கேரேஜில் பார்க் செய்வதால் காருக்கு இத்தனை பயன்களா? இதை படித்தால் ஆச்சரியத்தில் மூழ்கி போவீர்கள்...!
சொந்தமாக கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் கேரேஜூக்கு என தனியாக இடம் ஒதுக்க முடியாத காரணத்தால், ஒரு சிலர் காரை வெட்ட வெளியில் அப்படியே 'பார்க்' செய்து விடுகின்றனர். ஆனால் அது தவறு. காரை கேரேஜில் 'பார்க்' செய்வதால் கிடைக்கும் பலன்கள் என்ன? என்பதை இந்த செய்தியில் காணலாம். இதை படித்தால் நீங்களும் உங்கள் வீட்டில் உடனடியாக ஒரு கேரேஜை தயார் செய்து விடுவீர்கள் என்பது மட்டும் உறுதி. ஏனெனில் நமது மிகப்பெரிய முதலீடான காரை முறையாக பாதுகாக்க வேண்டியது நமது கடமை அல்லவா?

திருட்டு பயம் அறவே வேண்டாம் பாஸ்!
ஒரு சிலருக்கு காரை 'பார்க்' செய்தபின், அதே இடத்தில் பத்திரமாக கார் இருக்கிறதா? என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும். இப்படியான அனுபவம் நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும் என்பதே உண்மை. ஆனால் காரை கேரேஜில் 'பார்க்' செய்து விட்டால் திருட்டு பயம் என்பது அறவே இல்லாமல் போய்விடும். நிம்மதியாக தூங்கலாம். அல்லது வேறு ஏதாவது ஒரு வேலையில் நமது கவனத்தை முழுமையாக செலுத்தலாம்.

வேண்டாதவங்க நிறைய பேர் இருக்காங்களா?
வன்முறை, கலவரம் உள்ளிட்ட எவ்விதமான அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தாலும்,
கேரேஜில் 'பார்க்' செய்யப்படும் கார்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது. அதுமட்டுமின்றி நம்மை பிடிக்காதவர்கள் காழ்ப்புணர்ச்சி காரணமாக காரை ஏதேனும் செய்ய நினைத்தாலும் அது முடியாது.

டென்ட், ஸ்க்ராட்ச்களில் இருந்து காக்கலாம்
காரை வெட்ட வெளியில் நிறுத்துவதால், மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்து, காரின் வெளிப்புறத்தில் சேதம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அத்துடன் தேவையில்லாமல் ஒரு சில இடங்களில் டென்ட், ஸ்க்ராட்ச்கள் ஏற்பட வாய்ப்புகளும், கண்ணாடிகள் உடைந்து போகும் அபாயமும் அதிகம் உள்ளன.

யு.வி. கதிர்கள் ரொம்ப டேஞ்சர்
சூரியனில் இருந்து வெளிப்படும் யு.வி.கதிர்கள் காரை சேதப்படுத்தக்கூடியவை. ஆனால் பெரும்பாலான கார் ஓனர்கள் அதை கருத்தில் கொள்வதில்லை. அதிகபட்ச வெப்பம் மற்றும் அதிகபட்ச குளிர் ஆகிய இரண்டுமே காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

வானிலை மாறினாலும் நோ ப்ராப்ளம்!
மழை, பனி, காற்று மற்றும் இதர சில வானிலை காரணிகள், கார்களுக்கு எதிரி போன்றவை. அவை ஒரு சில அமிலங்கள் மற்றும் அழுக்குகளை படிய வைப்பதால், காரின் வெளிப்புறத்தில் சேதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதாவது காரின் வெளிப்புறத்தில் ஒரு சில இடங்களில் துரு பிடிக்கலாம் அல்லது பெயின்ட் கோட்டிங்கள் பலவீனம் அடையலாம்.

ரீ சேல் வேல்யூ அதிகம் வேணுமா?
ஒரு காரை பார்த்தவுடன் அது கேரேஜில் நிறுத்தப்படுமா? அல்லது வெட்ட வெளியில் நிறுத்தப்படுமா? என்பதை ஒரு அனுபவம் வாய்ந்த மெக்கானிக் சொல்லி விடுவார். ஏனெனில் கேரேஜில் நிறுத்தப்பட்டால், அழுக்கு படியாமல் புத்தம் புதியது போல கார் இருக்கும். இதன் மூலம் காரின் ரீ சேல் மதிப்பு அதிகரிக்கும்.

இன்ஜினுக்கும் பெஸ்ட்!
கேரேஜானது ஒரு காரை சற்று வெதுவெதுப்பாக வைத்திருக்கும். இதனால் காரில் உள்ள ஆயில் உள்ளிட்ட திரவ பொருட்கள் ஸ்டேபில் ஆக இருக்கும். இதன் மூலம் காரின் இன்ஜின் சிறப்பாக இயங்கும் என ஆட்டோமொபைல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

உடனே ரெடி பண்ணுங்க!
இப்போது கேரேஜின் அவசியத்தை முழுமையாக உணர்ந்திருப்பீர்கள். உடனடியாக ஒரு கேரேஜை தயார் செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் உங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். அந்த கேரேஜை வீட்டை ஒட்டியே அமைத்து விடுவது நல்லது. ஏனெனில் வெளியில் செல்லும்போது உடனடியாக காரை ஓட்டி செல்லலாம். மழை உள்ளிட்ட காரணங்களால், நடந்து சென்று காரை எடுத்து வருவதில் தாமதம் ஏற்படாது.


Click it and Unblock the Notifications








