புதுசா கார் வாங்கும் போது இது இருக்குதான்னு பார்த்து வாங்குங்க! இதுல இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
அடாஸ் என்ற ஓட்டுநர் உதவி அமைப்புகள் (ADAS) வாகனத்தின் பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்துவதன் மூலம் வாகனம் டிரைவிங்கில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த அமைப்புகள் வாகனம் நிகழப்போகும் மோதல்களைக் கணிக்கின்றன, டிரைவரை எச்சரிக்கின்றன, மேலும் ஆட்டோமெட்டிக் முறையில் பிரேக்குகளைப் பயன்படுத்துகின்றன. உங்கள் காரில் ADAS இருப்பதால் பத்து நன்மைகள் உள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
விபத்து தவிர்ப்பு, பாதை பராமரிப்பு மற்றும் பாதசாரிகளை கண்டறிதல் போன்ற முக்கியமான தகவல்களை வழங்குவதன் மூலம் ADAS தொழிற்நுட்பம் வாகனத்தின் பாதுகாப்பை கணிசமாக அதிகரிக்கிறது. இந்த தொழில்நுட்பம் வாகனம் விபத்தில் சிக்கும் வாய்ப்பைக் குறைக்கிறது, பாதுகாப்பான டிரைவிங் அனுபவத்தை இது உறுதி செய்கிறது.

நீங்கள் தற்செயலாக வாகனத்தில் பயணிக்கும் போது உங்கள் வாகனம் லேனை விட்டு வெளியேறினால், ADAS உடனடியாக உங்களை எச்சரிக்கும். பாதுகாப்பான சாலை வழி செலுத்தலை ஊக்குவிக்கும் வகையில், உங்கள் பாதையில் நீங்கள் தொடர்ந்து செல்வதை இந்த அம்சம் உறுதி செய்கிறது. இதனால் விபத்தை தவிர்க்கலாம்
ADAS உடன், பயணக் கட்டுப்பாடு ஆட்டோமெட்டிக்காக. இந்த சிஸ்டம் முன்னால் செல்லும் வாகனத்திலிருந்து பாதுகாப்பான தூரத்தில் செல்வதை மெயின்டெயின் செய்கிறது. மற்றும் அதற்கேற்ப வேகத்தை சரி செய்கிறது. இந்த ஆட்டோமேஷன் தொழிற்நுட்பம் நீண்ட தூர பயணங்களை பாதுகாப்பானதாக மாற்றுகிறது. இதனால் விபத்து ஏற்படும அபாயம் குறைகிறது.

ADAS தொழிற்நுட்பம், காரைச் சுற்றி டிரைவருக்கு நேரடியாகத் தெரியாத பகுதிகளைக் கண்டறிய ஓட்டுநர்களுக்கு உதவுகிறது. பாதைகளை மாற்றுவதற்கும் பாதுகாப்பாக முந்திச் செல்வதற்கும் இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த தொழிற்நுட்பம் ஏகப்பட்ட விபத்துக்களை தவிர்க்க வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனையால் பல விபத்துகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ADAS தொழிற்நுட்பம் பார்க்கிங் உதவி அம்சத்துடன் பார்க்கிங் செய்வதை எளிதாகிறது. இது ஓட்டுநர்களை துல்லியமாகவும் பாதுகாப்பாகவும் வாகனத்தை நிறுத்த வழிகாட்டுகிறது, பார்க்கிங் செய்யும்போது ஏற்படும் சிறிய மோதல்களின் ஆபத்தை இந்த தொழிற்நுட்பம் குறைக்கிறது. இதனால் தேவையில்லாத செலவுகள் குறையும். இந்த தொழிற்நுட்பம் இல்லாமல் பலர் கார் பாகங்களை ஸ்கிராச்சாக்கிவிடுகின்றனர்.

பார்க்கிங் செய்யும் போது டிரைவர் சில விஷயங்களை கவனிக்காமல் விட்டால் சிஸ்டம் பாதையில் ஏற்படும் திடீர் தடைகளைக் கண்டறிந்து தானாகவே பிரேக்குகளைப் பயன்படுத்துகிறது. இந்த விரைவான செயல்பாடு விபத்துக்கான வாய்ப்புகளை கணிசமாகக் குறைக்கிறது.பார்க்கிங் செய்யும் போது பல விபத்துகள் நடக்கிறது. முக்கியமாக காரின் சில பாகங்கள் ஆங்காங்கே உரசி ஸ்கிராச் ஆகிறது. இதை இதன் மூலம் தடுக்கலாம்.
ADAS தொழிற்நுட்பம் சாலையில் உள்ள போக்குவரத்து குறிகளை அடையாளம் கண்டு, அவற்றைப் பற்றி ஓட்டுநருக்குத் தெரிவிக்கிறது. இந்த அம்சம் போக்குவரத்து விதிகளை டிரைவர் கடைபிடிக்கவும், சாலை விதிமுறை மீறல்களை தவிர்க்கவும் உதவுகிறது. இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்பும் குறைகிறது. டிரைவரும் எச்சரிக்கையாக வாகனம் ஒட்ட முடியும்.
லாங் டிரைவ் செல்லும் போது டிரைவர் சோர்வடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ADAS தொழிற்நுட்பம் டிரைவரின் நிலையைக் கண்காணித்து, தேவைப்படும்போது ஓய்வு எடுக்க அறிவுறுத்துகிறது, இதனால் சோர்வு காரணமாக ஏற்படும் விபத்து அபாயங்கள் கணிசமான அளவு குறைக்கிறது. தற்போது இரவில் நடக்கும் பெரும்பாலான விபத்துகள் டிரைவர்கள் தூங்குவதால் தான் நடக்கிறது.
சாலை கண்டிஷன்களின் அடிப்படையில் ஹெட்லைட்களின் திசை மற்றும் தீவிரத்தை அடாஸ் அமைப்பு தானியங்கியாக சரிசெய்கிறது. இந்த சரிசெய்தல் இரவில் விசிபிளிட்டி அதிகரிக்கிறது, இரவில் வாகனம் ஓட்டுவது பாதுகாப்பானது. எதிரில் வரும் வாகன ஓட்டிக்கும் கண் கூச்சம் ஏற்பாடமல் இருக்கும். இரவு வாகனம் ஓட்டுபவர்களுக்கு தான் இந்த பிரச்சனை எவ்வளவு பெரிய விஷயம் என தெரியும்.
வாகனத்தின் முன்பக்கம் கீழ் பகுதியில் இருக்கும் பொருளில் மோதாமல் இருக்க முன் மோதல் அமைப்பு சாத்தியமான வாகன மோதல்களைக் கணித்து ஓட்டுநரை எச்சரிக்கிறது. சில சமயங்களில், விபத்துகளைத் தடுக்க இது ஆட்டோமெட்டிக் முறையில் பிரேக்குகளைப் பயன்படுத்துகிறது. இதனால் சிறு சிறு தேவையில்லாத விபத்து தவிர்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகனங்களில் ADAS தொழிற்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு வாகனம் ஓட்டுவதை மிகவும் பாதுகாப்பானதாகவும், வசதியாகவும் ஆக்கியுள்ளது. ஆட்டோமெட்டிக் பயணக் கட்டுப்பாடு, பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங், மற்றும் அடாப்டிவ் ஹெட்லைட்கள் போன்ற அம்சங்களை வழங்குவதன் மூலம், சாலையில் செல்லும் அனைவருக்கும் பாதுகாப்பான பயணத்தை இது உறுதி செய்கிறது.


Click it and Unblock the Notifications









