பைக் ஹெல்மெட்டை ஒவ்வொருத்தரும் இப்படித்தான் பாத்துக்கணும்!! அடிக்குற வெயிலில் இருந்து ஈஸியா தப்பிக்கலாம்...

பைக்கை இயக்க என்ஜின் எந்த அளவிற்கு முக்கியமானதோ அதைவிட முக்கியமானது ஹெல்மெட் ஆகும். பாதுகாப்பான பயணத்திற்கு ஹெல்மெட் அணியவும் என போலீஸார் தொடர்ந்து வலியுறுத்திவரும் நிலையில், ஹெல்மெட்களை முறையாக பராமரிப்பது எவ்வாறு என்பது உங்களில் சிலருக்கு சந்தேகமாக இருக்கலாம். அத்தகையவர்களுக்கானதே இந்த பதிவு...

அவ்வப்போது க்ளீன் செய்யவும்: ஹெல்மெட்டை அவ்வப்போது சுத்தம் செய்வதை ஓர் பழக்கமாக்கி கொள்ளுங்கள். குறிப்பாக, நெடுந்தூர பயணம் செய்து முடித்துள்ளீர்கள் எனில். சூடான நீரையும், சோப்பையும் உபயோகித்து ஹெல்மெட்டின் உட்பக்கத்தையும், வெளிப்பக்கத்தையும் துடைக்கலாம். சோப்பு/ க்ளீனரின் வேதியியல் மூலக்கூறுகள் ஹெல்மெட்டின் பாகங்கள் உடன் வினைப்புரியலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

bike helmet maintenance tips

ஆதலால் சோப்பு & நீர் கொண்டு துடைத்தவுடன் ஓர் உலர்ந்த மென்மையான துணியை கொண்டு ஹெல்மெட் முழுவதிலும் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி எடுக்கவும். உங்களது ஹெல்மெட்டில் இருந்து லைனர்களையும், பேட்களையும் தனியாக கழற்ற முடியும் எனில், அவற்றை கழற்றியும் சுத்தம் செய்யலாம். முக்கியமாக, ஹெல்மெட்டில் ஈரப்பதம் முற்றிலும் நீங்கி, உலர்ந்த பின்பே அதனை மீண்டும் அணியவும்.

கற்றோட்டத்திற்கு வழிவகை செய்யவும்: ஹெல்மெட்களில் சிறுசிறு துளைகள் வெளிகாற்று உள்ளே வருவதற்காக கொடுக்கப்படுவது வழக்கம். ஆனால் அவற்றை தூசி, மண்துகள்கள் அடைத்து கொள்ளலாம். துணி உள்ளே நுழையாத துளைகளுக்கு பிரஷ்ஷை பயன்படுத்த வேண்டும். அல்லது அதிக அழுத்தத்தில் காற்றை பீய்ச்சி அடிக்கக்கூடிய கருவி உங்களிடம் இருந்தால் அதை பயன்படுத்தலாம்.

bike helmet maintenance tips

வியர்வைக்கு கூடுதல் கவனம்: சில துளைகள் இருப்பினும் ஹெல்மெட் மூடிய பகுதி என்பதால் கோடை காலத்தில் தலையில் இருந்து வியர்வை வடிய வாய்ப்புண்டு. அதனை ஹெல்மெட்டின் உட்பக்கத்தில் இருந்து நீக்க சோப்பை பயன்படுத்துங்கள் என ஏற்கனவே கூறிவிட்டோம். அதேநேரம், எப்போதும் ஹெல்மெட் அணியும் முன்பு கேப் அல்லது கைக்குட்டையை கொண்டு தலைமுடிகளை கவர் செய்து கொள்ளலாம்.

வெப்பத்தில் இருந்து பாதுகாப்பு: ஹெல்மெட்டின் வெளிக்கூடு ஆனது பெரும்பாலானவற்றில் பிளாஸ்டிக்கால் தான் செய்யப்படுகிறது. பிளாஸ்டிக் சூரிய வெப்பத்தால் பாதிப்படையக்கூடியது என்பதால், பயன்படுத்தாத போது ஹெல்மெட்டை பைக்கின் இருக்கை அல்லது வேறு ஏதேனும் சூடான இடத்தில் வைத்துவிட்டு செல்லும் பழக்கத்தை கைவிடுங்கள்.

bike helmet maintenance tips

கெட்ட வாசனை தடுப்பு: பொதுவாகவே ஹெல்மெட்களில் கெட்ட வாசனை உருவாகிவிடும். இதனை தடுக்கவே சில கெமிக்கல்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை வாங்க முடியாதவர்கள் பேக்கிங் சோடா அல்லது ஆக்டிவேட்டட் சார்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம். ஹெல்மெட்டை பயன்படுத்தாத போது இவற்றை ஹெல்மெட்டிற்குள் வைத்து அவற்றின் வாசனையை பெற முடியும்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்த டிப்ஸை முறையாக பயன்படுத்தினால் உங்களது ஹெல்மெட்டை நீண்ட காலத்திற்கு சவுகரியமாக பயன்படுத்தலாம். இந்த டிப்ஸ் எல்லாம் எனக்கு தேவையில்லை... ஏனெனில் நான் தான் ஹெல்மெட்டையே அணிவதில்லையே என நக்கலாக கூறுகிறீர்களா? தலை கவசம் உயிர் கவசம் என்பதையும், இந்தியா சாலை விபத்துகள் அதிகம் நடைபெறக்கூடிய நாடு என்பதையும் மறந்துவிட வேண்டாம்.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 30, 2023, 17:00 [IST]
English summary
Bike helmet maintenance tips in summer
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X