இந்த சின்ன கருவியை மாற்றினால் போதும் மைலேஜ் சும்மா தாருமாறா கிடைக்கும்! இது என்ன தெரியுமா?

உங்கள் வாகனத்தின் இன்ஜினைப் முறையாக பராமரிப்பது வாகனத்தின் சிறப்பான மைலேஜிற்கு முக்கியமானது. இதற்கு ஒரு முக்கிய கருவி ஸ்பார்க் பிளக் ஆகும். ஆனால் அதை மாற்றுவது உண்மையில் மைலேஜை மேம்படுத்துமா? இந்தியாவில் ஸ்பார்க் பிளக்குகளை மாற்றுவதற்கு விலை மற்றும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்த விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

ஸ்பார்க் பிளக்குகள் இன்ஜினில் உள்ள காற்று-எரிபொருள் கலவையை பற்றவைத்து, உங்கள் வாகனத்தை இயக்க உதவுகிறது. காலப்போக்கில், அவை தேய்ந்து, இயந்திரத்தின் மைலேஜை பாதிக்கலாம். ஸ்பார்க் பிளக்கை சரியான நேரத்தில் பராமரித்தால் சிறந்த மைலேஜ் மற்றும் எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றை பெற முடியும்.

Spark Plug Replacement

ஸ்பார்க் பிளக்குகளை மாற்றுவதற்கான செலவு கார் மாடல் மற்றும் பிளக் வகையைப் பொறுத்து மாறுபடும். சராசரியாக, ஒரு பிளக்கிற்கு ₹200 முதல் ₹1,000 வரை வெளிமார்கெட்டில் விற்பனையாகி வருகிறது. சர்வீஸ் சென்டர்களில் இதை பொருத்துவதற்காக லேபர் கட்டணங்கள் அதிகமாக இருக்கின்றன. தற்போது பொதுவாக ₹500 முதல் ₹1,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

புதிய ஸ்பார்க் பிளக்குகள் மென்மையான இன்ஜின் இயக்கத்திற்கும் சிறந்த எரிபொருள் சிக்கனத்திற்கும் வழிவகுக்கும். அவை இன்ஜின் உள்ள சரியான அளவு எரிப்பை நிகழ செய்கின்றன, இதனால் எரிபொருள் விரயம் குறைகிறது. இது காலப்போக்கில் எரிபொருள் செலவில் குறிப்பிடத்தக்க சேமிப்பை உங்களுக்கு ஏற்படுத்தும்.

Spark Plug Replacement

தேய்ந்து போன ஸ்பார்க் பிளக்குகள் முழுமையடையாத எரிப்பை இன்ஜின் உள்ளே ஏற்படுத்துகின்றன, இதனால் உங்கள் வாகனம் குறைந்த மைலேஜுக்கு கொடுக்க வழிவகுக்கும். அவற்றை மாற்றினால் மைலேஜை 30% வரை எரிபொருள் செலவு குறையும். இது ஓட்டுநர் டெக்னிக்கள் மற்றும் பராமரிப்பு பழக்கங்களைப் பொறுத்து மாறுபடும்.

ஒவ்வொரு 20,000 முதல் 30,000 கிமீ வாகனம் ஓடிய பிறகோ அல்லது உற்பத்தியாளர் பரிந்துரைத்தபடி ஸ்பார்க் பிளக்குகள் சரிபார்க்கப்பட வேண்டும். இன்ஜினை ஸ்டார்ட் செய்வதில் சிரமம், இன்ஜின் ஸ்டார்ட் ஆகாத நிலை மற்றும் மோசமான ஸ்டார்ட் ஆகியவை ஸ்பார்க் பிளக்கின் தேய்மானத்தின் அறிகுறிகளாகும்.

Spark Plug Replacement

ஸ்பார்க் பிளக்கை மாற்றுவது அடிப்படையில் இன்ஜின் குறித்த தெளிவான அறிவை கொண்டவர்களுக்கு வீட்டிலேயே சுலபமாக செய்யும் பணி தான். இருப்பினும், தொழில்முறையில் சரியான ஃபிக்ஸிங் செய்ய அனுபவம் வேண்டும். இது தவறாக செய்யப்பட்டால் இன்ஜினிற்கு அதன் பிறகு சேதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

ஸ்பார்க் பிளக்குகளை மாற்றுவது என்பது உங்கள் காரின் செயல்திறன் மற்றும் மைலேஜிற்கான குறிப்பிடத்தக்க நன்மைகளைக் கொண்ட ஒரு சிறிய முதலீடாக இருக்கிறது. வழக்கமான செக்கப் மற்றும் சரியான நேரத்தில் ஸ்பார்க் பிளக்கை மாற்றுவது நீண்ட காலத்திற்கு உங்கள் வாகனம் நல்ல மைலேஜை தருவதற்கு வழி வகுக்கும். இதனால் உங்கள் பணத்தை அதிகம் சேமிக்க முடியும்.

அதே நேரத்தில் தேவையில்லாமல் ஸ்பார்க் பிளக்கை மாற்றுவதும் உங்களுக்கு தேவையில்லாத செலவுகளை ஏற்படுத்தும். முறையாக வாகனம் ஓட்டும் பட்சத்தில் நீங்கள் வாகன தயாரிப்பு நிறுவனம் மேனுவலில் பரிந்துரை செய்த குறிப்பிட்ட கிமீ ஓட்டியதற்கு பின்பே நீங்கள் ஸ்பார்க் பிளக்கை மாற்றினால் போதுமானது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இது குறித்த தெளிவான விளக்கங்களை தங்கள் மேனுவலில் வழங்கியிருப்பார்கள். மேலும் உரிய சர்வீஸ் சென்டர்களுக்கு செல்லும் போதும் இது குறித்த பரிந்துரைகள் உங்களுக்கு வழங்கப்படும் அதை ஃபாலோ செய்தாலே எல்லாம் சரியாக நடக்கும். ஸ்பார்க் பிளக் தேய்மானம் மற்றும் அதற்கான அறிகுறிகள் மீது மட்டும் கவனமாக இருங்கள்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 6, 2024, 7:00 [IST]
English summary
Replacing spark plugs is essential for car maintenance, improving engine performance and fuel efficiency. Costs range from ₹200 to ₹1,000 per plug, with potential mileage improvements up to 30%.
மேலும்... #car tips
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X