பெண்களே கார் அல்லது பஸ்ல லாங் டிராவல் போறீங்களா! அதுக்கு முன்னாடி இந்த விஷயத்துக்கு எல்லாம் ரெடியானு பாருங்க!!
மார்ச் 8 உலக மகளிர் தினமாக அனுசரிக்கப்படுகின்றது. இந்த மகளிர் தினத்திற்கு பின்னல் மிகப் பெரிய வரலாறு உள்ளது. அதை அறியாத மகளிரே இருக்க மாட்டார்கள் என நாங்கள் நம்புகின்றோம். ஆனால், இந்த பதிவில் நாம் மகளிர் தின வரலாற்றைப் பார்க்கப் போவதில்லை. அதேசமயம், மகளிர் தின ஸ்பெஷலாக வாகனங்களில் 'லாங் டிராவல்' செய்யும் பெண்களுக்கான சில 'டிராவல் டிப்ஸ்' -ஸையே இந்த பதிவில் வழங்க இருக்கின்றோம். குறிப்பாக, பயணத்திற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய முக்கிய ஏற்பாடுகள் பற்றிய விபரங்களையே இங்கே பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
டிராவல் செய்வது பலருக்கு இப்போது பேஷன் ஆகிவிட்டது. குறிப்பாக பெண்கள் சிலர் தனியாகவே உலகைச் சுற்றி வர தொடங்கி இருக்கின்றனர். அவ்வாறு உலகையோ அல்லது ஊரையோ, எதை நீங்கள் சுற்றி வர கிளம்பினாலும் நீங்கள் அந்த பயணத்திற்கு தயாராக இருக்கின்றீர்களா என்பதை முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள். குறிப்பாக, உங்கள் டிராவல் பேகில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் உள்ளனவா என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் அதற்கான டிப்ஸ்கள் இதோ.

தொலைத் தொடர்பு சாதனங்கள்: உங்களின் தொலைத் தொடர்பு சாதனங்களான செல்போன் உள்ளிட்டவை முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு இருக்கின்றதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். உங்களின் நெருக்காமனவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்க இது பெரும் உதவியாக இருக்கும். எனவே, பவர்பேங்க்-கையும் கையோடு எடுத்துக் கொள்ளுங்கள்.
அதை எடுத்துக் கொள்வது மட்டுமல்ல அதையும் உங்களின் பயணத்திற்கு முன்னரே சார்ஜ் செய்துக் கொள்வது நல்லது. கடைசி நேரத்தில் அதை சார்ஜ் செய்வதை தவிர்க்கவும். ஏனெனில் நம்ம ஊரில் எப்போது மின்சாரம் போகும் வரும் என்றே சொல்ல முடியாது. குறிப்பாக, நம்ம ஊரில் இப்போதும் பல கிராமங்களில் மின்சார தடை நிலவிக் கொண்டிருக்கின்றது என்பதைக் கருத்தில் கொள்ளவும்.
டிராவல் டிப்ஸ்: இதுமட்டுமல்ல காரில் பயணிக்கின்றீர்கள் என்றால் ஸ்டெப்னி நல்ல நிலையில் இருக்கின்றதா என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். அத்துடன், ஃப்யூவல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் போதுமான அளவு இருக்கின்றதா என்பதை தெரிந்துக் கொள்வது அவசியம். இத்துடன், பயணம் எத்தனை நாட்களோ அதற்கேற்ற துணி-மணிகளை எடுத்து வைக்கவும் மறந்துவிடாதீர்கள்.
அத்துடன், சன் கிளாஸை மிக முக்கியமாக எடுத்துக் கொள்ளுங்கள். நாம் கார் போன்ற வாகனங்களை ஓட்டிச் செல்லும்போது எதிர் சூரிய ஒளி போன்றவற்றால் பாதிக்கப்படுவதை இதன் வாயிலாக தவிர்த்துக் கொள்ள முடியும். குறிப்பாக, லாங் டிராவல் செய்யும்போது அதிக இருக்கமான உடைகளை அணிவதை தவிர்த்துவிடவும்.
இது உங்கள் லாங் டிராவலை அசௌகரியமானதாக மாற்றிவிடும். ஆகையால், சற்றே தளர்வான உடையை அணிந்துக் கொள்வது நல்லது. மிக முக்கியமாக காட்டன் உடையை தேர்வுச் செய்வது கூடுதல் சூப்பரான டிராவல் அனுபவத்தை பெற உதவியாக இருக்கும். இதுமட்டுல்ல காரை விட்டு இறங்கிய பின்னரும் நீங்கள் இந்த வெயிலை சமாளிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
ஆகையால், தொப்பி, கூலர்ஸ் உள்ளிட்டவற்றை தயாராக எடுத்துச் செல்வது சிறப்பாக இருக்கும். இது மட்டுமல்ல நாப்கின் போன்றவற்றையும் தயாராக வைத்திருப்பதனால் இயற்கை உபாதைகளால் ஏற்படும் சிக்கல்களில் இருந்து உங்களால் தப்பித்துக் கொள்ள முடியும். குறிப்பாக, மென்ஸ்ட்ருவல் கப் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதனால் நாப்கின்னை மாற்ற வேண்டும் என்கிற அவசியம் இருக்காது. பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும்போது நாப்கின் மாற்றிக் கொள்வதற்கான சூழல் கிடைக்காது. எனவே அதற்கு பதிலாக மென்ஸ்ட்ரூவல் கப்பை பயன்படுத்துவதே நல்லது. இது பக்கவிளைவுகளில் இருந்தும் உங்களைக் காக்கும். இத்துடன், வழக்கமான முதலுதவி கிட் போன்றவற்றையும் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். இது மருத்துவமனை இல்லா நேரங்களில் பெரும் உதவியாக அமையும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிராவல் பலரின் வாழ்க்கையில் அத்தியாவசியமானதாகவும், இன்றியமையாததாகவும் மாறி இருக்கின்றது. இந்த மாதிரி ஒன்றை பெண்கள் கொஞ்சம் கூடுதலான கவனத்துடன் மேற்கொள்வது அவர்களின் பயணத்தை கூடுதல் சுவாரஷ்யமானதாக மாற்ற உதவியாக இருக்கும். மேலே பார்த்தவற்றை மட்டுமல்ல பெப்பர் ஸ்பிரே போன்ற பாதுகாப்பு சாதனங்களையும் கைகளில் வைத்துக் கொள்ளுங்கள்.
இது உங்களுக்கு கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்திக்க உதவியாக இருக்கும். இந்த ஆண்டு வேற மகளிர் தினம் சரியாக வார இறுதி நாளில் வந்திருக்கின்றது. ஆகையால், நம் மகளிர் பலர் கட்டாயம் மிகப் பெரிய டிராவல் பிளானில் இருப்பார்கள் என நம்பப்படுகின்றது. அவர்களுக்கு உதவும் விதமாக இந்த டிப்ஸ்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








