இந்த ரகசியத்தை யாரும் உங்களுக்கு சொல்லி தர மாட்டாங்க! டேங்க் புல்லா பெட்ரோல் போட்டா ஒரு மாசம் ஓட்டலாம்!

டூவீலர் ஓட்டும் பலர் மாத சம்பளம் வந்தவுடன் தங்கள் பைக்கில் பெட்ரோலை முழுவதுமாக நிரப்பி விடுகிறார்கள். ஆனால் அந்த பெட்ரோல் சில நாட்களுக்கு கூட தாங்காமல் காலி ஆகிவிடுகிறது. ஆனால் வெகு சிலர் மட்டுமே மாத துவக்கத்தில் பெட்ரோலை நிரப்பினால் மாச கடைசி வரை அந்த பெட்ரோலை பயன்படுத்தி விடுகிறார்கள். சிலருக்கு மட்டும் எப்படி இது சாத்தியமாகிறது பலருக்கு இது சாத்தியமாகாமல் போவதற்கு என்ன காரணம்? விரிவாக காணலாம் வாருங்கள்.

ஒரு வாகனத்தை பயன்படுத்தும் போது அதன் மைலேஜ் மிக முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. நீங்கள் எவ்வளவு தூரம் பயணம் செய்கிறீர்களோ அதற்கு தகுந்தார் போல் எரிபொருள் செலவாகும். இது எல்லாருக்கும் தெரிந்தது தான். ஆனால் ஒவ்வொரு மாதமும் ஒரே மாதிரியான வாகனத்தில் ஒரே அளவிலான கிலோமீட்டரில் இரு வேறு நபர்கள் பயணம் செய்யும்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான எரிபொருள் செலவு ஏற்படுகிறது.

bike mileage tips

இது பலருக்கும் குழப்பம் தரும் விஷயமாக இருக்கிறது. அது எப்படி ஒரே அளவு பயன்பாடு மற்றும் ஒரே வகையான வாகனம் பயன்படுத்தும் இதுவருக்கு வேறு வேறு மைலேஜ் கிடைக்கிறது என பலர் யோசித்து இருப்பார்கள். வாகனத்தின் மைலேஜ் என்பது நீங்கள் பயணம் செய்யும் தூபத்தை மட்டும் வைத்து கணக்கிடுவது அல்ல நீங்கள் எவ்வாறு வாகனத்தை ஓட்டுகிறீர்கள் என்பதையும் வைத்து கணக்கிட வேண்டும்.

வாகனத்தை ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஓட்டும்போதுதான் அதிகமான மைலேஜ் கிடைக்கும் குறைவான வேகத்தில் வாகனத்தை ஓட்டினாலும் மைலேஜ் பாதிக்கப்படும் அதே நேரத்தில் அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டும் போதும் மைலேஜ் பாதிக்கப்படும் பைக்குகளை பொருத்தவரை 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் தான் பயணிக்க வேண்டும் அப்பொழுதுதான் அதிக மைலேஜ் கிடைக்கும்.

bike mileage tips

நான் மேலே சொன்னது படி இருவரும் ஒரே தூரத்தை ஒரு மாதத்தில் ஓட்டி இருந்தாலும் எந்த சாலையில் ஓட்டுகிறார்கள் என்பது மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. நல்ல தரமான சாலையில் வாகனம் ஓடும் போது நல்ல மைலேஜ் கிடைக்கும் அதே நேரம் கரடு முரடான அல்லது பல்லாங்குழி போன்ற அமைப்பில் இருக்கும் ரோடுகளில் வாகனம் ஓட்டும்போது அடிக்கடி கிளட்சை பிடித்து கியரையை மாற்றி இன்ஜினிற்கு அதிக சிரமம் கொடுக்க வேண்டியது இருக்கும். அப்பொழுது அதிக எரிபொருள் செலவாகும்.

நாம் மேலே சொன்னதுபடி இருவரும் ஒரே ரக பைக்கை வைத்திருந்தாலும் அதை எவ்வளவு பராமரிப்புடன் வைத்திருக்கிறார்கள் என்பது மற்றொரு முக்கியமான விஷயம். சரியாக பராமரிக்கப்படாத பைக் குறைவான மைலேஜ் தான் தரும். சரியாக பராமரிக்கப்படும் பைக் மைலேஜ் அதிகமாக தரும் இதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

bike mileage tips

பைக்கின் மைலேஜ் இருக்கும் உங்கள் பைக்கில் உள்ள டயர் காற்றின் அளவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. குறைவான காற்றழுத்தம் கொண்ட டயர்கள் அதிக எரிபொருளை செலவு செய்ய வைத்து விடும். அதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அறிவுறுத்திய காற்றின் டயர் பிரஷரை எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும் இதை 15 நாட்களுக்கு ஒரு முறை சோதனை செய்து கொள்ள வேண்டும்.

பொதுவாக ஒரு பைக் ஓட்டுகிறோம் என்றால் தினமும் நான்கு முதல் ஐந்து நிமிடங்கள் தான் பைக் ஓட்டுகிறோம். வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு சொல்கிறோம், அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வருகிறோம். அதற்கு மட்டும் தான் பைக் என்றால் முழு டேங்க் பெட்ரோல் நிரப்பினால் ஒரு மாதம் தாராளமாக ஓடும். பெரும்பாலும் பைக்கை இந்த ஒரு பயன்பாட்டிற்காக பயன்படுத்துபவர்கள் மாதம் ஒரு முறை தான் பெட்ரோல் போடுகிறார்கள்.

ஒருவேளை நீங்கள் பைக்கை தினமும் 15 முதல் 20 கிலோமீட்டர் வரை ஓடுகிறீர்கள் என்றால் ஒரு முறை டேங்க் நிரப்பினால் 15 முதல் 20 நாட்கள் வரை தான் உங்களுக்கு அந்த பெட்ரோல் இருக்கும். இதனால் மாதம் இருமுறை நீங்கள் பைக்கில் பெட்ரோலை முழுமையாக நிரப்ப வேண்டிய சூழ்நிலை இருக்கும். உங்களது தேவை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை கணக்கிட்டு எவ்வளவு பெட்ரோல் போட வேண்டும் என முடிவு செய்து கொள்ளுங்கள்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே சொன்ன கணக்குப்படி நீங்கள் குறைவான தூரம் தான் வாகனம் ஓட்டுகிறீர்கள், ஆனால் அதிகமாக பெட்ரோல் செலவாகிறது என்றால் நீங்கள் தவறான முறையில் வாகனம் இயக்குகிறீர்கள் என அர்த்தம். அதனால் என்ன விதமான தவறு செய்கிறீர்கள் என்பதை உடனடியாக கண்டறிந்து அதை மாற்றிக் கொள்வதன் மூலம் உங்கள் வாகனத்தில் மைலேஜ் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 27, 2024, 22:17 [IST]
English summary
Bike mileage tips ride longer with one tank of petrol
மேலும்... #auto tips
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X