இந்த ரகசியம் டிரைவர்களுக்கே தெரியாது! கார் டிக்கில லக்கேஜ் ஏத்தும் போது இந்த விஷயத்தை கவனிங்க!

புதிதாக கார் வாங்குபவர்களுக்கு தனது காரில் அதிக பூட் ஸ்பேஸ் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். குறிப்பாக குடும்பத்துடன் பயணிக்கும் வகையிலான கார்களில் அதிக பூட் ஸ்பேஸ் இருந்தால் அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லலாம் என்ற நினைப்பில் பலர் இந்த விஷயத்தை கவனிப்பார்கள். ஆனால் பூட் ஸ்பேஸை எப்படி பயன் உள்ளதாக பயன்படுத்த வேண்டும் என்ற விபரம் பலருக்கும் தெரிவதில்லை. அதற்கான டிப்ஸ்களை தான் இங்கே வழங்கி உள்ளோம்.

கார் வாங்கும் எண்ணத்தில் இருக்கும் பலர் அதை நீண்ட தூரம் பயணம் செய்வதற்காக மட்டுமே அதிகம் பயன்படுத்துகிறார்கள். நீண்ட தூரம் பயணம் செய்யும்போது கூடுதலாக லக்கேஜ்களை எடுத்துச் செல்ல வேண்டிய தேவையும் இருக்கிறது. இதனால் கார்களில் அதிக லக்கேஜ்களை வைக்கும் இடமும் தேவை. இதனால் புதிதாக கார் வாங்குபவர்கள் தங்கள் காரில் பூட் ஸ்பேஸ் எவ்வளவு இருக்கிறது என அதிகம் கவனம் செலுத்தி பார்க்கிறார்கள்.

boot space usage in car

அதிகமான பூட் ஸ்பேஸ் கொண்ட கார்களில் அதிகமான லக்கேஜ்களை எடுத்துச் செல்ல முடியும் என பலர் கருதுகிறார்கள். பூட் ஸ்பேஸ் குறைவாக இருந்தால் லக்கேஜ்களின் எண்ணிக்கையையும் குறைவாக தான் வைக்க முடியும் என்ற கருத்தும் இருக்கிறது. மிகப்பெரிய பிரச்சனை சிஎன்ஜி காரர்களில் பூட் ஸ்பேஸ் அளவு குறைவாக தான் இருக்கிறது.

சிஎன்ஜி கார்களில் சிஎன்ஜி சிலிண்டர் காரின் பூட் பகுதியில் வைக்கப்படுவதால் அங்கு பொருட்கள் வைக்க போதுமான அளவுக்கு இடம் இருப்பதில்லை. இதனால் அந்த கார்களில் பூட் இடவசதி குறைவாக தான் இருக்கிறது. பலருக்கும் காரில் உள்ள பூட் பகுதியை எப்படி பயனுள்ளதாக பயன்படுத்துவது என்ற விபரம் தெரியவில்லை. குறைவாக உள்ள இடத்திலும் அதிக பொருட்களை வைக்க வாய்ப்புகள் உள்ளது.

boot space usage in car

காரின் பூட் பகுதியை பொருத்தவரை அதை லிட்டரில் அளந்து தான் கணக்கிடுவார்கள். உதாரணமாக 400 லிட்டர், 450 லிட்டர், 500 லிட்டர் பூட் வசதி என காரின் விளம்பர விபரங்களில் வெளியிடப்பட்டிருக்கும். ஆனால் நீங்கள் இந்த 400 லிட்டர், 500 லிட்டர் என்ற இட வசதியை எப்படி அளந்து பார்க்க முடியும்? என்று கேட்டால் அது நடைமுறை சாத்தியமில்லாத ஒரு விஷயம்தான்.

இதனால் நமக்கு ஒரு வாகனத்தில் உள்ள பகுதியில் எத்தனை லக்கேஜ்களை வைக்க முடியும் என்ற ஒரு தோராயமான ஐடியா இருக்க வேண்டும். இதற்காக நீங்கள் பின்பக்க கண்ணாடி கிளாஸ்/ பின்சீட்டின் உள்ள மேல் பகுதியை ஒரு கணக்கீடாக வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் லக்கேஜ்களை நிரப்பும் போது பின்பக்க கதவில் உள்ள கண்ணாடிக்கு கீழ் வரையிலான உயரத்திலோ அல்லது பின்பக்கம் சீட் எவ்வளவு உயரத்தில் இருக்கிறதோ அதுவரையிலோ லக்கேஜ்களை நிரப்பலாம்.

இந்த உயரத்தை தாண்டி நீங்கள் லக்கேஜ்களை கட்டாயம் நிரப்ப கூடாது. இந்த உயரத்தை தாண்டி நீங்கள் லக்கேஜ்களை நிரப்பும் போது பின்பக்க கண்ணாடி வழியாக தெரியும் ரியர் வியூ கிளாஸில் போதுமான விசிபிலிட்டி கிடைக்காது. இது காரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான ஒரு விஷயமாகும். இதனால் எக்காரணத்தை கொண்டும் சீட்டை விட உயரமாக அல்லது பின்பக்க கதவில் உள்ள ஜன்னல் கண்ணாடிக்கு மேல் லக்கேஜ் இருக்கும் படி அடுக்கி வைக்கக் கூடாது.

இது ரியர் வியூ கண்ணாடியை மறைப்பது மட்டுமல்லாமல் கார் வேகமாக செல்லும்போது பின்பக்க சீட்டில் வந்து அந்த லக்கேஜ்கள் விழுந்து விட கூட வாய்ப்புகள் உள்ளது. இதனால் கூட பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படும் இந்த பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக தான் இந்த புதிய விதிமுறையை வாகனங்கள் ஓட்டும் நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பலருக்கும் இது குறித்த போதுமான விழிப்புணர்வு கிடையாது.

இதனால் நீங்கள் அடுத்த முறை வாகனத்தில் பயணிக்கும் போது நிச்சயம் லக்கேஜ்களை காரன் பூட் பகுதியில் அடுக்கி வைக்கும் போது சீட்டிற்கு மேல் லக்கேஜ்கள் வராதபடி அடுக்கி வைத்துக் கொண்டு லக்கேஜ்கள் எவ்வளவு வைக்க முடிகிறது என பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அளிக்கும் லிட்டர் கணக்கு முறையை வைத்து நிச்சயம் லக்கேஜை கணக்கிட முடியாது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பூட் பகுதி எவ்வளவு இட வசதி கொண்டது என்பதை உங்களுக்கு புரியும்படி விளக்குவதற்காக தான் உங்களுக்கு இந்த லிட்டர் கணக்கு முறையை கூறுகிறார்கள். இந்த லிட்டர் கணக்கு முறை என்பது பூட் பகுதிக்குள் தண்ணீரை நிரப்பினால் எத்தனை லிட்டர் தண்ணீர் நிரம்பும் என்பதை குறிக்கும் சொல் தான். அதை வைத்து லக்கேஜை கையை கணக்கிட திட்டமிடாதீர்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, April 26, 2024, 15:26 [IST]
English summary
Boot space usage car how much luggage to keep tips tricks
மேலும்... #எப்படி
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+