வாகனங்களை தண்ணீர் இல்லாமல் கழுவ முடியுமா! அல்லது சிக்கனமாக தண்ணீரை கொண்டு காரை கழுவுவது எப்படி? இதோ சில டிப்ஸ்

உப்பு நீரைக் கொண்டு காரை சுத்தம் செய்யும்போது சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது, உப்பினால் ஏற்படும் அரிப்பு மற்றும் உப்பு திட்டு போன்றவற்றால் கார் பாதிப்படையக் கூடும். இந்த மாதிரியான சூழலில் இருந்து தப்பிக்க வேறு வழியே இல்லையா என்கிற உங்களுக்கு எழும்பலாம். இதற்கான பதிலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். மிக முக்கியமாக தண்ணீர் இல்லாமல் அல்லது மிக மிக குறைவான அளவு தண்ணீரில் காரை கழுவுவது எப்படி என்பதற்கான பதிலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

தண்ணீர் இல்லாமல் காரை சுத்தம் செய்வது சாத்தியமா? சாத்தியம்தான். அதனை ஃபோம் வாஷ் என்றழைப்பர். சந்தையில் ஃபோம் வாஷ் மிக தாராளமாக விற்பனைக்குக் கிடைக்கின்றது. சில முன்னணி பிராண்டுகள் தண்ணீர் பற்றாக்குறை காலங்களில் இதை பயன்படுத்தியே வாகனங்களை சுத்தம் செய்கின்றன. இதனால் பெருமளவில் தண்ணீர் சிக்கனம் செய்யப்படுகின்றது.

Washing car

அதேவேளையில் வாகனமும் நல்ல நிலைக்கு சுத்தமாக்கப்படும். குறிப்பாக, தண்ணீரில் வைத்து சுத்தம் செய்ததை போல புது பொலிவுடன் காட்சியளிக்கச் செய்யும். இதனால்தான் ஒரு சிலர் தேடி சென்று ஃபோம் வாஷ் செய்கின்றனர். ஆனால், கொஞ்சம் இதற்கு செலவு அதிகம் என்பது இங்கு கவனிக்கத்தகுந்தது.

அதேவேளையில், கேக் துண்டின்மீது இருக்கும் கிரீமை போல உங்கள் கார் மீது சேறும், சகதியும் நிரம்பி காணப்படும் எனில், கட்டாயம் கொஞ்சமாவது தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இல்லை எனில் உங்கள் காரை அது பதம் பார்க்க செய்துவிடும். குறிப்பாக, சகதி இறுக்கமான நிலைக்கு மாறும் போது மிகப் பெரிய ஸ்கிராட்ச்களை ஏற்படுத்திவிடும்.

Car washing

எனவே இந்த மாதிரியான வேலையில் குறைவான தண்ணீரை அதிக பிரஷ்ஷரை வழங்கும் மெஷினைக் கொண்டு முழுமையாக காய்ந்த மண் மற்றும் தூசியை அகற்றுவது நல்லது. அதேநேரத்தில் சந்தையில் வேக்ஸ் கலந்த கார் வாஷ்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்த வகை வாஷ் உங்களின் காருக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும்.

பொதுவாகவே வேக்ஸ் ஓர் பாதுகாப்பு லேயரைப் போல் செயல்படும். இதைக் கொண்ட வாஷிங் கெமிக்கலும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இது உங்கள் நேரத்தை பெரிய அளவில் மிச்சப்படுத்தும். மேலும் காரின் தரம் மற்றும் புதிய தன்மையையும் பாதுகாக்க உதவியாக இருக்கும். இதுமட்டுமல்ல சந்தையில் தற்போது யுவி பாதுகாப்பு வசதிக் கொண்ட தண்ணீரின்றி கழுவுவதற்கான லோஷன்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

Can vehicles be washed without water

இதை பயன்படுத்துவதனால் வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் புதுப்பொலிவு இழப்பை நம்மால் பாதுகாக்க முடியும். இதுதவிர, தற்போது சந்தையில் இயற்கைக்கு எந்தவொரு பாதிப்பும் விளைவிக்காத கார் வாஷ் லோஷன்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றை பயன்படுத்துவது மட்டும் முக்கியமல்ல, ஃபைபர் துணியைப் பயன்படுத்துவதும் மிக மிக முக்கியமானதாகும்.

இது தேவையற்ற சிராய்ப்புகளைத் தவிர்க்க உதவியாக இருக்கும். இதை வாட்டர் வாஷ் நிலையங்களில் மட்டுமே செய்ய முடியும் என்றில்லை, வீட்டிலேயே வைத்து நம்மால் செய்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கு தண்ணீர் கொஞ்சமாகவும், கூடவே சிறிதளவு தண்ணீர் இல்லாமல் வாஷ் செய்வதற்கான லோஷனையும் சேர்த்து மிக்ஸ் செய்துக் கொள்ள வேண்டும்.

இதனை ஓர் ஸ்பிரே பாட்டிலில் எடுத்துக் கொள்வது நல்லது. மேலும், அதனை காரின் மேற்பரப்பில் அழுக்கு அதிகமாக உள்ள மற்றும் காய்ந்த கரைகள் இருக்கும் இடத்தில் ஸ்பிரே செய்ய வேண்டும். மேலும், சிறிது நேரம் ஊர விட வேண்டும். இவ்வாறு செய்வதனால் காய்ந்த கரை எளிதாகி விரைவில் வெளியேற தொடங்கும். ஒன்றிற்கு இரண்டு முறை செய்வதன் வாயிலாக காரை மேலும் பளபளப்பாக்கிவிட முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தண்ணீர் இல்லாமல் கார் மற்றும் பைக்கை கழுவுவதன் வாயிலாக சுமார் 250 லிட்டர் முதல் 300 லிட்டர் வரையில் தண்ணீரை மிச்சப்படுத்த முடியும். நம்முடைய ஒரு வாகனத்திற்கே இத்தனை லிட்டர் தண்ணீரை மிச்சப்படுத்த முடியும் நாட்டில் உள்ள அனைத்து வாகனங்களையும் தண்ணீர் இல்லாமல் அல்லது மிக மிக குறைவாக வைத்து சுத்தம் செய்தால் பல லட்சக் கணக்கான லிட்டர் தண்ணீரை மிச்சப்படுத்திக் கொள்ள முடியும்.

More from DriveSpark

Article Published On: Sunday, March 10, 2024, 5:00 [IST]
English summary
Can vehicles be washed without water here is pro tips
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X