பெட்ரோல், டீசலுக்கு செலவு செய்யும் பணத்தை மிச்சப்படுத்த இதை ஃபாலோ பண்ணுங்க! ஒவ்வொரு மாசமும் இலாபத்தை அள்ளலாம்!
சென்னை, பெங்களூரு மாநகர சாலைகளில் பெரிய பிரச்சனை என்னவென்றால், போக்குவரத்து நெரிசல்களுக்கு மத்தியில் வாகனத்தில் நின்று நின்று செல்வதாகும். இதன் விளைவாக வாகனத்தின் மைலேஜ் (Mileage) குறைகிறது. இன்று பெட்ரோல்/ டீசல் விற்கும் விலைக்கு வாகனங்களின் மைலேஜை சிறந்த அளவில் பராமரிப்பது பெரும் சவாலாக உள்ளது.
குறிப்பாக, கோடை காலத்தில் அதிகமாக ஏசி பயன்படுத்துவதால் என்ஜினின் வேலை அதிகமாகிறது. இது காரின் மைலேஜை குறைக்கிறது. இருப்பினும் கவலை வேண்டாம்... சில எளிமையான பழக்கங்களால் காரின் மைலேஜை அதிகரித்து ஒவ்வொரு மாதமும் கணிசமான தொகையை சேமிக்க முடியும். அதனை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

டிரைவிங் பழக்கங்கள் (Driving Habits): திடீரென அதிகமாக ஆக்ஸலரேஷனை கொடுத்தப்படி கார் ஓட்டுவது மைலேஜை பாதிக்கும். நெரிசல் மிகுந்த சாலைகளில் காரில் சீரான வேகத்தில் செல்லும்போது, ஆக்ஸலரேட்டரை அதிகமாக பயன்படுத்தாமல் செல்வதே சிறந்தது. அதாவது, ஆக்ஸலரேட்டரை மிதித்த பின் முடிந்தவரையில் பிரேக்கை மிதிக்காமல் அதே பவரில் அதிக தூரத்தை கடக்க முயற்சிப்பது மைலேஜை அதிகப்படுத்தும்.
நம்மில் பலர் உள்எரிப்பு என்ஜினை கொண்ட கார்களை தான் பயன்படுத்துகிறோம். ஹைப்ரீட் (Hybrid) கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் (Electric) கார்களை பயன்படுத்துபவர்கள் மிகவும் குறைவு. உள்எரிப்பு என்ஜின் கார்களை பொறுத்தவரையில், ஆக்ஸலரேஷனை கொடுப்பதாக இருந்தாலும், பிரேக்கை கொடுப்பதாக இருப்பதாலும் மென்மையாக மிதிப்பதே என்ஜினின் ஆயுளை மேம்படுத்தும்.

போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலைகளில் சடர்ன் பிரேக் கொடுப்பதை தவிர்ப்பது சற்று சிரமம்தான். ஆனால், முடிந்தவரையில் அதனை தவிர்க்கவும். மாலை மற்றும் இரவு நேரங்களில் முடிந்தவரையில் ஏசியை பயன்படுத்தாமல், ஜன்னல்களை திறந்துக் கொள்ளவும். காலை, மதிய நேரங்களில் காரை பார்க் செய்யும்போது வெயில் இல்லாத நிழலான பகுதியில் நிறுத்துங்கள்.
டெக்னிக்கல் டிப்ஸ் (Technical Tips): காரின் மைலேஜை தீர்மானிப்பதில் காரின் டயர்கள் மற்றும் அதில் நிரப்பப்படும் காற்றின் அளவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், கோடை காலத்தில் சூடான சாலைகளில் இயங்குவதால் டயர்கள் பாதிப்பை சந்திக்கின்றன. ஆதலால், அவ்வப்போது டயர்களில் காற்றின் அழுத்தத்தை கண்காணிப்பதுடன், டயர்களின் நிலைமையையும் சரிப்பார்க்க வேண்டும்.
அதேபோல், என்ஜின் சிஸ்டத்தில் காற்று வடிக்கட்டியில் எந்த அளவிற்கு அழுக்கு சேர்ந்துள்ளது என்பதை ஆராய்வதுடன், என்ஜின் சிஸ்டத்தில் பயன்பாட்டில் இருக்கும் ஆயில் எந்த அளவிற்கு தூய்மையாக உள்ளது என்பதை சரிப்பார்ப்பதும் அவசியமாகும். இவற்றுடன், எரிபொருள் நிலையங்களில் நிரப்பப்படும் எரிபொருட்களின் தரத்தையும் அவ்வப்போது பரிசோதிப்பது நல்ல பழக்கம் ஆகும்.
இன்றைய கால மாடர்ன் கார்களில் எலெக்ட்ரானிக் கண்ட்ரோல் யூனிட் (ECU) வழங்கப்படுவதால் என்ஜினுக்கு செல்லும் எரிபொருளின் அளவை ஒரே சீராக பராமரிக்க முடிகிறது. இருப்பினும், என்ஜின் சிஸ்டத்தில் ஆக்ஸிஜன் சென்சார்கள் (OS) முறையாக செயல்படவில்லை என்றால் காரின் மைலேஜ் பெரிய அளவிற்கு குறைய வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் அதிக மைலேஜை பெறுவதுடன், காரின் ஆயுட்காலத்தையும் அதிகரிக்கலாம். குறிப்பாக, காரின் என்ஜின் சிஸ்டத்தை தொடர்ந்து நல்ல நிலையில் வைத்திருக்க முடியும். இடையிடையே அவ்வப்போது காரை முறையாக சர்வீஸ் செய்தால், எந்த காலத்தை பார்த்தும் பயப்பட வேண்டாம்.


Click it and Unblock the Notifications