உங்களது அடுத்த காரை இப்படியொரு மாடர்ன் தொழிற்நுட்பத்துடன் வாங்குங்கள்!! சவுகரியத்துக்கு பிரச்சனையே இருக்காது..
இன்றைய கால மாடர்ன் கார்களில் பல்வேறு அட்வான்ஸ்டு தொழிற்நுட்ப அம்சங்கள் இடம்பெற ஆரம்பித்துவிட்டன. இதில் முக்கியமானதாக ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் (ACC) வசதியை சொல்லலாம். பயணத்தின் போது காருக்குள் சவுகரியமான அனுபவத்தை வழங்குவதில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆனால், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் வசதியின் முக்கிய பயன்பாடு ஆனது காருக்குள் கேபினில் பயணிகளுக்கு ஏற்ற/ சவுகரியமான வெப்பநிலையை உருவாக்குவதாகும். அதாவது, காருக்கு வெளியே எத்தகைய சூடான/ குளிர்ச்சியான வெப்பநிலை நிலவினாலும் காருக்கு உள்ளே ஒரே மாதிரியான வெப்பநிலையை நிலவ வைப்பது இந்த தொழிற்நுட்பத்தின் பணியாகும். இருப்பினும், இந்த தொழிற்நுட்பம் நம் நாட்டின் வெப்ப சூழ்நிலைக்கு தேவையானது தானா? என்கிற கேள்வி உங்களில் சிலருக்கு எழலாம். இதற்கான விடையை இனி காணலாம்.

அப்டேட்டான காருக்கு வழிவகுக்கும்: காரில் ஏசி & ஹீட்டர் பல வருடங்களாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அவை மேனுவலாக தேவைக்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்யக்கூடியவையாக இருந்தன. ஆனால் இன்றைய மாடர்ன் கார்களில் கேபினின் வெப்பநிலையை அவ்வப்போது அட்ஜெஸ்ட் செய்ய வேண்டுமே என்கிற கவலை கிடையாது. மற்றவர்கள் இத்தகைய ஆட்டோமேட்டிக் வசதியை வைத்திருக்கும்போது, உங்கள் காரில் மட்டும் மேனுவலாக இருப்பது உங்களை மனதளவில் பாதிக்கும்.

சுத்திகரிக்கப்பட்ட & நறுமணமூட்டப்பட்ட காற்றை பெறலாம்: ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் போன்ற பிரபலமான கார்கள் பலவற்றில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் வசதி ஆனது ஏர்-ப்யூரிஃபையர் உடன் வழங்கப்படுகிறது. மெர்சிடிஸ்-பென்ஸ், பிஎம்டபிள்யூ கார்களில் ACC-ஐ நறுமணமூட்டும் கருவி உடன் பெறலாம். அல்லது விலை குறைவான கார்களின் ACC உடன் பர்ஃப்யூம் டிஃப்யூஸரை தனியாக வாங்கி பொருத்தி கொள்ளலாம்.

மல்டி-ஸோன் க்ளைமேட் கண்ட்ரோல்: முன் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களுக்கு குறைந்த ஏசி காற்றே போதும், ஆனால் பின் இருக்கையில் இருப்பவர்களுக்கு அதிக ஏசி காற்று வேண்டுமெனில், மேனுவல் ஏசி கார்களில் இவ்வாறு மாற்றி கொள்ள முடியாது. ஆனால் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் அம்சத்தின் சிறப்பே பல இடங்களில் ஏசி காற்றுக்கான துளைகள் வழங்கப்படுவதுதான். விலைமிக்க கார்களில் அதிகப்பட்சமாக காருக்குள் 5 இடங்களில் ஏசி வெண்ட்ஸ் பகுதி வழங்கப்படுகின்றன.
முதன்முறையாக பயன்படுத்துபவர்களுக்கு சிரமம்: இதுவரையில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோலின் சிறப்பம்சங்களையே பார்த்து வந்தோம். ஆனால் இந்த தொழிற்நுட்பத்தில் சில குறைகளும் உள்ளன. அதில் முக்கியமானது, புது யூஸர்களால் இதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை உடனடியாக கற்றுக்கொள்ள முடியாதது ஆகும். அதேபோல், மேனுவல் ஏசி கார்களை பயன்படுத்துபவர்களுக்கும் ஆட்டோமேட்டிக் ஏசி கார்கள் ஆரம்பத்தில் சற்று அசவுகரியமாக இருக்கும்.

அதிக பராமரிப்பு செலவு: ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் தொழிற்நுட்பத்தில் உள்ள மற்றொரு குறைப்பாடு. மேனுவல் ஏசி அமைப்பை காரில் பொருத்துவதும்/ பழுது பார்ப்பது எளிமையானது. ஆனால் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டங்கள் அவற்றின் பல்வேறு சென்சார்களால் விலைமிக்கவை. இதனால் அவை பழுதாகினால் மாற்றுவதும் செலவுமிக்கது ஆகும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: எளிமையே எப்போதும் சிறந்தது என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் சொகுசாக வாழ நினைத்தால் பணத்தை செலவழித்துதான் ஆக வேண்டும். ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் அம்சம் பழுதாகாத வரையில் சிறப்பான ஒன்றே. அதுமட்டுமின்றி, இந்தியா போன்ற வெப்பமான நாட்டில் காரில் சவுகரியமாக பயணம் செய்ய இந்த தொழிற்நுட்பம் அவசியமானதாகும்.


Click it and Unblock the Notifications









