சாலை விபத்துகளை குறைக்க இதுதான் ஒரே வழி!! ஆனால் ஏன் செயல்படுத்த முடியல?
இன்றைய கால கார்கள் பல்வேறு விதங்களில் மேம்பட்டுள்ளன. குறிப்பாக, பயணிகள் மற்றும் வாகனத்தை பாதுகாக்கும் வகையில் பல்வேறு அட்வான்ஸ்டு கருவிகள் வந்துவிட்டன. சில கருவிகள் தொடர்ந்து கண்டுப்பிடிக்கப்பட்டு வருகின்றன. செயற்கை நுண்ணறிவு என்ற ஒரு விஷயம் கடந்த சில ஆண்டுகளில் பெரிய அளவில் விரிவடைந்து உள்ளதால், அதற்கேற்ப கண்டுப்பிடிப்பு & அதற்கான ஆராய்ச்சிகளும் வேகமெடுக்க ஆரம்பித்து உள்ளன. செயற்கை நுண்ணறிவு சரிதானா? அதன் எதிர்காலம் என்ன? என்பதை இனி பார்க்கலாம்.
தொழில்நுட்பத்தின் எழுச்சி நமது சமூகத்தின் ஒவ்வொரு துறையிலும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்ட பல முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. அவற்றுள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ள ஒரு துறை, ஆட்டோமொபைல் துறை. குறிப்பாக, கார்களில் AI (Artificial Intelligence - செயற்கை நுண்ணறிவு) வருகை சமீப காலங்களில் வெகுவாக அதிகரித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு, வாகனங்களில் இணைக்கப்படும் போது, கார் விபத்துக்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க முடியும். AI பொருத்தப்பட்ட கார்களில் பாதசாரிகளைக் கண்டறிதல், மோதல் எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் விபத்துகளைத் தடுக்க உதவும் தன்னியக்க அவசரகால பிரேக்கிங் போன்ற மேம்பட்ட அம்சங்கள் உள்ளன.
விபத்துகளைத் தடுப்பதில் AI-இன் செயல்திறனைக் கண்டு, இந்திய அரசாங்கமும் பல ஆட்டோமொபைல் ஆய்வாளர்களும் AI கார்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றனர். நம் இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் சாலைப் பாதுகாப்பை அதிகரிக்கும் என அவர்கள் நம்புவதால், AI தொழில்நுட்பத்துடன் கூடிய கார்களை வாங்க பரிந்துரைக்கின்றனர்.

விபத்துகளின் எண்ணிக்கை குறைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் என இந்திய சாலைகளில் AI நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. AI-ஆல் செயல்படும் கார்கள் அதிகளவில் சாலைகளில் பயன்பாட்டிற்கு வருவதால், AI தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து மேம்பட்டு வருகிறது. இது, பாதுகாப்பான பயண சூழலை மேம்படுத்துகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
இவ்வாறு நன்மைகள் இருந்தபோதிலும், கார்களில் AI தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதில் சில சவால்களும் உள்ளன. அதாவது, AI தொழிற்நுட்பங்களை உருவாக்குவது செலவுமிக்கது, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாமை மற்றும் வாகனங்களின் உள்கட்டமைப்பில் தேவையான மாற்றம் செய்ய வேண்டியிருப்பது ஆகியவை AIஐ முழுவதுமாக தழுவுவதற்கான பாதையில் உள்ள சில தடைகள்.

சுருக்கமாகச் சொன்னால், இந்தியாவில் சாலைப் பாதுகாப்பில் புரட்சியை ஏற்படுத்துவதில் AI தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்ற முடியும். விபத்துகள் எண்ணிக்கை குறைப்பு மற்றும் சிறந்த போக்குவரத்து மேலாண்மை உள்ளிட்டவை AI கார்கள் எதிர்காலத்தில் ஒரு விதிமுறையாக மாற போதுமானதாக உள்ளது. தடைகள் உள்ளன என்றாலும், அவை கடக்க முடியாதவை அல்ல.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலை விபத்துகள் அதிகம் நடைபெறக்கூடிய நாடுகளுள் ஒன்றாக நமது இந்தியா உள்ளது. இதற்கு போதிய சாலை வசதிகள் இல்லை என்பதை ஒரு காரணமாக அசால்ட்டாக சொல்லிவிட முடியாது. ஏனெனில், நம் மக்களிடத்திலும் போதிய விழிப்புணர்வு இல்லை என்பதையும் ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். இதற்கு ஒரே தீர்வு செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பங்கள் மட்டும்தான். இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications









