உங்க காரையும் குண்டு துளைக்காத காராக மாற்ற முடியும்! செலவு இவ்வளவுதான் ஆகும்!
உலகின் மிக முக்கியமான அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் குண்டு துளைக்காத வாகனங்களை தான் பயன்படுத்துவார்கள். அவர்கள் எங்கு பயணம் செய்தாலும் அவர்களது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பதால் இந்த ரக வாகனங்களையே பயன்படுத்துவார்கள். இதனால் எந்த ஆபத்து வந்தாலும் அவர்களை தற்காத்துக் கொள்ள முடியும். இப்படியாக உங்கள் சாதாரண காரை குண்டு துளைக்காத காராக மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்ற விபரங்களை தான் இங்கே காண போகிறோம்.
இன்று வாகனங்களில் செல்லும் நமக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது பாதுகாப்பு தான். அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், முதல் சாதாரண மனிதர்கள் வரை பாதுகாப்பான பயணத்தை தான் விரும்புகிறார்கள். இன்று உலகத் தலைவர்கள் பயணம் செய்ய குண்டு துளைக்காத அளவிலான வாகனங்கள் எல்லாம் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அந்தக் கார்களை சாதாரண மனிதர்கள் வாங்கி பயன்படுத்தும் சூழ்நிலை இல்லை.

துப்பாக்கி குண்டு துளைக்காத வாகனங்களின் விலை அதிகமாக இருக்கின்றன. சாதாரண கார்களில் துப்பாக்கி கொண்டு துளைக்காத தொழில்நுட்பம் என்பது இல்லாமல் இருக்கிறது. இப்படியாக சாதாரண காரை துப்பாக்கி கொண்டு தொலைக்காத காராக மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்ற விபரங்களை தான் இங்கே காணப்போகிறோம்.
துப்பாக்கி குண்டு துளைக்காத கார் என்றால் அதில் பல்வேறு விதமான படிநிலைகள் இருக்கிறது0 ஒவ்வொரு படிநிலைக்கும் ஒவ்வொரு விதமான அம்சங்கள் இருக்கிறது. அதன் அம்சங்கள் அதிகமாக அந்த காரை மாடிஃபிகேஷன் செய்யும் விஷயங்களும் அதிகமாகும். இருப்பதிலேயே அதிக பாதுகாப்பு அம்சம் நிறைந்த கார் என்றால் அதிகமாக செலவாகும்.

முதலில்வாகனத்தின் பாடிய அமைப்பு என்பது சாதாரணமாக வழங்கப்பட்டிருக்கும் ஆனால் அந்த பாகங்களை துப்பாக்கி குண்டு துளைக்காத ஸ்டீல் அல்லது அலுமினியம் கொண்டு மாற்ற வேண்டும் இப்படியாக மாற்றும் பட்சத்தில் துப்பாக்கி குண்டுகள் அதில் பட்டாலும் அந்த மெட்டலை கடந்து உள்ளே இருப்பவர்களை பாதிக்காத அளவுக்கு இது மாறும்.
அடுத்ததாக கதவுகள் பக்கவாட்டில் இருந்து தாக்குதல் நடக்கும் போது அதிகமாக கதவு பகுதியில் தான் தாக்குதல் நடக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் கதவு பகுதியும் துப்பாக்கி கொண்டு துளைக்காத அளவுக்கு மாற்ற வேண்டும். பாடி பகுதியை எப்படி மாற்றுகிறோமோ அதே போலவே கதவு பகுதியை மாற்ற வேண்டும். அப்பொழுதுதான் பிரச்சினை ஏற்படாது.

அடுத்து மிக முக்கியமானது காரின் கண்ணாடி பகுதியில் என்னதான் காரின் பாடி கதவு பகுதிகள் எல்லாம் மெட்டல் மூலம் வழங்கப்பட்டிருப்பதால் துப்பாக்கி குண்டுகள் துளைக்க முடியாத மெட்டல்களை பயன்படுத்த முடியும் என்றாலும், கண்ணாடி பகுதியில் வேறு வழி இல்லை. கண்ணாடியாக தான் பயன்படுத்த வேண்டும். இதனால் துப்பாக்கி குண்டு துளைக்காத அளவுக்கு ஸ்டிராங்கான கண்ணாடிகள் மார்க்கெட்டில் இருக்கின்றன. அந்த கண்ணாடிகளை பயன்படுத்தினால் மட்டுமே துப்பாக்கியை குண்டு தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும்.
டயர்களை பொருத்தவரை தற்போது துப்பாக்கி குண்டுகள் துளைத்தால் அதிலுள்ள காற்று வெளியாகி மொத்தமாக பஞ்சராகி போக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் டயர்களை துப்பாக்கி உண்டு துளைத்தாலும் இயங்கும் வகையில் உருவாக்க முடியும். பஞ்சரான டயர்களை வைத்து குறிப்பிட்ட வேகத்தில் குறிப்பிட்ட தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்ட டயர்கள் எல்லாம் மார்கெட்டில் இருக்கின்றன. அந்த டயர்களை வாங்கி பொருத்த வேண்டும்.
இறுதியாக சஸ்பென்ஷன் சிஸ்டத்தையும் மாற்ற வேண்டும். சஸ்பென்ஷன் என்பது காருக்குள் இருக்கும் விஷயம்தானே இதை ஏன் மாற்ற வேண்டும் என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம். இப்படியாக நீங்கள் துப்பாக்கி குண்டு துளைக்காத வகையில் உங்கள் வாகனத்தை மாற்றும்போது வாகனத்தின் எடை பல மடங்கு அதிகமாக வாய்ப்பு இருக்கிறது.
ஏற்கனவே இருக்கும் சஸ்பென்ஷன் சிஸ்டம் கார் உருவாக்கும் போது அதன் எடை எவ்வளவு இருக்கிறதோ அதை அடிப்படையாக வைத்து உருவாக்கி இருப்பார்கள். தற்பொழுது நீங்கள் துப்பாக்கிக் குண்டு துளைக்காத காராக உங்கள் காரை மாற்றினால் அது எவ்வளவு எடை கூடுகிறதோ அதற்கு ஏற்றார் போல் சஸ்பென்ஷன் திட்டத்தை மாற்ற வேண்டும். அப்பொழுதுதான் உங்களுக்கு டிரைவிங் சிறப்பாக இருக்கும் இதற்கும் அதிக தொகை செலவாகும்.
இதற்கான செலவு தொகையை பொருத்தவரை காரின் அளவுகளைப் பொறுத்து இருக்கிறது. பெரிய கார் என்றால் அதிகமாக செலவு தொகை இருக்கும். சிறிய கார் என்றால் கொஞ்சம் குறைவாக இருக்கும். மேலும் நீங்கள் எந்த லெவல் பாதுகாப்பை பொருத்த விரும்புகிறீர்கள் என்பதைப் பொருத்தம் இதன் விலை வித்தியாசம் இருக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை இப்படியாக சாதாரண கார்களை துப்பாக்கி குண்டு துளைக்காத கார்களாக மாற்றுவதற்கு அதிகமாக செலவாகும்.
தற்போது இந்தியாவில் உள்ள மாடிஃபிகேஷன் செலவுகளை வைத்து நாம் ஒரு உத்தேசமாக கணக்கீடு செய்து பார்க்கும்போது சாதாரண கார்களை துப்பாக்கிக் குண்டு துளைக்காத காரர்களாக மாற்ற ரூபாய் 5 லட்சம் முதல் 40 லட்சம் வரை செலவாகிறது. இதுவே சொகுசு கார் அல்லது பெரிய காராக இருந்தால் உங்களுக்கு ரூபாய் 1 கோடி வரை கூட செலவாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன ஓட்டிகள் பலர் இப்படியாக தங்கள் வாகனம் புல்லட் ப்ரூஃப் செய்யப்பட்ட வாகனமாக மாற்ற வேண்டும் என விருப்பம் கொண்டுள்ளார்கள். ஆனால் இது பொருளாதார அளவில் அதிக செலவை ஏற்படுத்தக்கூடிய மாற்றமாகும். பலருக்கும் இதற்கு பின்னால் இருக்கும் செலவு குறித்த விபரங்கள் தெரியவில்லை. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பதிவை உங்களுக்காக வழங்கி உள்ளோம்.


Click it and Unblock the Notifications









