எந்த கியர்ல கார் ஓட்டுனா பெஸ்ட் மைலேஜ் கிடைக்கும் தெரியுமா?
இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ100-ஐ தாண்டி விற்பனையாகி வருகிறது. மக்கள் தினமும் பெட்ரோல் போட்டு வாகனம் ஓட்ட சிரமப்பட்டு வருகின்றனர். எப்படியாகக் குறைவான பெட்ரோல் செலவில் நம் வாகனம் நீண்ட தூரம் பயணித்துவிடாத என ஏங்கி வருகின்றனர்.
இப்படியாக அதிக மைலேஜிற்குாக ஏங்கும் மக்களின் ஏக்கத்தைத் தணிக்கவே ஒரு முக்கியமான டிப்ஸ் ஒன்றை வழங்குவதற்காக இங்கே வந்துள்ளோம். இன்று கார்கள் விற்பனையாகும் போது அதில் உள்ள வசதிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறதோ அதே அளவிற்கு காரின் மைலேஜ் விஷயத்திலும் முக்கியத்துவம் தரப்படுகிறது. அதிக மைலேஜ் கொண்ட கார்களே மார்கெட்டில் சிறப்பான விற்பனையைப் பெறுகிறது.

ஆனால் எந்த காராக இருந்தாலும் நீங்கள் காரை ஓட்டும் முறை சரியாக இல்லை என்றால் என்னதான் சிறந்த மைலேஜ் கொடுக்கும் காராக இருந்தாலும் குறைவான மைலேஜை தான் கொடுக்கும். மேனுவல் கியர் காரை பொருத்தவரை எந்த கியரில் நீங்கள் காரை இயக்குகிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மேனுவல் கியர் காரில் நல்ல மைலேஜ் கிடைக்க எந்த கியரில் பயணிக்க வேண்டும் என்பதைக் காணலாம்.
கார் இன்ஜினில் உள்ள சிலிண்டருக்குள் பிஸ்டன் அதிக உராய்வு ஏற்பட்டால் பெட்ரோல் அதிகமாகச் செலவாகும். அதே போல தான் கிராங்க்சாஃப்ட், கியர் பாக்ஸ் ஆகியவற்றிலும் உராய்வு அதிகமாக இருந்தால் பெட்ரோல் செலவு அதிகமாகிவிடும். சரியான நேரத்தில் கிளட்சை அழுத்தி ஸ்மூத்தாக கியரை மாற்றுவது உராய்வைக் குறைக்கும்.

பொதுவாக கார் அதிகமான கியரில் செல்லும் போது உராய்வு குறைவாக இருக்கும். அதே நேரத்தில் மைலேஜூம் சிறப்பாகக் கிடைக்கும். சரி இது எல்லா நேரத்திலும் சரியாக இருக்குமா என்றால் இல்லை. சரி சிறப்பான மைலேஜ் எல்லா நேரத்திலும் கிடைக்க என்ன செய்ய வேண்டும் எனக் காணலாம்.
சிட்டிக்குள் பெஸ்ட் மைலேஜ்: இந்தியாவில் நகர் பகுதிக்குள் கார் ஓட்டுவது என்பது ஒரு கலை தான். குறுக்கே மற்ற வாகன ஓட்டிகள் வருவார்கள். திடீரென சாலையைக் கடந்து செல்பவர்கள் வருவார்கள். ஏன் நாய்,பூனை, மாடு போன் விலங்குகள் கூட குறுக்கே வரும். இதனால் சிட்டியில் பயணிக்கும் போது வேகமாகப் பயணிப்பது என்பது சாத்தியம் இல்லாதது. இதனால் அதிக கியரில் பயணிக்க முடியாது.

அதிக கியரில் பயணிக்க முயன்றாலும் வாகனம் தட்டி ஆஃப் ஆகிவிடும். அப்படி என்றால் அதிக பெட்ரோலையும் குடிக்காத அதே நேரத்தில் வாகனத்தை ஆஃப் ஆக்காத ஒரு கியரை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். அதற்கான ஆப்ஷன் தான் 2,3 மற்றும் 4வது கியர்கள். 1 கியர் நின்று கொண்டிருக்கும் காரை நகர்த்த மட்டுமே கார் ஓரளவிற்கு நகரத் துவங்கிவிட்டால் 2வது கியரே போதுமானது.
நீங்கள் சிட்டி டிராஃபிக்கில் பம்பர்டூ பம்பர் டிராஃபிக், அல்லது மிக மெதுவாக மூவ் ஆகும் டிராஃபிக் என்றால் மட்டுமே 2வது கியரில் தொடர்ந்த பயணம் செய்யுங்கள். குறிப்பாக 20 கி.மீ வேகம் வரை பயணித்தால் 2 வது கியர் தான் பெஸ்ட், 20 கி.மீ வேகத்திற்கு மேல் பயணிக்க முடியும் என்றால் 3வது கியருக்கு மாறிக்கொள்ளலாம். 2வது
கியரிலேயே 20 கி.மீ வேகத்திற்கு மேல் நீண்ட நேரம் பயணித்தால் பெட்ரோல் அதிகமாகச் செலவாகும்.
20 கி.மீ வேகத்திற்கு மேல் 3வது கியருக்கு மாறிவிட்டால் 2வது கியரில் செல்லும் போது செலவாகும் பெட்ரோலை விடக் குறைவாகவே செலவாகும். அடுத்தாக 30-40 கி.மீ வேகம் வரை செல்லும் வாய்ப்பு இருந்தால் அங்கு 4வது கியரை பயன்படுத்துங்கள். அப்பொழுது தான் சிறப்பான மைலேஜ் கிடைக்கும். 40 கி.மீ வேகத்திற்கு மேல் உங்களால் பயணிக்க முடிந்தால் டாப் கியரான 5வது கியருக்கு மாறி வேகமாகப் பயணிக்கலாம்.
அர்பிஎம்: வேகம் மட்டுமல்ல ஆர்பிஎம் எவ்வளவு வழங்குகிறோம் என்பதும் முக்கியம் தேவையான அளவிற்கு மேல் ஆர்பிஎம் அதிகமானாலும் உராய்வு அதிகமாகும். அதே நேரம் தேவையான அளவிற்குக் குறைவாக ஆர்பிஎம் குறைந்தாலும் உராய்வு அதிகமாகும். இதனால் தான் முதல் கியரில் அதிக பெட்ரோலும், அதிகமான கியரில் குறைவான பெட்ரோலும் செலவாகிறது.
அதனால் சரியான ரேஸ்க்கு பிறகு கியரை மாற்ற வேண்டும். குறைவான ரேஸில் கியர மாற்றினால் இன்ஜின் தட்டி வாகனம் ஆஃப் ஆக வாய்ப்பு இருக்கிறது. அதிகமான ரேஸ் கொடுத்தால் அதிகமான ரேஸ் சத்தம் வரும். அதனால் ஒவ்வொரு முறை கியர் மாற்றும் போது உங்கள் வாகனம் 1500-2000 ஆர்பிஎம்மில் இருக்கிறதா என்பதை செக் செய்துவிட்டு கியர மாற்றுவது சிறந்தது.
அடிக்கடி மாற்ற வேண்டாம்: சிட்டி டிராஃபிக்கில் பலர் வேகமாகச் செல்ல வேண்டும் என்பதற்கா அடிக்கடி கியரை கூட்டிக் குறைத்துப் பயணிப்பார்கள். அடிக்கடி கியரை மாற்றுவது வாகனத்தின் பெட்ரோல் செலவை அதிகரித்துவிடும். இதனால் கியரை அடிக்கடி மாற்றாமல் தேவையான நேரங்களில் மட்டும் கியரை மாற்றுவது தான் பெஸ்ட், முடிந்தளவிற்கு ஒரே கியரில் சிட்டி டிராஃபிக்கில் பயணிக்கத் தயாராக இருங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகனம் ஓட்டும் பலருக்கு முறையான வாகனம் ஓட்டும் பழக்கம் இல்லை. மக்கள் சாலை விதிகளை மதித்து அதே நேரத்தில் முறையான வாகனம் ஒட்டினால் மற்றவர்களுக்கு பாதுகாப்பும், அவர்களுக்கு பணமும் மிச்சமாகும்.


Click it and Unblock the Notifications









