அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட ஹேட்ச்பேக், செடான் கார்கள்!!
ஹேட்ச்பேக் அல்லது செடான் கார் வாங்கச் செல்லும்போது மைலேஜ், வசதிகளை பார்ப்பது போன்றே கிரவுண்ட் கிளியரன்ஸ் எனப்படும் காருக்கும், தரைக்குமான இடைவெளி அதிகமான மாடல்களை தேர்வு செய்வதும் அவசியமாகிறது.
சாலைகளில் இருக்கும் பள்ளம், மேடுகளில் காரின் அடிப்பாகம் இடிக்காமல் இருப்பதற்கும், திடீர் வேகத் தடைகளால் சேதமடைவதை தவிர்ப்பதற்கு அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட கார்கள் நல்லது.
அதேவேளை, கிரவுண்ட் கிளியரன்ஸ் மட்டுமின்றி பயணிகளின் எண்ணிக்கையையும், வீல் பேஸ் அளவும், சஸ்பென்ஷன் செட்டிங்கையும் பொறுத்து இது மாறுபடும். எனினும், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட கார்களை ஸ்லைடரில் காணலாம். கார் வாங்க போகும்போது இந்த விபரம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். முதலில் ஹேட்ச்பேக் கார்களையும், தொடர்ந்து செடான் கார்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஃபியட் புன்ட்டோ
ஃபியட் புன்ட்டோ கார் 185 மிமீ கிரவுன்ட் கிளியரன்ஸை் மற்றும் 2,510 மிமீ வீல் பேஸ் கொண்டதாக இருக்கிறது. இதன் சஸ்பென்ஷன் அமைப்பும் சிறப்பானதாக இருப்பதால், சாலைகளை எதிர்படும் தடங்கல்களை எளிதாக சமாளிக்கும்.

செவர்லே செயில் யுவா
இந்த கார் 174 மிமீ கிரவுன்ட் கிளியரன்ஸ் மற்றும் 2,465 மிமீ வீல் பேஸ் கொண்டது.

மாருதி ரிட்ஸ்
மாருதி ரிட்ஸ் கார் 170 மிமீ கிரவுன்ட் கிளியரன்ஸ் கொண்டதோடு, 2,360 மிமீ வீல் பேஸ் மட்டுமே கொண்டிருப்பதால் எளிதாக வேகத் தடைகளை கடக்கும். இருக்கும் ஹேட்ச்பேக் கார்களில் சிறப்பான கிரவுன்ட் கிளியரன்ஸ் அமைப்பை கொண்டது. மோசமான சாலைகளிலும் சிறிது அச்சமின்றி செல்லலாம்.

மாருதி ஸ்விஃப்ட்
அனைத்திலும் சிறப்பான கார் என்று பெயர் பெற்ற மாருதி ஸ்விஃப்ட் 170 மிமீ கிரவுன்ட் கிளியரன்ஸ் மற்றும் 2,430 மிமீ வீல் பேஸ் கொண்டது.

டொயோட்டா லிவா
டொயோட்டா லிவா கார் 170 மிமீ கிரவுன்ட் கிளியரன்ஸ் மற்றும் 2,460 மிமீ வீல் பேஸ் கொண்டது. இதுவும் சிறப்பான கிரவுன்ட் கிளியரன்ஸ் அமைப்பை கொண்டது.

ஃபியட் லீனியா
புன்ட்டோ போன்றே லீனீயாவும் 185 மிமீ கிரவுன்ட் கிளியரன்ஸ் கொண்டிருக்கிறது. அதேவேளை புன்ட்டோவைவிட வீல் பேஸ் அதிகம். இது 2,603 மிமீ வீல் பேஸ் கொண்டது.

மாருதி எஸ்எக்ஸ்4
மாருதி எஸ்எக்ஸ்4 காரை பல வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ததற்கு அதன் சிறப்பான கிரவுன்ட் கிளியரன்ஸை காரணமாக கூறுவது வழக்கம். 180 மிமீ கிரவுன்ட் கிளியரன்ஸ் மற்றும் 2,500 மிமீ வீல் பேஸ் கொண்டது.

டொயோட்டா எட்டியோஸ்
டொயோட்டா எட்டியோஸ் கார் 170 மிமீ கிரவுன்ட் கிளியரன்ஸையும், 2,550 மிமீ வீல் பேஸையும் கொண்டது.

மாருதி டிசையர்
மாருதி டிசையரும் ஸ்விஃப்ட் போன்றே 170 மிமீ கிரவுன்ட் கிளியரன்ஸ் மற்றும் 2,430 மிமீ வீல் பேஸ் கொண்டது.


Click it and Unblock the Notifications








