இதுல ஓலாவை கிண்டல் வேற பண்றாங்க... 1 வருடத்தில் வேலையை காட்டிய பஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! தடுக்க என்ன பண்றது?

எலெக்ட்ரிக் வாகனங்களில் (EV) தீ விபத்துகள் ஏற்படுவது குறித்த கவலைகள் மீண்டும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. சமீபத்தில் மஹாராஷ்டிராவில் பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏற்பட்ட தீ விபத்து இந்த விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது. இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, உங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கான சில முக்கியக் குறிப்புகளை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மேற்கு மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள இச்சல்கரஞ்சி என்ற இடத்தில் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் திடீரென தீப்பிடித்தது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக அறிவித்துள்ளது.

bajaj chetak fire incident

PTI அறிக்கையின்படி, பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர் உலோகத்தால் ஆன உடல் பகுதியைக் கொண்டிருப்பதால், வயரிங் மற்றும் பேனல்கள் மட்டுமே தீயினால் பாதிக்கப்பட்டன. உள்ளூர் தீயணைப்புத் துறையினர் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்தனர். விபத்துக்குள்ளான ஸ்கூட்டர் ஒரு வயதுடையது மற்றும் 10,000 கி.மீ தூரம் ஓடியிருந்தது.

கடந்த ஆண்டு டிசம்பரில் சத்ரபதி சம்பாஜிநகரில் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தபோது, அது தீ விபத்து அல்ல, ஒரு பிளாஸ்டிக் பாகத்திலிருந்து புகை வெளியான ஒரு சிறிய நிகழ்வு என்று பஜாஜ் ஆட்டோ தெரிவித்திருந்தது. அந்நிறுவனத்தின் CEO ராஜீவ் பஜாஜ், "Ola toh Ola hai, Chetak shola hai" என்று ஓலா (Ola) ஸ்கூட்டர்களைக் கிண்டல் செய்த சில நாட்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நடந்தது.

bajaj chetak fire incident

எலெக்ட்ரிக் வாகனங்களில் தீ விபத்துகள் பொதுவாக அரிதாக இருந்தாலும், அவை நிகழும்போது தீயின் தீவிரம் அதிகமாக இருக்கும். உங்கள் எலெக்ட்ரிக் வாகனத்தை தீ விபத்துகளில் இருந்து பாதுகாக்க பின்பற்ற வேண்டிய ஐந்து முக்கிய குறிப்புகளை இனி பார்க்கலாம்.

பேட்டரியை அதிகமாக சார்ஜ் செய்வதைத் தவிர்க்கவும்: பெரும்பாலான எலெட்ரிக் வாகனங்களில் உள்ளமைக்கப்பட்ட பஃபர் இருந்தாலும், பேட்டரி முழுவதுமாக 100 சதவீதம் சார்ஜ் நிரம்பிய பின்னரும் தொடர்ந்து சார்ஜ் செய்வதைத் தவிர்க்கவும். பேட்டரியின் நீண்ட கால ஆயுள் மற்றும் பாதுகாப்புக்கு, 20 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்வது உகந்தது.

அடிக்கடி சார்ஜ் செய்வதைத் தவிர்க்கவும்: பேட்டரியை 100 சதவீதம் சார்ஜ் செய்து வைத்திருப்பது சிறந்த யோசனையாக தோன்றலாம், ஆனால் இது பேட்டரியின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. அடிக்கடி சார்ஜ் செய்வது வெப்பத்தை உருவாக்கி, பேட்டரிக்கு அழுத்தம் கொடுக்கும். வாகனம் ஓட்டிய 30 நிமிடங்களுக்குப் பிறகு சார்ஜ் செய்யவும்.

bajaj chetak fire incident

அடிக்கடி ஃபாஸ்ட் சார்ஜிங்கைத் தவிர்க்கவும்: ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியானது விரைவானது என்றாலும், அதை அடிக்கடி பயன்படுத்துவது பேட்டரியை சேதப்படுத்தும். எனவே, மிகவும் அவசியமில்லாத ஃபாஸ்ட் சார்ஜிங்கைத் தவிர்க்கவும். முடிந்தவரை வீட்டிலேயே மெதுவாக சார்ஜ் செய்வது, பேட்டரியின் ஆயுளை நீட்டிக்க உதவும்.

உண்மையான சார்ஜிங் உபகரணங்களைப் பயன்படுத்தவும்: செலவைக் கருதி உள்ளூர் சார்ஜர்களைப் பயன்படுத்துவது பேட்டரிக்கு ஆபத்தை விளைவிக்கும். உங்கள் மின்சார வாகனத்திற்கு எப்போதும் உண்மையான சார்ஜிங் உபகரணங்களைப் பயன்படுத்துவது பாதுகாப்புக்கு முக்கியம் ஆகும். பேட்டரி பார்ட்ஸில் ஏதேனும் மாற்றங்களை செய்வதாக இருந்தாலும், தகுந்த ஷோரூம் அதிகாரிகளின் ஆலோசனைப்படி செய்வது நல்லது.

நிழலான இடத்தில் சார்ஜ் செய்யவும்: நேரடி சூரிய ஒளியின் கீழ் மின்சார வாகனத்தை சார்ஜ் செய்வது பேட்டரிக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, வெப்பநிலையைக் குறைக்கும் வகையில், நிழலான இடத்தில் வாகனத்தை நிறுத்தி சார்ஜ் செய்வது நல்லது. வாகனத்தில் இருந்து பேட்டரியை தனியாக கழற்றி கொண்டு சென்று சார்ஜ் செய்வதாக இருந்தால், இன்னும் கூடுதல் கவனம் தேவை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் வாகனங்களில் தீப்பிடிப்பது கடந்த காலங்களில் இருந்து பெருமளவு குறைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், சமீபத்தில் மஹாராஷ்டிராவில் ஏற்பட்டது போல சில சமயங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களில் தீ பிடிப்பது நிகழ்வதால், இதனை சரிச்செய்யும் முயற்சியாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் புது, புது முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில், வாகனங்களை பயன்படுத்துபவர்களும் மேற்கூறப்பட்ட வழிமுறைகளை பின்பற்றுவது அவசியமாகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 17, 2025, 10:55 [IST]
English summary
Bajaj chetak fire incident how to protect electric scooters from catching fire
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X