விமான டிக்கெட்களை புக் செய்ய சரியான நேரம் எது? பலருக்கு இது தெரிவதில்லை... சில நூறு ரூபாய்களை சேமிக்கலாம்!!

விமான பயணத்திற்கான டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்கான சிறந்த நாள் & நேரம் எது? வாருங்கள் இந்த செய்தியில் இனி அதனை பற்றி விரிவாக விவாதிப்போம்.

விமான டிக்கெட்களை புக் செய்ய சரியான நேரம் எது? பலருக்கு இது தெரிவதில்லை... சில நூறு ரூபாய்களை சேமிக்கலாம்!!

2020இன் துவக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட ஏறக்குறைய 2 வருடங்களாக கொரோனா வைரஸ் பரவலினால் பெரியதாக சுற்றுலா எங்கும் செல்ல முடியாமல் முடங்கி கிடந்தோம். ஏனெனில் அந்த அளவிற்கு மத்திய, மாநில அரசாங்கங்களினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.

விமான டிக்கெட்களை புக் செய்ய சரியான நேரம் எது? பலருக்கு இது தெரிவதில்லை... சில நூறு ரூபாய்களை சேமிக்கலாம்!!

ஆனால் நடப்பு 2022ஆம் ஆண்டில் இருந்து கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெரியளவில் தளர்த்தப்பட்டுவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும். இதன் காரணமாக, 2019இல் எந்த அளவிற்கு வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணங்கள் மக்களால் மேற்கொள்ளப்பட்டதோ அந்த அளவிற்கான பயணங்கள் தற்போதும் பதிவாகி வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

விமான டிக்கெட்களை புக் செய்ய சரியான நேரம் எது? பலருக்கு இது தெரிவதில்லை... சில நூறு ரூபாய்களை சேமிக்கலாம்!!

குறிப்பாக, அமெரிக்க இளம் தலைமுறையினரில் சுமார் 60 சதவீதத்தினர் ஒவ்வொரு வார இறுதி விடுமுறை நாட்களிலும் விமானங்களில் பயணம் செய்ய ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இருப்பினும் நம் இந்தியா உள்பட மக்கள் பலருக்கு எந்த காலத்தில் சுற்றுலா பயணங்களை மேற்கொள்வது என்கிற சந்தேகம் இன்னமும் உள்ளது.

விமான டிக்கெட்களை புக் செய்ய சரியான நேரம் எது? பலருக்கு இது தெரிவதில்லை... சில நூறு ரூபாய்களை சேமிக்கலாம்!!

அதாவது வெயில் சுட்டெரிக்கும் கோடை காலத்தில் குளிர் பிரதேசங்களுக்கு செல்வதா அல்லது அதே குளிர் பிரதேசங்களின் முழு அழகையும் காண பனி காலங்களில் சுற்றுலா செல்வதா என்கிற கேள்வி நிச்சயம் உங்களில் பலரது மனதில் இருக்கும். இது ஒருபுறம் இருக்க, சிலருக்கு விமான டிக்கெட்களை எந்த நாட்களில், எந்த நேரத்தில் முன்பதிவு செய்வது என்கிற சந்தேகம் கூட இருக்கலாம்.

விமான டிக்கெட்களை புக் செய்ய சரியான நேரம் எது? பலருக்கு இது தெரிவதில்லை... சில நூறு ரூபாய்களை சேமிக்கலாம்!!

முன்னர் காலங்களில், அதாவது 21ஆம் நூற்றாண்டின் துவக்கங்களில் செவ்வாய் கிழமைகளில் விமான டிக்கெட்களை முன்பதிவு செய்வது விஐபி-கள் மத்தியில் வாடிக்கையாக இருந்தது. ஆனால் தற்போதைய கதையே வேறு. ஏனெனில் தற்போதைய காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட பெரும்பாலானோர் விமானங்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். எந்த அளவிற்கு என்றால், அருகில் உள்ள மற்றொரு முக்கிய மாநகரத்திற்கு கூட விமானங்களில் செல்வதை பழக்கப்படுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

விமான டிக்கெட்களை புக் செய்ய சரியான நேரம் எது? பலருக்கு இது தெரிவதில்லை... சில நூறு ரூபாய்களை சேமிக்கலாம்!!

ஏற்கனவே கூறியதுபோல், இதில் பெரும்பாலானோர் வார இறுதி விடுமுறை நாட்களையே தேர்வு செய்கின்றனர். விமான டிக்கெட்களை, இரயில் டிக்கெட்கள் போன்று ஒரு வாரத்திற்கு முன்னரே முன்பதிவு செய்ய வேண்டும் என்கிற தேவையெல்லாம் இல்லை. 2-3 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்தாலே போதுமானது. ஒரு சில வழித்தடங்களுக்கு முந்தைய நாளில் தேடினால் கூட டிக்கெட் கிடைக்க வாய்ப்புள்ளது.

விமான டிக்கெட்களை புக் செய்ய சரியான நேரம் எது? பலருக்கு இது தெரிவதில்லை... சில நூறு ரூபாய்களை சேமிக்கலாம்!!

ஏனெனில் அந்த அளவிற்கு ஏர்லைன்களின் எண்ணிக்கையும், அவற்றிற்கு சொந்தமான விமானங்களின் எண்ணிக்கையும் தற்சமயம் அதிகமாக உள்ளன. ஆதலால் வார இறுதி நாட்களுக்கு 2-3 நாட்களுக்கு முந்தைய நாட்களில்தான் விமான டிக்கெட்களை முன்பதிவு செய்ய இணையத்தில் கூட்டம் அலைமோதும். அத்தகைய நேரத்தில் தள்ளுபடி அல்லது சலுகைகளை வழங்க டிக்கெட் முன்பதிவு செய்யும் நிறுவனங்களுக்கு தேவை இருக்காது.

விமான டிக்கெட்களை புக் செய்ய சரியான நேரம் எது? பலருக்கு இது தெரிவதில்லை... சில நூறு ரூபாய்களை சேமிக்கலாம்!!

ஆனால் வார இறுதி விடுமுறை நாட்கள் முடிவடையும் தருவாயில் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்கும். ஆகையால் அந்த நேரம் பார்த்துதான் வாடிக்கையாளர்களை ஈர்க்க முன்பதிவு செய்யும் நிறுவனங்கள் தள்ளுபடி & சலுகைகளை அறிவிக்கும். ஆதலால் ஞாயிற்றுக்கிழமை மாலை - இரவு ஆனது விமான டிக்கெட்களை முன்பதிவு செய்ய சரியான தருணமாக பார்க்கப்படுகிறது.

விமான டிக்கெட்களை புக் செய்ய சரியான நேரம் எது? பலருக்கு இது தெரிவதில்லை... சில நூறு ரூபாய்களை சேமிக்கலாம்!!

எல்லா ஞாயிற்றுக்கிழமை இரவிலும் சலுகைகளை எதிர்பார்க்க முடியாது என்றாலும், பண்டிகை நாட்கள் & பள்ளி, கல்லூரிகளின் தொடர் விடுமுறை நாட்கள் உள்ள மாதங்களில் எதிர்பார்க்கலாம். ஆதலால், பண்டிகை நாட்கள் அதிகம் உள்ள ஜனவரி & ஆகஸ்ட் மாதங்களில் குடும்பத்துடன் விமானத்தில் பயணிக்க விரும்புபவர்கள் ஒரு ரவுண்ட் சென்று வாருங்கள்.

விமான டிக்கெட்களை புக் செய்ய சரியான நேரம் எது? பலருக்கு இது தெரிவதில்லை... சில நூறு ரூபாய்களை சேமிக்கலாம்!!

சில ஏர்லைன் நிறுவனங்கள் ஒரே வழித்தடத்திற்கு வாரத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே மாதிரியான கட்டணத்தை விதிப்பதில்லை. சில நூறு ரூபாய்களின் வித்தியாசத்துடன் டிக்கெட்களின் விலைகளை நிர்ணயித்து வைத்துள்ளன. எனவே சனி, ஞாயிற்றுக்கிழமையில் பயணிப்பதை காட்டிலும், செவ்வாய் அல்லது புதன்கிழமையில் விமானத்தில் பயணிப்பதன் மூலம் சில நூறு ரூபாய்களை சேமிக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 23, 2022, 11:52 [IST]
English summary
Best day time to book plane tickets
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+