ஒரு பைசா முன்பணம் கொடுக்க வேணாம்! காரை லீஸ்க்கு வாங்குவது லாபமா? சொந்தமாக வாங்குவது லாபமா?

இந்தியாவில் ஒரு புதிய வாகனத்தை பரிசீலிக்கும் நபர்கள், ​​முழுவதுமாக பணம் செலுத்தி வாங்குதல் அல்லது நேரடியாக வாகன தயாரிப்பாளர்களிடம் லீஸ் முறையில் வாகனங்களை எடுப்பது பற்றிய ஆகிய ஆப்ஷன்களில் எதை தேர்வு செய்ய வேண்டும் என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். இரண்டு ஆப்ஷன்களிலும் சில நன்மைகள் மற்றும் சில தீமைகள் உள்ளன, தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் நிதி நிலைமைகளைப் பொறுத்து இதை தேர்வு செய்ய வேண்டும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கார் வாங்குவது ஒரு நபருக்கு நீண்ட கால பலன்களை வழங்குகிறது. மாதாந்திர இஎம்ஐ முடிந்ததும் பணம் முழுமையாக செலுத்திய பிறகு, வாகனத்தை நீங்கள் முழுமையாகச் சொந்தமாக வைத்துக்கொள்ள முடியும். சொந்த கார் உரிமை என்பது நீண்டகாலம் ஒரே காரை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்றது, இது அதிக அளவில் பயணம் செய்பவர்களுக்கு ஏற்றது.

Own Car vs Lease Car

இதற்கு நெகடிவ் பாயிண்ட்களும் உள்ளன, சொந்தமாக ஒரு காரை வாங்குவதற்கு கணிசமான முன்பணம் செலுத்த வேண்டும். இது மட்டுமல்லாமல், வாகனத்தின் மதிப்பு காலப்போக்கில் குறையும், அதன் மறுவிற்பனை மதிப்பும் காலம் செல்ல செல்ல குறைகிறது. பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் செலவுகளும் உரிமையாளரின் பொறுப்பாக இருக்கிறது. இது எல்லாம் செலவை அதிகரிக்கும்.

ஒரு காரை லீஸ் முறையில் வாங்குவது, சொந்தமாக வாங்குவதை விட குறைவான மாதாந்திர செலவுகளை கொண்டதாக உள்ளது. ஒவ்வொரு சில வருடங்களுக்கும் புதிய கார்களை ஓட்ட விரும்புவோருக்கு இந்த ஆப்ஷன் சிறப்பானதாக இருக்கும். லீஸ் முறையில் எடுக்கப்பட்ட கார்கள் வழக்கமாக உத்தரவாதம் கொண்டிருக்கும்., பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு செலவுகளும் கிடையாது.

Own Car vs Lease Car

இருந்தாலும், லீஸ் முறையில் வாகனங்களை வாங்கினால் அதை குறிப்பிட்ட காலம் தான் பயன்படுத்த முடியும் அதை தாண்டி பயன்படுத்தினால் அபராதங்களும் செலுத்த வேண்டிய தேவையும் வருகின்றன. லீஸ் காலத்தின் முடிவில், நீங்கள் காரைத் திருப்ப வாகன தயாரிப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும், அந்த கார் உங்களுக்குச் சொந்தமில்லை. நீண்ட கால உரிமையை நாடுபவர்களுக்கு இது ஒரு பிரச்சனையாக இருக்கலாம்.

கார் வாங்கும் முடிவெடுக்கும் போது, ​​மொத்த செலவைக் கருத்தில் கொள்ளுங்கள். லீஸ் கால செலவு எவ்வளவு மற்றும் இஎம்ஐ மூலம் வாங்கினால் கடன் காலத்தின் மீதான வட்டி உள்ளிட்டவைற்றை கணக்கிடுங்கள். இது போக காப்பீடு, பராமரிப்பு மற்றும் லீஸ் எடுக்கும் போது ஆகும் செலவு போக மற்ற பராமரிப்பு செலவுகள் போன்ற கூடுதல் செலவுகளை கணக்கிட்டு எது லாபம் என முடிவு செய்யுங்கள்.

Own Car vs Lease Car

உங்கள் வாகனம் ஓட்டும் பழக்கம் மற்றும் உங்களின் தேவைகளை கணக்கிடுவதும் நீங்கள் எந்த ஆப்ஷனை தேர்வு செய்யலாம் என்பதற்கு வழிகாட்டும். நீங்கள் தொடர்ந்து நீண்ட காலம் ஒரே வாகனத்தை வாகனத்தை ஒட்ட விரும்பினால், சொந்தமாக வாகனத்தை வாங்குவது மிகவும் சிக்கனமாக இருக்கும். எப்பொழுதும் புது மாடல் கார்களை ஓட்டுவதை விரும்புவோருக்கு, லீஸ் முறை சிறந்த தேர்வாக இருக்கும்.

சொந்தமாக வாங்குதல் மற்றும் லீஸ் ஆகியவற்றிற்கு இடையே முடிவெடுப்பது உங்கள் தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் நிதி நிலைமைகளைப் பொறுத்தது. அனைத்து தகவல்களையும் அறிந்து முடிவை எடுக்க வேண்டும். உங்கள் தேவைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் பட்ஜெட்டை மதிப்பீடு செய்யவும். இரண்டு ஆப்ஷன்களும் தனித்துவத்தை கொண்டுள்ளன, மேலும் சரியான ஆப்ஷன் என்பது ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

லீஸ் முறையில் வாகனம் வாங்குவது அனைத்து ஊர்களிலும் சாத்தியமில்லை, குறிப்பிட்ட சில ஊர்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த ஆப்ஷனை வாகன தயாரிப்பு நிறுனங்கள் வழங்கி வருகின்றன. மற்ற ஊர்களில் வசிப்பவர்களுக்கு சொந்தமாக வாகனம் வாங்குவதை தவிற தற்போது வேறு வழியில்லை!

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது லீஸ் முறை மெல்ல மெல்ல பிரபலமாகி வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் இது பணம் வீணாகும் விஷயம் என பலர் கருதி வருகிறார்கள். ஆனால் அதிகமாக கார்களை புதிதாக மாற்றும் பழக்கம் கொண்டவர்களுக்கு இது லாபமான முறையாக இருக்கும். கார் என்றால் சொந்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மறந்து லீஸ் முறையை மக்கள் யோசிக்க துவங்க வேண்டிய காலம் இது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 12, 2024, 16:01 [IST]
English summary
In India, deciding whether to buy or lease a car involves weighing the advantages and disadvantages of each option. Factors like financial situation, driving habits, and preferences play a critical role in this decision.
மேலும்... #auto tips #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X