ஆட்டோமெட்டிக் கியர் காரில் பிரேக் ஃபெயிலியர் ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது?
நீங்கள் காரில் வேகமாக சென்று கொண்டிருக்கிறீர்கள் அப்பொழுது திடீரென காரில் பிரேக் ஃபெயிலியராகி விடுகிறது. அப்பொழுது காரை நிறுத்த வேண்டும் என்றால் பலரும் சொல்வது காரின் கிளட்சை மிதித்து கியரை டவுண் செய்து காரின் வேகத்தை குறைக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் மேனுவல் கியரே இல்லாத ஆட்டோமெட்டிக் கியர் கார்களில் இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது விரிவாக காணலாம் வாருங்கள்.
காரில் பயணம் செய்ய வேண்டும் என்றால் யாருக்க தான் பிடிக்காது? வாகனங்களில் பயணம் செய்யும் பலர் அது குறித்த ஆபத்தை பெரிய அளவில் உணராமல் இருப்பார்கள். இன்றைய கார்களில் கார் வேகமாக பயணிக்கும் போது பிரேக் ஃபெயிலியர் நடப்பது என்பது வெகுவாக குறைந்துவிட்டது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தரமான பிரேக்குகளை தற்போது தயாரிக்கின்றனர். ஆனால் முற்றிலும் இந்த பிரச்சனை இல்லை என சொல்லிவிட முடியாது.

இன்றைக்கும் பிரேக் ஃபெயிலியர் என்ற பிரச்சனை இருக்கிறது. பொதுவாக மேனுவல் கியர் ஆப்ஷன் கொண்ட கார்களில் பலர் இந்த பிரச்சனையை பார்த்திருப்பார்கள். இப்படி பிரச்சனையை பார்த்த பலர் இதை எப்படி சமாளிக்க வேண்டும் என பல இடங்களில் படித்திருப்பார்கள். சிலர் இதை ஆபத்தான சூழ்நிலையில் பயன்படுத்திருப்பார்கள்.
மேனுவல் கியர் கார்களில் பிரேக் ஃபெயிலியர் ஏற்பட்டால் அதில் கியரை டவுண் செய்து வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும். வேகம் குறைய குறைய மோதல் நடந்தாலும் ஆபத்து குறையும். இதன் காரணமாக இந்த வழியை பின்பற்ற சொல்லுவார்கள். ஆனால் ஆட்டோமெட்டிக் கார்களில் கியர் கிடையாது அப்பொழது எப்படி இந்த சூழ்நிலையில் இருந்து தப்பிப்பது?

ஆட்டோமெட்டிக் கார்களில் வேகமாக போகும் போது பிரேக் ஃபெயிலியர் ஏற்பட்டால் முதலில் ஆக்ஸிலரேட்டரை ரிலீஸ் செய்ய வேண்டும். இதனால் முதலில் வாகனத்தின் வேகத்தை குறைக்க உதவும், ஆட்டோமெட்டிக் காரில் ஆக்ஸிலரேட்டரை ரிலீஸ் செய்து வேகம் குறைந்தால் ஏஎம்டி போன்ற கார்களில் கியர் தானாக குறைந்துவிடும்.
வேகம் வெகுவாக குறைந்ததும் நீங்கள் பார்க்கிங் பிரேக்கை பயன்படுத்தி வாகனத்தை நிறுத்த முயற்சி செய்யலாம். அதே நேரம் சடனாக இந்த பிரேக்கை பயன்படுத்த முயற்சி செய்யாதீர்கள். இதனால் வாகனம் வேகம் மெது மெதுவாக குறையும். இதனால் முடிந்தால் பிரேக்கை விட்டு விட்டு பிடித்தால் இன்னும் பிரேக் திறன் சிறப்பாக இருக்கும்.

பலர் ஆட்டோமெட்டிக் கார்களில் பிரேக் ஃபெயிலியர் ஏற்பட்டால் பலர் கியரை நியூட்டரலில் போட வேண்டும் என கருதுகிறார்கள். இது முற்றிலும் தவறு, கார் கியர் போசிஷனில் இந்தால் தான் ஆக்ஸிலரேட்டர் அழுத்தவில்லை என்றால் வேகம் குறையும். நியூட்டரலில் இருந்தாலும் காரின் வேகம் வேகமாக குறையாது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனஓட்டிகள் பலருக்கு இந்த வாகனம் ஆட்டேமெட்டிக் கியரில் இருக்கும் போது பிரேக் ஃபெயிலியர் ஏற்பட்டால் எப்படி சமாளிப்பது என தெரியாமல் இருப்பார்கள். அவர்களுக்கு இந்த டிப்ஸ் மிக உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









