எந்த கலரில் கார் வாங்கினா பாதுகாப்பானது?

இதையெல்லாம் தாண்டி ஒரு மேட்டர் இருக்கிறது. ஆம், காரின் பாதுகாப்பு விசயத்தில் கலர் முக்கிய பங்கு வகிக்கிறதாம். எனவே, கார் கலரை தேர்வு செய்யும் போது பிரகாசமான கலரை தேர்வு செய்ய வேண்டும் என்று ஆட்டோமொபைல் துறையினர் கூறுகின்றனர்.
குறிப்பாக, கருப்பு கலர் கார்கள்தான் அதிகம் விபத்தில் சிக்குவதாக புள்ளிவிபர ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1987ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்களில் கருப்பு கலர் கார்கள்தான் அதிகம் விபத்துக்குள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கடுத்து, சில்வர் கலர் கார்கள் அதிகம் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெள்ளை நிற கார்கள்தான் அதிக பாதுகாப்பானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கருப்பு நிற கார்கள் எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு பளிச்சென்று தெரியாததுதான் பிரச்னை என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அரசுத் துறையினரும், டாக்சி நிறுவனங்களும் அதிக அளவில் வெள்ளைநிற கார்களை வாங்குகின்றனர். ஆனால், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வெள்ளை நிற கார்களை விரும்புவதில்லை. வெள்ளை நிற கார்கள்தான் அதிக பாதுகாப்பானவை என்பது பலருக்கு தெரியவில்லை," என்று மாருதி நிறுவனத்தின் அதிகாரி ஒருவரே தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நம் நாட்டில் விபத்துக்குள்ளாகும் கார்களை பற்றி 200 விதமான புள்ளி விபரங்களை சேகரிக்கும் மேலாண்மை திட்டம்(ஆர்ஏடிஎம்எஸ்) கடந்த 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில், விபத்துக்குள்ளாகும் காரின் கலர் பற்றிய விபரமும் இடம்பெற்றிருந்தது.
மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் மத்திய அரசு இத்திட்டத்தை கொண்டு வந்தது. இதில், போக்குவரத்து துறையினர், போலீசார் மற்றும் இத்திடத்தை செயல்படுத்தும் மாநில அரசின் துறை ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் செயற்கைகோள் உதவியுடன் செயல்படும் கனிணி மேலாண்மை திட்டமாக உருவாக்கப்பட்டது.
தமிழகத்தில்தான் இந்த திட்டம் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், பல்வேறு நடைமுறை சிக்கல்களால் இந்த புள்ளி விபரங்கள் சேகரிக்கும் பணிகள் முழுமை பெறாததால், மேற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








