ஆயுத பூஜைக்கு காரை கிளீன் பண்ண போறீங்களா? இப்படி பண்ணா தான் மொத்தமா கிளீன் ஆகும்!

ஆயுத பூஜை அன்று நாம் அன்றாம் பயன்படுத்தும் கருவிகள், ஆயுதங்களுக்கு நன்றி செலுத்தும் நாளாக கொண்டாடுகிறோம். சிறிய கருவிகளாக இருந்தாலும் சரி, பெரிய கருவிகளாக இருந்தாலும் சரி நாம் அதற்கான மரியாதைகளை செலு்ததுவோம். பின், கத்தி, கத்திரிகோல், கம்பயூட்டர், லேப்டா, கார், பஸ்கள் கூட அன்றாடம் நாம் பயன்படுத்தும் கருவிகளாக உள்ளன. இந்த நாளில் அவைகளை சுத்தம் செய்து ஒரு நாள் ஒய்வு வழங்கி அதற்கு பூஜைகள் செய்து வணங்குவோம். இது இந்திய மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்த பண்டிகை இந்தியா முழுவதும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கேரளா, ஓடிசா, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இது கொண்டாடப்படுகிறது. நவராத்திரியை ஒட்டி இந்த ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் தங்கள் வாகனங்களை சுத்தம் செய்வார்கள். அதன்படி இந்த ஆயதபூஜைக்கு உங்கள் வாகனத்தை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்ற சில டிப்ஸ்களை காணலாம்.

Ayudha Pooja Car Cleaning

நீங்கள் உங்கள் வாகனத்தை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்று தான் சுத்தம் செய்ய வேண்டும் என்பதில்லை. நீங்கள் வீட்டிலேயே சுத்தம் செய்யலாம். முதலில் நீங்கள் காரை சுத்தம் செய்யும் முதன் அதன் மீது படிந்திருக்கும் லூசான தூசுகளை அகற்றவேண்டும். அதற்கான பிரஷ் அல்லது துணியை கொண்டு கார் மீது படிந்துள்ள தூசுகளை அகற்ற வேண்டும்.

அதன் பிறகு நீங்கள் வாட்டர் பைப் மூலம் கார் முழுவதும் ஒரு முறை ப்ரீ கிளீன் செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது மேற்புறமாக உள்ள அழுக்குகள் எல்லாம் காரிலிருந்து நீங்கிவிடும். இப்படியாக செய்யும் போது அதிக அழுத்தத்துடன் தண்ணீரை பீய்ச்சி அடிக்க வேண்டாம். இது வாகனத்தில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

Ayudha Pooja Car Cleaning

அதன் பிறகு டிடெர்ஜென்ட் போட்டு வாகனத்தை கழுவ வேண்டும். இதற்காக நீங்கள் கார் ஷாம்பூ, போன்ற விஷயங்களை பயன்படுத்தலாம்.இதை தண்ணீரில் கலந்து கார் முழுவதும் படரும் படி தெளிக்கவோ, ஸ்பிரே செய்யவோ வேண்டும். பின்னர் ஒரு சில நிமிடங்கள் இது அழுக்குடன் ரியாக்ட் செய்ய விட வேண்டும். இது மெதுவாக படர்ந்து அடர்ந்து அழுக்கு மீது ரியாக் செய்து அதை லூஸ் செய்துவிடும். இந்த இடத்தில் நீங்கள் ஃபோம் கிளினரை கூட பயன்படுத்தலாம். ஃபோம் அதிக அடர்த்தியானது. அதனால் ஃபோம் கிளினரை பயன்படுத்த அதிக நேரம் அதை ரியாக்ட் செய்ய விட வேண்டம்.

இந்த டிடெர்ஜென்ட் அல்லது ஃபோம் கார் வாகனம் முழுவதும் படர்ந்து ரியாக்ட்டானதை உறுதி செய்து பின்னர் தண்ணீர் மூலம் அதை சுத்தமாக கழுவ வேண்டும். இப்படியாக தண்ணீரை நீங்கள்வாகனத்தில் ஸ்பிரே செய்யம் போது குறந்தது 15 செ.மீ தூரத்தில் பைப்பை வைத்து ஸ்பிரே செய்ய வேண்டும். இந்த தருணத்தில் நீங்கள் சாஃப்ட் பிரஷ் வாஷ், பவர் பிரஷ், சுழலும் பிரஷ் ஆகியவற்றை கூட பயன்படுத்தலாம். இறுதியாக காரை தண்ணீரை வைத்து மொத்தமாக சுத்தம் செய்ய வேண்டும்.

Ayudha Pooja Car Cleaning

பின்னர் காரில் உள்ள தண்ணீர் ஒரளவிற்கு காய்ந்த பிறகு நல்லசாஃப்டான துணியை வைத்து காரை முழுவதுமாக துடைத்து எடுக்க வேண்டும். இல்லை என்றால் நீர் துளிகள் ஆங்காங்கே நின்று காய்ந்து அதுவே ஒரு வடுவாக மாறிவிடும். இதை செய்தால் காரின் வெளிப்புறம் சத்தமாகி விடும். இதை எல்லாம் செய்வதற்கு முன்பு காரின் உட்புறத்தை நீங்கள் சுத்தம் செய்ய வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆயுத பூஜை நாளில் வாகனங்களை சுத்தம் செய்வது பலர் செய்யும் ஒரு விஷயமாக இருக்கிறது. இதனால் நீங்கள் வாகனத்தை சுத்தம் செய்யும் போது மேலே சொன்ன விஷயங்களை பின்பற்றறுங்கள் பலர் வாகனத்தின் அடி பகுதியை சுத்தம் செய்ய மறந்துவிடுவார்கள். நீண்ட நாட்களாக வாகனத்தின் அடிப்பகுதி சுத்தம் செய்யபடாமல் இருந்தால் அது பிரச்சனை தான். அதனால் அதையும் சுத்தம் செய்வது நல்லது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 30, 2025, 11:20 [IST]
English summary
Ayudha pooja car cleaning home wash tips tricks
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X