ்ட் கோட்டிங் பாதுகாக்கும்.


Click it and Unblock the Notifications








