புகையின் கலரை வைத்தே காரில் உள்ள பிரச்னையை கண்டுபுடிச்சர்லாம்... இவ்ளோ நாளா இது தெரியாம தப்பு பண்ணீட்டோமே!

எக்ஸாஸ்ட் பைப்பில் இருந்து வெளியேறும் புகையின் நிறத்தை வைத்தே, காரில் என்ன பிரச்னை? என்பதை கண்டுபிடிக்க முடியும். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

புகையின் கலரை வைத்தே காரில் உள்ள பிரச்னையை கண்டுபுடிச்சர்லாம்... இவ்ளோ நாளா இது தெரியாம தப்பு பண்ணீட்டோமே!

காரின் எக்ஸாஸ்ட் பைப்பில் இருந்து புகை வெளியேறுவது சகஜமான ஒரு விஷயம்தான். இதற்காக நாம் பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை. எரிபொருள் எரிக்கப்படுவதால் உண்டாகும் ஒரு துணை தயாரிப்புதான் புகை. நீங்கள் எலெக்ட்ரிக் காரை ஓட்டினால் மட்டும்தான் புகை வராது. மற்றபடி வழக்கமான பெட்ரோல், டீசல் கார்களை ஓட்டினால் குறிப்பிட்ட அளவு புகை வரும்.

புகையின் கலரை வைத்தே காரில் உள்ள பிரச்னையை கண்டுபுடிச்சர்லாம்... இவ்ளோ நாளா இது தெரியாம தப்பு பண்ணீட்டோமே!

ஆனால் அதிகப்படியான புகையை உங்கள் கார் கக்கினால், அது நல்ல அறிகுறி கிடையாது. அதிலும் குறிப்பாக எக்ஸாஸ்ட் பைப்பில் இருந்து வெவ்வேறு நிறங்களில் புகை வெளியேறினால் காரில் பிரச்னை உள்ளது என அர்த்தம். பொதுவாக கார்கள் கருப்பு நிறத்தில் மட்டுமல்லாது, வெள்ளை மற்றும் நீல நிறங்களிலும் புகையை வெளியேற்றும்.

புகையின் கலரை வைத்தே காரில் உள்ள பிரச்னையை கண்டுபுடிச்சர்லாம்... இவ்ளோ நாளா இது தெரியாம தப்பு பண்ணீட்டோமே!

காரில் இருந்து வெளியேறும் புகையின் நிறத்தை வைத்தே, என்ன பிரச்னை? என்பதை நீங்களே ஓரளவிற்கு சரியாக கணித்து விட முடியும். ஆனால் இந்த விஷயங்கள் பலருக்கும் தெரிவதில்லை. எனவே இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த தகவல்கள் உங்களுக்கு பலன் அளிக்கும் என நம்புகிறோம்.

புகையின் கலரை வைத்தே காரில் உள்ள பிரச்னையை கண்டுபுடிச்சர்லாம்... இவ்ளோ நாளா இது தெரியாம தப்பு பண்ணீட்டோமே!

டீசல் இன்ஜின் காரின் எக்ஸாஸ்ட் பைப்பில் இருந்து கருப்பு நிறத்தில் புகை வெளியேறினால் என்ன அர்த்தம்?

பொதுவாக எக்ஸாஸ்ட் பைப்பில் இருந்து கருப்பு நிறத்தில் புகை வெளியேறினால் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை. அதையும் மீறி ஏதேனும் பிரச்னை என்றாலும் கூட, அது எளிதில் சரி செய்ய கூடிய ஒன்றாகதான் இருக்கும். டீசல் இன்ஜின் கொண்ட கார்கள் கருப்பு புகையை உருவாக்குவது சாதாரணமான ஒரு விஷயம்தான்.

புகையின் கலரை வைத்தே காரில் உள்ள பிரச்னையை கண்டுபுடிச்சர்லாம்... இவ்ளோ நாளா இது தெரியாம தப்பு பண்ணீட்டோமே!

டீசல் கார்களின் எக்ஸாஸ்ட் அமைப்பில் இருந்து கருப்பு புகையை காண்பது என்பது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இயற்கையான ஒன்றாகதான் இருந்தது. ஆனால் தற்போதெல்லாம் டீசல் கார்களில், டீசல் பார்டிகுலேட் ஃபில்டர் (Diesel Particulate Filter - DPF) ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.

புகையின் கலரை வைத்தே காரில் உள்ள பிரச்னையை கண்டுபுடிச்சர்லாம்... இவ்ளோ நாளா இது தெரியாம தப்பு பண்ணீட்டோமே!

காரின் எமிஷனில் வெளிப்படும் புகை துகள்கள் உள்ளிட்டவற்றை இந்த டீசல் பார்டிகுலேட் ஃபில்டர் பிடித்து கொள்ளும். இது எக்ஸாஸ்ட் பைப்பில் இருந்து தூய்மையான புகை வெளியேறுவதற்கு வழிவகுக்கிறது. எனவே டீசல் இன்ஜின் கொண்ட கார்களில் இருந்து புகை வெளியேறினால், காரின் உரிமையாளர்கள் அச்சப்பட வேண்டாம்.

புகையின் கலரை வைத்தே காரில் உள்ள பிரச்னையை கண்டுபுடிச்சர்லாம்... இவ்ளோ நாளா இது தெரியாம தப்பு பண்ணீட்டோமே!

எனினும் உங்கள் டீசல் இன்ஜின் கார் தொடர்ச்சியாக கருப்பு புகையை வெளியேற்றி கொண்டே இருந்தால், ஏதாவது பிரச்னைகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இப்படி நடக்கிறது என்றால் ஒருவேளை ஃப்யூயல் இன்ஜெக்டர் (Fuel Injector) சேதம் அடைந்திருக்கலாம். அதிகப்படியாக பயன்படுத்தப்பட்ட காரணத்தால், ஃப்யூயல் இன்ஜெக்டர் பாதிக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

புகையின் கலரை வைத்தே காரில் உள்ள பிரச்னையை கண்டுபுடிச்சர்லாம்... இவ்ளோ நாளா இது தெரியாம தப்பு பண்ணீட்டோமே!

அல்லது நாங்கள் மேலே கூறிய டீசல் பார்டிகுலேட் ஃபில்டரில் பிரச்னைகள் இருக்கலாம். எப்படியாயினும் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்ட கார்களில் இருந்து கருப்பு நிற புகை தொடர்ச்சியாக வெளியாகி கொண்டே இருக்கிறது என்றால், காரை சர்வீஸ் சென்டரில் விடுவதற்கான நேரம் வந்து விட்டது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

புகையின் கலரை வைத்தே காரில் உள்ள பிரச்னையை கண்டுபுடிச்சர்லாம்... இவ்ளோ நாளா இது தெரியாம தப்பு பண்ணீட்டோமே!

பெட்ரோல் இன்ஜின் காரின் எக்ஸாஸ்ட் பைப்பில் இருந்து கருப்பு நிறத்தில் புகை வெளியேறினால் என்ன அர்த்தம்?

டீசல் இன்ஜின் கார்களை போலவே, பெட்ரோல் இன்ஜின் கார்களிலும், கருப்பு புகையை எதிர்பார்க்கலாம். குறிப்பாக நீங்கள் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் காரை ஓட்டுகிறீர்கள் என்றால், கருப்பு நிற புகை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனினும் தொடர்ச்சியாக அதிகளவு கருப்பு புகை வெளியேறி கொண்டே இருக்கிறது என்றால், நீங்கள் நிச்சயமாக கவனிக்க வேண்டும்.

புகையின் கலரை வைத்தே காரில் உள்ள பிரச்னையை கண்டுபுடிச்சர்லாம்... இவ்ளோ நாளா இது தெரியாம தப்பு பண்ணீட்டோமே!

டர்போசார்ஜரில் ஏதேனும் தீவிரமான பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிதான் இது. அல்லது இன்ஜினில் பிரச்னைகள் இருக்கலாம். எனவே பெட்ரோல் இன்ஜின் கார்களிலும் தொடர்ச்சியாக அதிக அளவு கருப்பு புகை வெளியேறினால் நீங்கள் காரை சர்வீஸ் சென்டரில் விட வேண்டும். இது மெக்கானிக்கை சந்திக்கும் நேரம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

புகையின் கலரை வைத்தே காரில் உள்ள பிரச்னையை கண்டுபுடிச்சர்லாம்... இவ்ளோ நாளா இது தெரியாம தப்பு பண்ணீட்டோமே!

எக்ஸாஸ்ட் பைப்பில் இருந்து நீல நிறத்தில் புகை வெளியேறினால் என்ன அர்த்தம்?

டீசல் அல்லது பெட்ரோல் என இரண்டு வகையான கார்களிலும், நீல நிறத்தில் புகை வெளியேறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. காரின் எக்ஸாஸ்ட் பைப்பில் இருந்து நீல நிற புகை வெளியேறினாலோ அல்லது ஆயில் எரியக்கூடிய வகையில் வித்தியாசமான வாசனையை நுகர நேரிட்டாலோ, காரை உடனடியாக சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்று விடுங்கள்.

புகையின் கலரை வைத்தே காரில் உள்ள பிரச்னையை கண்டுபுடிச்சர்லாம்... இவ்ளோ நாளா இது தெரியாம தப்பு பண்ணீட்டோமே!

உங்களால் முடிந்தவரை விரைவாக காரை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்வது நல்லது. ஏனெனில் உங்கள் கார் இன்ஜினின் ஆயில் அமைப்பில் பிரச்னைகள் இருந்தால், நீல நிறத்தில் புகை வெளிப்படும். அல்லது இது இயற்கையாக ஏற்படும் தேய்மானத்தின் விளைவாக இருக்கலாம். இதன் காரணமாக செல்ல கூடாத இடங்களில் எல்லாம் ஆயில் கசிவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

புகையின் கலரை வைத்தே காரில் உள்ள பிரச்னையை கண்டுபுடிச்சர்லாம்... இவ்ளோ நாளா இது தெரியாம தப்பு பண்ணீட்டோமே!

எனவே உடனடியாக நீங்கள் சர்வீஸ் சென்டருக்கு சென்று விடுவது நல்லது. இதன் மூலம் பிரச்னையை வேகமாகவும், எளிதாகவும் சரி செய்து விடலாம். இது பிரச்னையின் தீவிரத்தை பொறுத்தது. ஆனால் பிரச்னை இருப்பது தெரிந்தோ அல்லது தெரியாமலோ நீங்கள் கால தாமதம் செய்தால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

புகையின் கலரை வைத்தே காரில் உள்ள பிரச்னையை கண்டுபுடிச்சர்லாம்... இவ்ளோ நாளா இது தெரியாம தப்பு பண்ணீட்டோமே!

எக்ஸாஸ்ட் பைப்பில் இருந்து வெள்ளை நிற புகை வெளியேறினால் என்ன அர்த்தம்?

உங்கள் காரின் எக்ஸாஸ்ட் பைப்பில் இருந்து வெள்ளை நிற புகை வெளியேறினால் கூடுதல் கவனம் செலுத்துங்கள். தொடர்ச்சியாக அதிக அளவில் வெள்ளை நிற புகை அடர்த்தியாக வெளியேறினால், பிரச்னை இருக்கிறது என்று பொருள். வெள்ளை நிற புகை வெளியேறுகிறது என்றால், அது இன்ஜின் ஆயில் தொடர்புடைய பிரச்னையாக இருக்கலாம்.

புகையின் கலரை வைத்தே காரில் உள்ள பிரச்னையை கண்டுபுடிச்சர்லாம்... இவ்ளோ நாளா இது தெரியாம தப்பு பண்ணீட்டோமே!

இதுதான் பிரச்னை என்றால், வெள்ளை நிற புகை சிறிய அளவில் நீல நிற சாயலை கொண்டிருக்கும். உங்கள் காரின் எக்ஸாஸ்ட் பைப்பில் இருந்து வெள்ளை நிற புகையை பார்த்தால், பிரச்னையை சரி செய்வதற்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்னை தீவிரமடைந்து, கடுமையான பின் விளைவுகளுக்கு வாய்ப்புகள் உள்ளன.

புகையின் கலரை வைத்தே காரில் உள்ள பிரச்னையை கண்டுபுடிச்சர்லாம்... இவ்ளோ நாளா இது தெரியாம தப்பு பண்ணீட்டோமே!

இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க வேண்டுமென்றால், சரியான இடைவெளிகளில் காரை சர்வீஸ் செய்யுங்கள். அத்துடன் உங்கள் கார் இன்ஜினின் ஆயில் மற்றும் கூலண்ட் அளவுகள் எப்போதும் உகந்த நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இவற்றின் மூலம் அளவுக்கு அதிகமாக புகை வெளியேறுவது போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம்.

Most Read Articles
English summary
Black blue white what is my car s exhaust smoke colour telling me
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X